Published:Updated:

முதுமைப் பற்றிய முழுமையான கையேடு!

முதுமைப் பற்றிய முழுமையான கையேடு!

பிரீமியம் ஸ்டோரி
##~##

ழையா விருந்தாளியாக வரும் முதுமையின் தொடக்கம், முதியவர்களுக்கு வரும் நோய்கள், மருத்துவப் பரிசோதனைகள், தற்காப்புமுறைகள், கடைப்பிடிக்க வேண்டிய வழிகள், தடுப்பு ஊசிகள், உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறைகள், அனுபவங்கள் என முதல் பகுதியிலேயே முத்தாய்ப்பாகத் தொடங்குகிறது, 'முதுமையே வா... வா... வா...’ நூல்.

70 முதல் 75 வயதினரை மறதி நோய் ஆட்கொள்வதால், எளிதில் குணமடைய, மூளையின் துரித செயல்பாட்டுக்கான சத்துணவு மற்றும் நோய்களைத் தடுக்கும் உணவுகளை நூலாசிரியர் டாக்டர் வி.எஸ். நடராசன் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார். பசலைக்கீரை, வெங்காயம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ராஜ்மா, உலர் திராட்சை, முளைகட்டிய கோதுமை மற்றும் வல்லாரை ஆகியவற்றை முதியவர்களும் நடுத்தர வயதினரும் அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால், மறதி நோயே அணுகாது என்கிறார் டாக்டர் வி.எஸ். நடராசன்.  

ஆடி ஓடி அலைந்து களைத்து, கடைசியில் முதுமைப்பருவம் எப்படி இருக்கும்? வாழ்க்கை எப்படி அமையும்? என்ன செய்யவேண்டும்? என்பது போன்ற பல விஷயங்களையும், மருத்துவரிடம் கேட்கத் தயங்கும் சந்தேகங்களையும் கேள்வி - பதிலாகப் பதித்திருப்பது இந்த நூலின் சிறப்பு.

முதுமைப் பற்றிய முழுமையான கையேடு!

வயது ஏறும்போது, சமநிலையில் உடலை வைத்துக்கொள்ள இயங்கும் உள் காது, சிறு மூளை, கண், தசைகள், மூட்டு போன்ற உறுப்புகளின் திறன் குறைந்துகொண்டே போகும். இதனால், அடிக்கடி நிலைதடுமாறி விழ நேரிடும் என்று விளக்கும் டாக்டர், இதைத் தவிர்ப்பதற்கான வழிகளையும் விளக்குகிறார்.

வயோதிகத்தில் தனிமை, வருமானமின்மை, உழைக்கும் நிலைமை, அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியெல்லாம் விரிவாகச் சொல்வதுடன், முன்னெச்சரிக்கையாகச் செய்ய வேண்டியவை பற்றி விளக்கியது மிகச் சிறப்பு. முதியோர்கள் நலன் குறித்த அக்கறையை, பரிவோடு அணுகும் முறையைப் பேணிக்காப்பது பற்றி நூலில் அலசியிருப்பது ஆரோக்கியமான விஷயம்.  

முதுமையை உணர்ந்து, அதை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு செயல்பட்டால், முதுமையிலும் இளமையோடு இருக்கலாம் என்பதை எளிய நடையில் இயல்பாகப் புரியும்படி எழுதியுள்ளார் ஆசிரியர். படிக்கத் தூண்டுகோல் மட்டுமின்றி, வருங்கால முதியவர்களாகிய இளைஞர்களுக்கும் இந்த நூல் ஓர் ஊன்றுகோல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு