Published:Updated:

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!

Published:Updated:
நலம், நலம் அறிய ஆவல்!
##~##

'நாம் சாப்பிடும் உணவுப் பழக்கவழக்கத்தால் மட்டுமே பற்சிதைவு ஏற்படுகிறது. அந்தக் காலத்தில் சாதம், கூட்டு, பொரியல், அவியல் என்று இலையில் எல்லாப் பதார்த்தங்களும் கட்டாயம் இருக்கும். ஆனால், இன்றைய வேகமான வாழ்க்கைமுறையில் இவற்றையெல்லாம் செய்து சாப்பிட நேரம் இல்லை. வெரைட்டி ரைஸ், ஃப்ரைட் ரைஸ் என்று ஏதேனும் ஒன்றைச் செய்து சாப்பிடுகிறோம். அதற்கும் நேரம் இல்லையெனில், பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை நோக்கி ஓடுகிறோம். இதனால் உணவில் நார்ச் சத்து குறைந்து, சர்க்கரை அதிகரிக்கிறது. நார்ச் சத்துள்ள உணவை நன்கு அரைத்து, சுவைத்துச் சாப்பிடும்போதுதான், அது இயற்கை 'பிரஷ்’ஆகச் செயல்பட்டு பல்லுக்கு இடையில் உள்ள சர்க்கரை படிவை அகற்றும். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்போது நாம் அதிக அளவில் சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்கிறோம். இதனால், வாயில் கிருமிகள் ஏற்படும். பற்களின் ஆரோக்கியத்துக்கே, அவை வேட்டு வைத்துவிடும்.  பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, தினமும் இரண்டு முறை பல் துலக்குவது,

நலம், நலம் அறிய ஆவல்!

டென்டல் ஃப்ளாஸிங் பயன்படுத்துவது, சாப்பிட்டதும் வாய் கொப்பளிப்பது மிகவும் அவசியம்'' என்கிற பல் மருத்துவர் எம்.எஸ். ரவிவர்மா,

'பல் சொத்தை வராமல் தடுக்கவும், பல் சொத்தை ஏற்பட்டால் என்ன சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்’ என்பது பற்றியும் விவரிக்கிறார். ''பல்லின் எனாமல் பகுதியில் பல் சொத்தை ஏற்பட்டால், வலி அதிகம் இருக்காது. ஆனால், டென்டின் பகுதிக்குப் பரவும்«பாது பல் கூச்சமும், பல்கூழ் பகுதிக்கு பரவும்போது, தாங்க முடியாத வலியும் ஏற்படும். பல் கூச்சம் ஏற்பட்டதுமே அலட்சியம் காட்டாமல், டாக்டரைப் பார்ப்பதன் மூலம் அந்தப் பல்லைப் பாதுகாக்கலாம்.

என்னதான் சுத்தமாக பல் துலக்கினாலும் பல்லில் 'டார்டார்’ (tartar)எனப்படும் காரை படியும். இது வாயில் உள்ள பாக்டீரியாவின் பெருக்கத்தால் ஏற்படுகிறது. இது பற்களுக்கு இடையிலும் நன்கு பெருகும். பல் மருத்துவரிடம் செல்லும்போது, பல்லைத் தேய்த்து எடுக்காமல், அதிர்வு முறையில் காரையை அகற்றுவார். இப்படி அகற்றும்போது சிலருக்கு, பல்லின் மென்மைத்தன்மை இழந்துவிட்டதுபோலவும், இடைவெளி ஏற்பட்டதுபோலவும் தோன்றும். இவ்வளவு நாள் பல்லின் மேல் படிந்திருந்த கிருமி அகற்றப்பட்டதால் ஏற்பட்ட உணர்வு இவை. பல் வழுவழுவென இருந்தால், அது ஆரோக்கியமானது என்று அர்த்தம் இல்லை.'- பல் ஆரோக்கியம் தொடர்பாக ஏற்படும் பல்வேறு சந்தேகங்களுக்கு                 விளக்கமாகப் பதில் அளிக்கிறார் டாக்டர் எம்.எஸ்.ரவிவர்மா.

- பா.பிரவீன்குமார்,

படம்: ப.சரவணகுமார்

நலம், நலம் அறிய ஆவல்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism