Published:Updated:

இதயநோய்க்கு நல்லதா ஸ்டேடின் மாத்திரை?

இதயநோய்க்கு நல்லதா ஸ்டேடின் மாத்திரை?

இதயநோய்க்கு நல்லதா ஸ்டேடின் மாத்திரை?

இதயநோய்க்கு நல்லதா ஸ்டேடின் மாத்திரை?

Published:Updated:

பி.சிவராமன், கோயம்புத்தூர்.

'எனக்கு 45 வயதாகிறது. என் அப்பாவுக்கு மாரடைப்பு வந்து, பைபாஸ் அறுவைசிகிச்சை செய்தோம். இதயநோய் பரம்பரையாக வரும் என்று கேள்விப்பட்டுள்ளேன். எனக்கும் மாரடைப்பு வருமோ என்ற பயம் உள்ளது. உடற்பயிற்சிகள், உணவுக்கட்டுப்பாடு இரண்டையும் பின்பற்றுகிறேன். 'ஸ்டேடின்’ மாத்திரை எடுத்துக்கொள்வது இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும் என்று படித்திருக்கிறேன். இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாமா?'

இதயநோய்க்கு நல்லதா ஸ்டேடின் மாத்திரை?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர் அருணாச்சலம், இதயநோய் சிகிச்சை நிபுணர், திருநெல்வேலி.

இதயநோய்க்கு நல்லதா ஸ்டேடின் மாத்திரை?

'இதய நோய் பரம்பரையாக வரும் நோய் என்பது உண்மை. குடும்பத்தில் யாருக்காவது இதய நோய் பிரச்னை இருக்குமானால், அவர்களின் வாரிசுகளுக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகம். அதிலும், ஆண் 55 வயதுக்குக் குறைவாகவும், பெண் 65 வயதுக்குக் குறைவாகவும் இருந்து, அவர்களுக்கு பைபாஸ் சர்ஜரி செய்து கொள்ளும் நிலைமை வந்திருக்குமானால் அவர்களின் வாரிசுகளுக்கும் அதற்கான வாய்ப்பு உருவாகலாம். ஆனால், உங்கள் தந்தைக்கு, இதய நோய் வந்திருப்பதை மட்டும் வைத்துக்கொண்டு, உங்களுக்கும் வரும் என்று கூற முடியாது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், புகைப்பழக்கம், எந்த உடல் உழைப்பும் இல்லாமல் இருப்பது, உடல் பருமன், பாரம்பரியத்தன்மை ஆகிய ஆறு காரணிகள் இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. இவற்றில், ஏதாவது இரண்டு காரணிகள் உங்களுக்கு இருக்குமானால், உடனடியாக டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

உங்கள் தந்தைக்கு இதய அறுவைசிகிச்சை செய்ததைத் தவிர, வேறு இதய நோய்க்கான காரணிகள் பொருந்திப்போகிறதா என்பது தெரியவில்லை. எனவே, முதலில் பரிசோதனைசெய்து, வேறு காரணிகளும் பொருந்திப்போனால் மட்டுமே, ஸ்டேடின் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்பு இருந்தால், ஸ்டேடின் எடுத்துக்கொள்வது மிகச் சிறந்த தடுப்பு மருத்துவம். இதில் பக்க விளைவு என்பது உடல் அசதியாக இருக்குமே தவிர, வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. எனவே, முதலில் பரிசோதித்துக்கொள்ளுங்கள். டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே ஸ்டேடின் எடுத்துக்கொள்ள வேண்டும்.'

பெயர் வெளியிட விரும்பாத வாசகி, திருச்சி.

'நான் தற்போது ஐந்து மாத கர்ப்பமாக உள்ளேன். எனக்கு இது முதல் பிரசவம். கணவர் வீட்டில்தான் இருக்கிறேன். தாம்பத்திய உறவுக்கு அவர் என்னை வற்புறுத்துகிறார். தாம்பத்திய உறவு மேற்கொள்வதன் மூலம் சுகப் பிரசவத்துக்கு வாய்ப்பு அதிகம் என்கிறார். இது உண்மையா?'

இதயநோய்க்கு நல்லதா ஸ்டேடின் மாத்திரை?

பேராசிரியர் கௌரி துரைராஜன், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர், புதுச்சேரி.

இதயநோய்க்கு நல்லதா ஸ்டேடின் மாத்திரை?

'இந்தச் சந்தேகம் பல தம்பதியருக்கு உண்டு. ஆனால், மருத்துவரிடம் கேட்பதற்குத்தான் கூச்சப்படுகின்றனர். உங்களுடைய குடும்ப மருத்துவரிடமோ அல்லது உங்களுக்குப் பரிசோதனை செய்யும் மருத்துவரிடமோ உங்களது சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. பெண் கருவுற்று இருக்கும்போது தாம்பத்திய உறவுகொள்வது, எந்த வகையிலும் கருவைப் பாதிக்காது. ஆனால், சில எச்சரிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. உங்கள் கர்ப்பப்பையில் நஞ்சு மிகவும் கீழ் இறங்கி உள்ளதாக மருத்துவச் சோதனையில் தெரிந்திருந்தாலோ, கர்ப்பக்காலத்தில் (தற்போது) உதிரப்போக்கு அல்லது பனிக்குட நீர்க் கசிவு அல்லது இந்தக் கர்ப்பத்துக்கு முன்பு கர்ப்பக் கலைப்போ, குறை மாதத்தில் பிரசவ வலி ஏற்படும் அபாயம் இருந்தாலோ தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. இந்தப் பிரச்னைகள் இல்லாதவர்கள், தாராளமாக தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாம்.

கருவைச் சுமக்கும் பெண்ணை வற்புறுத்தி, பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல் தாம்பத்திய உறவு மேற்கொள்வது, அப்பெண்ணை மட்டுமல்லாமல், வயிற்றில் இருக்கும் கருவையும் அது பாதிக்கும். கர்ப்பக்காலத்தில் உங்கள் அழகு, கணவனை மேலும் வசீகரிக்கும் ஒரு விஷயமாகும். அதனால் வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டு 'தாம்பத்தியம்’ வேண்டவே வேண்டாம் என்று விலகி விடாதீர்கள். தாம்பத்திய உறவு மேற்கொள்வதன் மூலம் உங்களுக்கும், கணவருக்குமான நெருக்கம் அதிகரிக்கும். மேலும், கர்ப்பக் காலத்தில் தாம்பத்திய உறவு மேற்கொள்ளுதல் மூலம் சுகப் பிரசவத்துக்கான வாய்ப்புகளும் அதிகம்.'

உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:

கன்சல்டிங் ரூம்,

டாக்டர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை-600002.

doctor@vikatan.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism