Published:Updated:

கொரோனா: உலகம் முழுக்க தடுப்பூசி விநியோகம் செய்ய 8,000 விமானங்கள் தேவைப்படுமாம்!

போயிங்

கோவிட்-19 தடுப்பூசி கண்டறியப்பட்டு, பொதுமக்கள் விநியோகத்துக்கான அனுமதி கிடைத்ததும் அனைத்து நாட்டு அரசுகளும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கவனத்துடன் திட்டமிட வேண்டும் என்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா: உலகம் முழுக்க தடுப்பூசி விநியோகம் செய்ய 8,000 விமானங்கள் தேவைப்படுமாம்!

கோவிட்-19 தடுப்பூசி கண்டறியப்பட்டு, பொதுமக்கள் விநியோகத்துக்கான அனுமதி கிடைத்ததும் அனைத்து நாட்டு அரசுகளும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கவனத்துடன் திட்டமிட வேண்டும் என்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

Published:Updated:
போயிங்

கோவிட்-19 தொற்றுநோய்க்கான தடுப்பூசி கண்டறியும் பணிகள் உலக நாடுகளில் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ரஷ்யா ஒரு கட்டம் நகர்ந்து அதன் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அந்நாட்டு மக்களின் பயன்பாட்டுக்காக வழங்கிவிட்டது. இதற்கிடையில் மிகவும் நம்பிக்கையான ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி சோதனையில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

vaccine
vaccine

ஒருவேளை தடுப்பூசி கண்டறியப்பட்டுவிட்டால் அதை உலக நாடுகளுக்கு விமானத்தின் மூலம் விநியோகிப்பது பற்றிய கணக்கீட்டை சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (IATA) வெளியிட்டுள்ளது. தடுப்பூசி இதுவரை பயன்பாட்டுக்கு வராத சூழலிலும் விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள், சர்வதேச சுகாதார அமைப்புகள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு தடுப்பூசியை விமானத்தில் கொண்டு செல்வது தொடர்பான திட்டங்களைத் தீட்டி வருகிறது சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுபற்றி பேசியுள்ள சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி அலெக்ஸாண்ட்ரி டி ஜூனியாக், ``தடுப்பூசிகளைப் பாதுகாப்பாக உலக நாடுகளுக்குக் கொண்டு சேர்ப்பது என்பது இந்த நூற்றாண்டில் சர்வதேச விமான சரக்குப் போக்குவரத்துத் துறை சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். காரணம், தடுப்பூசிகளை அனைத்து வகை விமானங்களிலும் கொண்டு செல்ல முடியாது.

File photo shows a patient receiving a flu vaccination in Mesquite, Texas.
File photo shows a patient receiving a flu vaccination in Mesquite, Texas.
LM Otero

வெப்பநிலை 2 முதல் 8 செல்சியஸாகப் பராமரிக்கும் வகையான விமானங்களின் மூலம் மட்டுமே தடுப்பூசிகளைக் கொண்டு செல்ல முடியும். சில தடுப்பூசிகளுக்கு உறையும் வெப்பநிலைகூட தேவைப்படலாம். இந்த நிலை ஏற்பட்டால் தடுப்பூசியைக் கொண்டு செல்லும் விமானங்களின் எண்ணிக்கை மேலும் குறையக்கூடும். சங்கத்தின் கணக்கீட்டின்படி, உலகம் முழுவதும் தடுப்பூசி விநியோகிப்பதற்கு போயிங் 747 வகையைப் போன்ற பெரிய அளவு ஜம்போஜெட் விமானங்கள் 8,000 தேவைப்படுமாம்.

ஆப்பிரிக்காவுக்கு முடியாது!

தென் கிழக்கு ஆசியா உள்ளிட்ட சேமிப்பு வசதிகளும் தடுப்பூசி உற்பத்தித் திறனும் இல்லாத நாடுகளுக்கு தடுப்பூசியைக் கொண்டு செல்வதிலும் சிரமம் ஏற்படும் என்று விமான நிறுவனங்கள் கணித்துள்ளன. குறிப்பாக, ஆப்பிரிக்க நாட்டுக்குத் தடுப்பூசியை விநியோகிப்பது தற்போது இயலாத காரியம்.

அந்நாட்டில் சரக்குப் போக்குவரத்துத்திறன் குறைவாகக் காணப்படுவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பரப்பளவு அதிகம் என்பதாலும், பல நாட்டு எல்லைகளைக் கடந்து ஆப்பிரிக்காவை அடைவதில் சிரமங்கள் ஏற்படும் என்பதாலும் அங்கு தடுப்பூசியை விநியோகிக்க முடியாது என்று சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

transport
transport

பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி என்பது மிகவும் மதிப்புமிக்க பொருளாகப் பார்க்கப்படுகிறது. அதனால் பாதுகாப்பான போக்குவரத்தோடு மட்டுமல்லாமல் திருட்டு, கடத்தல் போன்றவை நடைபெறாமல் தடுக்க வேண்டியதற்கான ஏற்பாடுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி போக்குவரத்தானது கிட்டத்தட்ட ராணுவ கட்டுக்கோப்போடு நடைபெற வேண்டும். எனவே, கோவிட்-19 தடுப்பூசி கண்டறியப்பட்டு, பொதுமக்கள் விநியோகத்துக்கான அனுமதி கிடைத்ததும் அனைத்து நாட்டு அரசுகளும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கவனத்துடன் திட்டமிட வேண்டும் என்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் அறிவுறுத்தியுள்ளது.