Published:Updated:

மூட்டுவலிக்கு முழுமையான தீர்வு!

மூட்டுவலிக்கு முழுமையான தீர்வு!

மூட்டுவலிக்கு முழுமையான தீர்வு!
##~##

'மூன்றில் ஒருவர் மூட்டுவலி காரணமாக மருத்துவமனைக்கு வருகிறார். வயது அதிகரிப்பு, காயம், சவ்வு கிழிதல், உடலில் அதிக அளவில் யூரிக் அமிலம் உற்பத்தியாவது, வாதநோய் போன்ற பல காரணங்களால் மூட்டுவலி ஏற்படுகிறது. மேலும், அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு மூட்டுவலி ஏற்படுகிறது. இவர்களுக்கு மூட்டு நன்றாக இருக்கும். ஆனால், உடல் உழைப்பு, உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் மூட்டு தசை இறுகிவிடும். இதனால், உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாது, மாடிப்படிகளில் ஏற முடியாத அளவுக்கு வலி ஏற்படும்' என்கிறார் ஆர்த்ரோஸ்கோப்பி நிபுணர் ஜெ.கிளமென்ட் ஜோசப்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 'மூட்டுத் தேய்மானம் ஏற்படுவதற்கு, உடல்பருமன் மிக முக்கியக் காரணம். நடக்கும்போது நம் உடல் எடையைப்போல, இரண்டு மடங்கு எடையை கால் மூட்டு தாங்குகிறது மூட்டுப்பகுதி. உதாரணத்துக்கு, உடல் எடை 60 கிலோ எனில், எழுந்திருக்கும்போது மூட்டு 120 கிலோ எடையைத் தாங்குகிறது. நாற்காலியில் உட்கார்ந்து எழுந்திருக்கும்போது ஐந்து மடங்கு அதிக எடையை மூட்டு தாங்குகிறது.

மூட்டுவலிக்கு முழுமையான தீர்வு!

தரையில் உட்கார்ந்து எழும்போதும் இந்தியக் கழிப்பறையைப் பயன்படுத்தும்போதும் 10 மடங்கு வரை எடையைத் தாங்குகிறது. மூட்டுக்கு அதிகப்படியான வேலை கொடுக்கும்போது தேய்மானம் அடைகிறது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மூட்டு மாற்று அறுவைசிகிச்சைக்கு அவசியம் இல்லை. திடீரென மூட்டில் வலி ஏற்பட்டால், மூட்டில் உள்ள குறுத்தெலும்புத் தேய்மானம் உள்ளிட்ட வேறு சில காரணங்களால்கூட வலி ஏற்பட்டிருக்கலாம். தற்போது, மூட்டு லூப்ரிகேஷன் இன்ஜெக்ஷன், குரோத் ஃபேக்டர் இன்ஜெக்ஷன், கார்ட்டிலேஜ் டிரான்ஸ்பிளான்ட் போன்ற பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இதன்மூலம் மூட்டு மாற்று அறுவைசிகிச்சையைத் தள்ளிப்போடமுடியும்' என்று நம்பிக்கை தருகிறார் டாக்டர் கிளªமன்ட் ஜோசப்.

'தோள்பட்டையில், தோள்மூட்டுப் பிடிப்பு (Frozen Shoulder), தோள்மூட்டு தசைக் கிழிவு (Rotator cuff tear) என்று இரண்டு பிரச்னைகள் தோன்றும். தோள்மூட்டு நன்றாகச் செயல்பட, நான்கு தசை நார்கள் உள்ளன. இந்தத் தோள்மூட்டு தசை நாரில் கிழிவு ஏற்படும்போது வலி ஏற்படுகிறது. எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலம் இதனைக் கண்டறியலாம். தசை நார் கிழிவின் நிலையை வைத்து சிகிச்சை அளிக்கப்படும்.  தசைக் கிழிவு ஆரம்ப நிலையில் இருந்தால், சிறிய பயிற்சிகளாலும் மாத்திரை மருந்துகளாலும் சரிப்படுத்தலாம். கிழிவு அதிகமாக இருந்தால், ஆர்த்ரோஸ்கோபி மூலம் வெறும் 5 மி.மீ. அளவு துளையிட்டு அறுவைசிகிச்சை செய்து சரிப்படுத்தலாம்' என்றார் டாக்டர் கிளமென்ட் ஜோசப்.

- பா.பிரவீன்குமார்

படம்: ஆ.முத்துக்குமார்

மூட்டுவலிக்கு முழுமையான தீர்வு!