Published:Updated:

சிறப்புக் குழந்தைகளுக்கு சிறப்பான உணவு!

சிறப்புக் குழந்தைகளுக்கு சிறப்பான உணவு!

சிறப்புக் குழந்தைகளுக்கு சிறப்பான உணவு!

சிறப்புக் குழந்தைகளுக்கு சிறப்பான உணவு!

Published:Updated:
##~##

அம்மா தரும் உணவு அமிர்தம். ஆனால் அதிலும் சிலருக்கு விதிவிலக்கு உண்டு என்பதை ஜீரணிப்பது கடினமான விஷயம். இயல்பான குழந்தைக்குக் கொடுக்கும் உணவை, மூளை மற்றும் நரம்பியல் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைக்குத் தர முடியாது என்பது மருத்துவ உண்மை. ''குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பியல் பிரச்னைகளுள் முக்கியமானவை செரிப்ரல் பால்சி, எபிலெப்சி மற்றும் மஸ்குலர் டிஸ்ட்ரோபி ஆகியவை. இந்தக் குறைபாடுகளுக்கு ஏற்ற நுட்பமான தீர்வுகளில் முதன்மையானது, அந்தக் குழந்தைக்குக் கொடுக்கப்படும் உணவுதான்' என்கிறார், குழந்தைகள் நரம்பியல் நிபுணர் டாக்டர் விஸ்வநாதன். இதுபற்றி அவர் விரிவாகப் பேசினார். 

'குழந்தை பிறந்தது முதல், வயதுக்கேற்ற வளர்ச்சியும் செயல்பாடுகளும் இல்லை என்றால் அக்குழந்தை, செரிப்ரல் பால்சி நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று மருத்துவரிடம் காண்பித்து உறுதி செய்து கொள்ளவேண்டும்.  இந்த நோயை ஆரம்பத்தில் கண்டுபிடித்தால், உணவு முறை மற்றும் தகுந்த பயிற்சி முறைகளால், அந்தக் குழந்தைகளின் செயல்பாட்டில் முன்னேற்றங்களைக் காணலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறப்புக் குழந்தைகளுக்கு சிறப்பான உணவு!
சிறப்புக் குழந்தைகளுக்கு சிறப்பான உணவு!

செரிப்ரல் பால்சி குழந்தைகளுக்கு சாப்பாட்டில் சுத்தமாகக் கவனம் இருக்காது. மூளை பாதிப்படைந்து இருப்பதால் உணவு உட்கொள்ளத் தெரியாது. தவிரவும் உணவை ஊட்டினாலும் சரிவர சாப்பிடத் தெரியாது. அப்படியே போராடி ஊட்டினாலும் உடனே வாந்தி எடுத்துவிடுவார்கள். இதனால் அந்தக் குழந்தைக்கு உடலில் போதிய சத்துக்கள் கிடைக்காமல் போகும்.  அதனால் உடல் வளர்ச்சியும், அதற்கேற்ப மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படும். செரிப்ரல் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு நாக்கு தடித்திருப்பதால் அவர்களால் உணவை மென்று சாப்பிட முடியாது. இந்தக் குழந்தைகளுக்கு, 'டியூப்’ மூலமாக திரவ உணவு கொடுக்கலாம். கஞ்சி போன்ற கெட்டியான திரவங்களைத் தர கூடாது.  ஏனெனில், உணவுக் குழாயில் அடைத்துக் கொள்ளலாம்.

வலிப்பு நோய் பாதிப்பில் சில குறிப்பிட்ட வகைகளில், குழந்தைகள் எதைச் சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்று உணவுச் சத்து நிபுணரையும் நரம்பியல் மருத்துவரையும் கலந்து ஆலோசித்த பின்னரே கொடுக்க வேண்டும். இவர்களுக்கு விலங்குகளிடமிருந்து பெறப்படும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும், முட்டை, இறைச்சி போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

அதிகமான மாவுச் சத்தும் சேர்க்கக் கூடாது. கொழுப்புச்சத்து அதிகமான உணவுகளை ஒவ்வொரு குழந்தையின் பிரச்னைக்கு ஏற்றவாறு வடிவமைத்துத் தரவேண்டும்.

'மஸ்குலர் டிஸ் ஆர்டர்’ என்னும் தசை நோய் தாக்கிய குழந்தைகளால், 10 வயதுக்கு மேல் நடக்க

சிறப்புக் குழந்தைகளுக்கு சிறப்பான உணவு!

முடியாது. இதனால், செயல்பாடுகள் குறைந்து உடல் எடை அதிகரித்து விடும். அந்தக் குழந்தைகள் திருப்தியாகவும் சாப்பிட வேண்டும். அதே சமயம் உடல் எடையும் அதிகரித்துவிடக்கூடாது.

சில சமயம் கால்சியம் சத்துக் குறைபாட்டால், 'மல்டிபிள் ஃப்ராக்சர்’கூட ஏற்படலாம். கால்சியம் குறைபாட்டை டயட்டில் சரி செய்துவிடலாம். இவர்களை தினமும் அரை மணி நேரம் வெயிலில் உட்கார வைக்க வேண்டும்.

உணவுப் பயிற்சி:

சிறப்புக் குழந்தைகளுக்கு சிறப்பான உணவு!

 குழந்தைகளுக்கு நாக்கு செயல்பாடு மற்றும் சுழற்சி மேம்பாடு, உணவை எப்படி விழுங்குவது போன்ற பயிற்சிகள் தரப்படுகின்றன.  

சிறப்புக் குழந்தைகளுக்கு சிறப்பான உணவு!

  உணவுச்சத்து நிபுணர் சொல்லும் உணவு வகைகளை வீட்டில்  செய்யும் பயிற்சியை மேற்கொண்டு பொறுமையாகச் செய்யவேண்டும்.

சிறப்புக் குழந்தைகளுக்கு சிறப்பான உணவு!

 உணவுப் பழக்கம் சீரானால் அந்தக் குழந்தையின் வாழ்க்கைத் தரம் மேம்படும். முக்கியமாக இரவில் குழந்தைகள் நன்றாகத் தூங்கும்.  

சிறப்புக் குழந்தைகளுக்கு சிறப்பான உணவு!

  குழந்தையின் உடல் பாதிப்புக்கு ஏற்ப, தேவையான சத்துக்கள் இருக்கும்படியாகப் பார்த்துத் தரவேண்டும். சில தவிர்க்கப்பட வேண்டிய சத்துக்கள் இருந்தாலும், அத்தகைய உணவை அறவே தவிர்த்துவிடுவது நல்லது.

சிறப்புக் குழந்தைகளுக்கு சிறப்பான உணவு!

 எவ்வளவு சீக்கிரம் சிறப்பு உணவுப் பழக்கம் ஆரம்பிக்கப்படுகிறதோ பலனும் அதற்கேற்ப இருக்கும்.

- உமா ஷக்தி

படங்கள்: ஜெ.வெங்கடராஜ்

 'கீட்டோஜெனிக்’ டயட்!

'எபிலெப்சி’ என்னும் வலிப்பு நோய் தாக்கிய குழந்தைகள் புத்துணர்வு பெற வடிவமைக்கப்பட்டதுதான் 'கீட்டோஜெனிக் டயட்’ எனப்படும் பிரத்யேக உணவு முறை. ஒவ்வொரு குழந்தையின் நோயின் தன்மைக்கு ஏற்ப டயட்டீஷியன் வடிவமைக்கும் டயட் சார்ட் பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த டயட் உணவைச் சாப்பிடும் குழந்தைகளுக்கு மந்தம் நீங்கி, சுறுசுறுப்புடன் இருப்பார்கள், தவிர, வலிப்பும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஆனால், கீட்டோஜெனிக் டயட்டைக் கடைப்பிடிப்பது அத்தனை சுலபம் அல்ல. இந்த டயட்டைக் கொடுக்கும்போது, குழந்தையைத் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கவேண்டியது அவசியம்.

இந்த டயட்டில் கொழுப்புச் சத்து இருக்கும். ஆனால் அதே சமயம் உடல் எடை அதிகரித்துவிடக் கூடாது. டயட்டீஷியன் சொல்லும் மாற்றங்களை முறையாகக் கடைபிடிக்க வேண்டும். ஆறு மாதங்களில் குழந்தையின் செயல்பாட்டில் நல்ல மாற்றம் தெரியும்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism