Published:Updated:

"பளிச்' சருமத்துக்கு பழச்சாறு!

"பளிச்' சருமத்துக்கு பழச்சாறு!

பிரீமியம் ஸ்டோரி
"பளிச்' சருமத்துக்கு பழச்சாறு!

கொளுத்தும் வெயிலானாலும், நடுங்கும் குளிரானாலும், பாதிப்புக்கு உள்ளாவது நம் சருமம்தான். சருமம் பாதிக்கப்பட்டால், பல நோய்கள் வரிசைகட்டி வர ஆரம்பித்துவிடும். ''சரும நோய்கள் வராமல் காக்கவும், வந்தால் குணமாக்கவும் உணவுதான் முதல் மருந்து'' என்கிறார், மதுரை பி.ஜி.எம். மருத்துவமனையின் டயட்டீஷியன் சுகஸ்ரீ செல்வகுமார். ''நம் தோலில் வெளியில் தெரியும் 'எபிடெர்ம்’ (epiderm) என்ற அடுக்கில் நிறையத் துளைகள் உள்ளன. வெளியில் பூசுகின்ற கிரீம்கள் மேல் பகுதியை மட்டுமே பாதுகாக்கிறது. அதற்குள் இருக்கும் 'என்டோடெர்ம்’ (endoderm) மற்றும் 'மிசோடெர்ம்’ (mesoderm) என்ற இரண்டு அடுக்குப் பகுதிகளையும், உண்ணும் உணவின் மூலமாகத்தான் காத்திட முடியும். இந்த 'ஸ்கின் டயட்’ உணவு முறையில் பழச்சாறுகளே முன்னணி வகிக்கின்றன'' என்கிற டயட்டீஷியன் சுகஸ்ரீ, பழச்சாறு செய்முறைகளையும் அதன் பலன்களையும் சொன்னார்.

"பளிச்' சருமத்துக்கு பழச்சாறு!

 தக்காளி ஜூஸ்

"பளிச்' சருமத்துக்கு பழச்சாறு!

நன்றாகக் கொதித்த நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து, 2 தக்காளிகளைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். பிறகு, அதனைக் குளிர்ந்த நீரில் சிறிது நேரம் போட்டால் அதன் தோல் தனியாக வந்துவிடும். தோலை எடுத்துவிட்டு, தக்காளியை மட்டும் மிக்ஸியில் அரைத்து, சிறிது மிளகுத் தூள், தேன் சேர்த்துக் கலந்து பருகலாம்.

பலன்கள்: தினமும் பருகி வந்தால் சருமம் இளமையாக இருப்பதுடன், சூரிய ஒளி தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கும். தக்காளியில் உள்ள 'லைகோபென்’ என்னும் இயற்கை நிறமி, நம் சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கிறது. சருமத்தின் கட்டமைப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கும் 'ப்ரோ கொலோஜென்’ என்ற மூலக்கூறின் சதவிகிதமும் அதிகரிக்கிறது. சருமத்தில் உள்ள 'மைட்டோகான்ட்ரியல் டி.என்.ஏ’வை தக்காளி பாதுகாக்கிறது. மேலும் இது சருமத்தில் சுருக்கம் விழுவதையும் குறைக்கிறது. வைட்டமின்கள் அடங்கிய தக்காளி ஜூஸ் உடலின் நச்சுத் தன்மையைக் கடுமையாகக் குறைத்துவிடும்.

நெல்லிக்காய் ஜூஸ்

"பளிச்' சருமத்துக்கு பழச்சாறு!

இரண்டு நெல்லிக்காய்களை, சூடான நீரில் போட்டு எடுத்து அதன் கொட்டைகளை நீக்கி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி, ஒரு கப் இளநீர், சிறிது தேன் சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: வைட்டமின் சி அதிகம் உள்ள இந்த ஜூஸை தினமும் பருகி வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். முகம் பொலிவு பெறும். மிகுந்த உற்சாகத்துடனும் செயல்பட முடியும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்துவிடும். முகப்பரு உள்ளவர்கள் இதனைக் குடித்தால், விரைவில் நல்ல பலனைக் காண முடியும். உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி, இளமைத் தோற்றத்தைத் தக்கவைக்கும்.  வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் தொற்றாமல் தடுக்கும். 

"பளிச்' சருமத்துக்கு பழச்சாறு!

புதினா கொத்தமல்லி ஜூஸ்

புதினா அல்லது பசலைக் கீரை 50 கிராம், 25 கிராம் கொத்தமல்லித் தழையை நன்றாகச் சுத்தம் செய்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் சிறிது இஞ்சி, உப்பு சேர்த்துப் பருகலாம். இனிப்புச் சுவை விரும்புகிறவர்கள், தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

"பளிச்' சருமத்துக்கு பழச்சாறு!

பலன்கள்: டயட் இருப்பவர்களுக்கு மிகவும் சிறந்தது. இதில் வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் அதிகம் உள்ளன. புதினாவில் நீர்ச் சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச் சத்து, தாது உப்புகள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், தயாமின் போன்ற சத்துக்கள் உள்ளன. கொத்தமல்லியில் ஏ,பி,சி உயிர்ச் சத்துக்களும், சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும் உள்ளன. உடலை வலுவாக்கும் அனைத்துச் சத்துக்களும் இதில் இருக்கின்றன.

காய்கறி ஜூஸ்

1 பீட்ரூட், 1 கேரட் எடுத்து இரண்டையும் தனித்தனியே அரைத்துக்கொள்ள வேண்டும். பீட்ரூட், கேரட் விழுதுடன் சிறிது புதினாவைச் சேர்த்து அரைத்து வடிகட்டி, சிறிதளவு எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்துப் பருகலாம்.

"பளிச்' சருமத்துக்கு பழச்சாறு!

பலன்கள்: கேரட்டில் வைட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள் அதிகம் உள்ளன. இவை சருமத்தை மெருகேற்றி, 'பளிச்’ நிறத்தைக் கொடுக்கும். பீட்ரூட்டில் உள்ள குளுகோஸ், ரத்தத்தை வளப்படுத்தும். நம் சருமத்தில் உள்ள துளைகள், ரத்தக் குழாய்களோடு இணைந்துள்ளன. ரத்தம் வளப்படும்போது, அதன் பலன் இரட்டிப்பாகி சருமத்தில் பிரதிபலிக்கும்.

- ந. ஆஷிகா படங்கள்:எ.கிரேசன் எபினேசர்

##~##
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு