Published:Updated:

உணவும் உணர்வும்!

உணவும் உணர்வும்!

உணவும் உணர்வும்!

உணவும் உணர்வும்!

Published:Updated:

''உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சந்தோஷமோ, துக்கமோ,  கோபமோ... எந்த உணர்வையும் சாப்பாட்டில்தான் முதலில் காட்டுவோம். அந்த அளவுக்கு நம் உணர்வுகளோடு பின்னிப்பிணைந்திருக்கும் உணவுப்பழக்கத்தைவிட்டு, எங்கோ சென்றுகொண்டிருக்கிறோம்' என்கிறார் ஊட்டச் சத்து மற்றும் வாழ்க்கைமுறை நிர்வாக நிபுணர் கௌசல்யா நாதன். 

உணவும் உணர்வும்!
உணவும் உணர்வும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''உணர்வுக்கும் உணவுக்கும் உள்ள சம்பந்தம் ஒரு குழந்தை பிறந்தது முதல் தொடங்குகிறது. குழந்தை  அழும்போது, அந்த அழுகைச் சத்தம் கேட்டுத்தான் அன்னைக்குப் பாலே சுரக்கிறது.

அம்மா கையால் ஊட்டும்போது, சாதம் சுடுகிறதா என்று பார்த்துப் பிசைந்து தருவாள். குழந்தை எவ்வளவு சாப்பிட்டது என்ற அளவும் தெரியும். குடும்பத்தில் பிள்ளைகளுக்குப் பிடித்தது, கணவனுக்குப் பிடித்தது என்று பார்த்துப் பார்த்துச் செய்வதுதான் தாய்மை உணர்வின் வெளிப்பாடு. இதைத்தான், 'என் அம்மா செய்யற மாதிரி வருமா?’ என்பார்கள் பிள்ளைகள்.

வேதனையின்போது, சாப்பாட்டை தவிர்ப்பதும், வாழ்த்துகளைப் பரிமாறும்போது, 'பார்ட்டி’ என உணவே பிரதானமாகவும் இருக்கிறது.  இப்படி மனசுக்கும் வயிற்றுக்குமான உறவு, மிகவும் நெருக்கமானது. ஆனால், இன்றைய உணவுப் பழக்கத்தில், உணர்வும் உடைந்து போய்விட்டது'' என்கிறார் கௌசல்யா நாதன்.

##~##

''பெண்களும் வேலைக்குப் போக ஆரம்பித்ததுமே, இந்த உணவுப்பிணைப்பு மெள்ள மெள்ள அறுந்துபோய்விட்டது. சமைக்கப்படும் உணவு, பரிமாறும் கலாச்சாரம் இல்லாதது, சமைப்பதும் குறைந்து, வெளியில் வாங்கிச் சாப்பிடுவது என மாறிவரும் வாழ்க்கை முறையால், நோய்களைப் பெருக்கிக் கொண்டிருக்கிறோம்.  

எல்லா ஆண்களுமே தன் அம்மாவோ, மனைவியோ தமக்கு உணவு பரிமாறுவதைத்தான் விரும்புவார்கள். உணவு பரிமாறும் போது, கரண்டி வழியே பாசமும், அன்பும் சேர்ந்து பரிமாறப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மூன்று வேளைகளும் ஒழுங்கான முறையில் சத்தான சாப்பாடு சாப்பிடும்போது, தெளிவும் நேர்மறை எண்ணங்களும் நிறைய இருக்கும். வயிறு நிரம்பினால் தன்னால் மனசும் நிரம்பும்'' என்கிறார் கௌசல்யா நாதன்.

- மித்ரா

படம்: செ.நாகராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism