Published:Updated:

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!

'கண் நோய் என்று வருபவர்களில் 60 சதவிகிதம் பேருக்கு, கண் புரைதான் பிரச்னை. கண்ணில் உள்ள லென்ஸ் வழியாக ஒளி உள்ளே சென்று விழித்திரையில் படுகிறது. இதன் மூலம் நாம் எந்த ஒரு பொருளையும் பார்க்க முடியும். இந்த லென்ஸ் பகுதியில்தான் 'புரை’ ஏற்பட்டு, பார்வைக் குறைபாடு தோன்றுகிறது. வயது அதிகரிக்கும்போது, தலைமுடி நரைப்பதுபோல, வயதாக ஆக ஏற்படும் பிரச்னைதான் கண் புரை. இருப்பினும், பிறந்த குழந்தைக்குக்கூட, கண் புரை பிரச்னை தோன்றலாம். மூட்டு வலி, முதுகு வலிக்காக, 'ஸ்டீராய்டு’ மருந்துகளை எடுத்துக்கொள்வது, விபத்து, கண் அழுத்த நோய் ஆகியவை, 'கண் புரை’ தோன்ற முக்கியக் காரணங்கள். நவீன மருத்துவத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக, பத்தே நிமிடங்களில் கண் புரை அறுவைசிகிச்சை முடிந்து வீடு திரும்பலாம்' என்று நம்பிக்கை வார்க்கிறார் கண் நல மருத்துவர் திரிவேணி வெங்கடேஷ்.

நலம், நலம் அறிய ஆவல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

'குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாட்டைக் கண்டறிய முடியாமல் பிற்காலத்தில் அவதிப்படும் பெற்றோர்கள் அதிகம். பள்ளியில் கரும்பலகையைப் பார்க்கக் கஷ்டப்பட்டாலோ, வீட்டில் டி.வி. பார்க்கும்போது கண்ணைச் சுருக்கி முன்னால் சென்று பார்த்தாலோ, கண் நல மருத்துவரிடம் குழந்தையை அழைத்துச்செல்ல வேண்டும். பிரச்னையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிப்படுத்த வேண்டும். குழந்தையின் கண் வளர்ச்சி, 18 வயது வரை இருக்கும். இதற்குள்ளாக பிரச்னையைக் கண்டறிந்து சரிசெய்யாவிடில், பிற்காலத்தில் எந்தச் சிகிச்சையும் பலனளிக்காமல் போய்விடும்' என்றும் எச்சரிக்கிறார் டாக்டர்.

'தூரப் பார்வை பார்க்கும்போது, கண் ஓய்வாக இருக்கும். அதுவே, கிட்டப்பார்வை என்றால், கண்ணின் தசைகளுக்கு அதிகப்படியான வேலை. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்துக்கும் மேலாக கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து தொடர்ந்து வேலைபார்ப்பதால், கண் தசைகள் வேலை வாங்கப்பட்டு சோர்ந்துவிடும். இதனால் கண்ணில் எரிச்சல், நீர் வடிதல், சிவந்துபோதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க 20-20-20 முறை எளிய தீர்வு அளிக்கும். அதாவது, 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 அடி தூரத்தில் உள்ள பொருளை, 20 முறை கண் சிமிட்டிப் பார்க்க வேண்டும். இதனால் கண்ணுக்கு ஓய்வு கிடைக்கிறது, கருவிழிக்கு ஆக்சிஜனும் செல்கிறது. மேலும், கம்ப்யூட்டர் திரையைப் பார்வைக்குக் கீழ் இருக்கும்படி வைப்பது, கம்ப்யூட்டர் திரை, அதைச் சுற்றியுள்ள பகுதி பிரகாசமாக இல்லாமல் பார்த்துக்கொள்வதுபோன்ற எளிய முறைகள் மூலம் கண்ணைப் பாதுகாக்கலாம்'' என்கிறார் டாக்டர்.

- பா.பிரவீன் குமார்,

படம்: ஜெ.வேங்கடராஜ்.

நலம், நலம் அறிய ஆவல்!