Published:Updated:

மஞ்சள் பற்களை வெண்மையாக்க முடியுமா?

மஞ்சள் பற்களை வெண்மையாக்க முடியுமா?

பிரீமியம் ஸ்டோரி
மஞ்சள் பற்களை வெண்மையாக்க முடியுமா?

பா.திவ்யா, மேலூர்.

'கல்லூரி மாணவி நான். கண் பார்வை குறைந்து இருப்பதால் கண்ணாடி போட்டிருக்கிறேன். கான்டாக்ட் லென்ஸ் போட எனக்கு ஆசை. ஆனால் தூசி, கண்ணீர், புகை கான்டாக்ட் லென்ஸ் மீது பட்டால் பார்வையே பறிபோகும் வாய்ப்பு இருக்கிறது என்று சமீபத்தில் இணையதளம் ஒன்றில் படித்தேன். இது உண்மையா? கான்டாக்ட் லென்ஸ் போடுவது ஆபத்தானதா?'

டாக்டர் எஸ்.எம்.பெஜான்சிங், கண் மருத்துவர், நாகர்கோவில்.

மஞ்சள் பற்களை வெண்மையாக்க முடியுமா?

''கண் பார்வைக் குறைபாட்டுக்கு, கண்ணாடி அணிவதுபோல, 'கான்டாக்ட் லென்ஸ்’ அணிவதில் தவறு எதுவும் கிடையாது. தோற்றப்பொலிவுக்காக இளைஞர்கள், கான்டாக்ட் லென்ஸ் அணிவது ஃபேஷனாகி வருகிறது. இதில் தவறு இல்லை. ஆனால், அதனைப் போடும்போது மருத்துவர்கள் சொல்லும் நிபந்தனைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். பொதுவாக, காற்று அதிகம் வீசும் இடங்களுக்கு, 'கான்டாக்ட் லென்ஸ்’ போட்டுக்கொண்டு செல்லக் கூடாது. காற்று வேகமாக வீசும்போது, லென்ஸ் நகர்ந்து கண்ணின் ஓரத்தில் காயத்தை ஏற்படுத்திவிடும் ஆபத்து இருக்கிறது. அதேபோல தூசி அதிகம் இருக்கும் இடங்களுக்குச் சென்றால், கண்ணைக் கசக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். அதுவும் கண்ணில் பாதிப்பை ஏற்படுத்திவிடலாம். கான்டாக்ட் லென்ஸ் போடுவதற்கு முன்பு எத்தனை மணி நேரத்துக்குத் தொடர்ந்து அணியலாம் என்பதை மருத்துவர்கள் தெரிவிப்பார்கள். அதனையும் தவறாமல் கடைப்பிடியுங்கள். நீண்ட வருடங்களாக, கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு, கருவிழிக்குள் ஒளி ஊடுருவும் தன்மையில் பாதிப்பு ஏற்படலாம். அதனால் லென்ஸை மாற்றும்போது டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெற்று அதன்படி செயல்படுவது அவசியம். மற்றபடி அவரவர் வசதிக்கு ஏற்ப கண்ணாடி அல்லது கான்டாக்ட் லென்ஸ் அணிந்துகொள்ளலாம்.''

கே.மோகன், ஆவடி.

மஞ்சள் பற்களை வெண்மையாக்க முடியுமா?

'காலை, இரவு என இருமுறை பல் துலக்கியும் என் பற்கள் மஞ்சள் கறையுடன் காணப்படுகின்றன. இதனால் பார்ப்பவர்கள் பாக்கு உபயோகிக்கும் பழக்கம் உடையவன் என்று என்னைத் தவறாக எடைபோடுகின்றனர். இந்தக் கறையைப் போக்க வழி உண்டா?'

டாக்டர் சி.ஆர்.முரளி, பல் மருத்துவர், மதுரை.

மஞ்சள் பற்களை வெண்மையாக்க முடியுமா?

'மஞ்சள் பற்களுக்குப் பல காரணங்கள் உண்டு. சிலருக்கு, பற்கள் முளைக்கும்போதே மஞ்சளாக இருக்கும். இதற்கு அவர்களுடைய மரபணுக்கள் ஒரு காரணமாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு 'டென்டல் புளூரோசிஸ்’ பிரச்னை இருக்கலாம். நீரில் உள்ள 'ஃப்ளோரைட்’ (fluoroid) என்ற வேதிப்பொருளின் அளவு அதிகமாக இருந்தால், பல்லின் எனாமல் பாதிக்கப்பட்டு பற்கள் மஞ்சள் நிறமாக மாறிவிடும். மேலும், அதிக அளவில் மருந்து மாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்கும் இதுபோன்ற பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனாமல் தேய்வதாலும் பல்லின் நிறம் மஞ்சள் ஆகலாம். ப்ளீச்சிங் செய்துகொள்வதன் மூலம், பற்களை வெண்மையாக்கலாம். உங்கள் அருகில் உள்ள பல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, அதன்படி மேற்கொள்வது நல்லது.'

சிவசங்கர், மதுரை.

மஞ்சள் பற்களை வெண்மையாக்க முடியுமா?

''எனக்குத் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. வயது 25. என் மனைவிக்கு 21 வயது. இன்னும் நான்கு வருடங்கள் கழித்து, குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறோம். இதற்காக மாத்திரை, ஆணுறை பயன்படுத்துகிறோம். இந்தத் தடுப்பு முறைகள் சரியா? மாத்திரை போட்டுக்கொள்வதால், என் மனைவிக்கு எதிர்காலத்தில் பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளதா?''

டாக்டர் சுஜிந்திரா இளமுருகன், அரசு மகப்பேறு மருத்துவர், புதுச்சேரி.

''திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று திட்டமிட்டதற்கு, உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக்கொள்ளலாம். பெண்கள் இல்லற வாழ்க் கைக்குத் தயாராவதற்கே போதுமான கால இடைவெளி தேவைப்படுகிறது. மாத்திரை, ஆணுறை இரண்டுமே குழந்தை உண்டாவதைத் தடுக்கும் சிறந்த வழி. மாதத்தில் ஓரிரு முறை தாம்பத்தியத்தில் ஈடுபடுபவர்கள் ஆணுறை பயன்படுத்தலாம். ஆணுறையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் தெரிந்துகொள்வது மிக முக்கியம்.

மஞ்சள் பற்களை வெண்மையாக்க முடியுமா?

கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பயன்படுத்துவது உகந்தது அல்ல. 21 நாட்கள் கருத்தடை மாத்திரை உட்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் உடல் எடை அதிகரிப்பு, ஒரு பக்கத் தலைவலி, வாந்தி, உடலில் நீர் கோத்தல் போன்ற பக்கவிளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்.

மாதம் ஒருமுறை ஊசியைப் போட்டுக்கொள்வதன் மூலமும் குழந்தை உண்டாவதைத் தடுக்க முடியும். ஆனால், மாத்திரைகள் உட்கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகளைவிட இதில் ஏற்படும் பக்கவிளைவுகள் ஏராளம். நாங்கள் தம்பதியர்களிடம் ஆணுறை பயன்படுத்துவதையே ஊக்கப்படுத்துகின்றோம். கருத்தடை மாத்திரைகள் உட்கொள்பவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரை அணுகி உடல்நிலையைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. மருத்துவர்கள் பரிந்துரைத்தால், தொடர்ந்து மாத்திரைகளைப் பயன்படுத்தலாம்.'

##~##
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு