Published:Updated:

உப்பு தப்பா?

டாக்டர் எனக்கொரு டவுட்டு?

##~##

உணவில் முக்கியப் பங்கு வகிக்கும் உப்பு, சுவைக்கானது மட்டும்தானா? உப்பு இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியுமா? உப்பு சேர்ப்பதால் என்னென்ன பிரச்னைகள் வரும்? கோயம்புத்தூரைச் சேர்ந்த வயிறு மற்றும் குடல்நல மருத்துவர் முருகேஷை சந்தித்தோம். 

 'ஒரு நாளைக்கு உப்பின் தேவை எவ்வளவு?'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''உடல் செல்களின் செயல்பாட்டுக்கு உப்பு அவசியம். இவை, நம் உணவின் மூலமே கிடைத்துவிடும். ஒரு டீஸ்பூன் உப்பில் ஏறக்குறைய 2,000 மி.கி சோடியம் இருக்கிறது.  இதுபோக, தற்போது நாம் உண்ணும் நொறுக்குத்தீனிகள் மற்றும் விரைவு உணவுகளில் இருக்கும் அளவுக்கு மீறிய உப்பும் நமது உடலில் சேருகிறது.'

'நம் உடலில் உப்பு போதிய அளவு இல்லாது போனாலோ, அதிகமானாலோ என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?'

உப்பு தப்பா?

'சில நேரங்களில் தேவைக்கும் குறைவாக உப்பை எடுப்பதால், பெரிதாகப் பாதிப்புகள் இருக்காது. ஆனால், சோடியத்தின் அளவு குறையும்போது உடல் சோர்வு, வயிற்றுப்போக்கு, வாந்தி, ரத்த அழுத்தம் குறைதல், சிறுநீரகம் மற்றும் குடல் பாதிப்புகள் ஏற்படலாம். ஒரே நாளில் உப்பின் அளவு அதிகமானாலும், அது வியர்வை, சிறுநீராக வெளியேற்றப்படும். அப்படி வெளியேற்றும்போது, இயற்கையாகவே நமக்கு தாகம் எடுக்கும். உப்பு அதிகம் உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு, அதனால் உடலில் சோடியத்தின் அளவு அதிகமாகும் போது, உதட்டில் வெடிப்பு, சிறுநீரகப் பாதிப்புகள், குடலின் செயல்திறன் குறைதல் போன்றவை ஏற்படும்.''

''உப்பைக் குறைக்க என்ன வழி?''

வீட்டில் சமைக்கும்போது பாதி அளவு உப்பு சேர்த்தால் போதும். புடலங்காய், சுரைக்காய், சௌசௌ போன்ற நாட்டுக்காய்களில் உப்புச்சத்து இருப்பதால் உப்பு சேர்க்காமலேயே சமைக்கலாம். வெளியில் சாப்பிடுவதைக் குறைத்தாலே போதும். உப்பு உடலில் தேவையான அளவுக்கே இருக்கும்.''

'யாரெல்லாம் உப்பைத் தவிர்க்க வேண்டும்?'

'யாருமே தவிர்க்கத் தேவை இல்லை. வயதானவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் உணவிலும் உப்பு அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. அப்பளம், ஊறுகாய், பொரி, சிப்ஸ், கருவாடு போன்றவற்றை அனைவருமே தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது. அன்றாட சமையலில் பயன்படுத்தும் உப்புக்குப் பதிலாக 'பொட்டாசியம் குளோரைடு உப்பு’ சேர்த்த பல உணவுப் பொருட்கள் கடைகளில் கிடைக்கின்றன. இவை இதயத்துக்கு மிகவும் ஆபத்தானவை. பாக்கெட் சிற்றுண்டிகளைத் தவிர்த்தல் நலம்.'

- ஞா.சுதாகர்

படம்: ர.சதானந்த்