அழகிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் பெண்கள் மட்டுமே அணிந்து வந்த, அழகான ஒயின் கோப்பை வடிவ ஹை ஹீல்ஸ் செருப்புகள், பள்ளி - கல்லூரி மாணவிகளின் கால்களை வலுவிழக்கச் செய்கின்றன என்பதுதான் வேதனை. ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிவதால், வரிசையாக ஆபத்துகள் வருவது புரியாமல், பூனை நடை போடுகின்றனர் நம்ம பெண்கள்.

குள்ளமாக இருப்பவர்களைச் சற்று உயரமாகக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டவை இந்த ஹை ஹீல்ஸ். ஆனால் ஹை ஹீல்ஸ் அணிவதால் உடலின் மற்ற உறுப்புக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றன?

மதுரையைச் சேர்ந்த முடநீக்கியல் மருத்துவர் சண்முகநாதனிடம் கேட்டோம்.

''ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும்போது நம்மை அறியாமலேயே நம் உடல், சிறிது சிரமத்துக்கு உள்ளாகிறது. நம் உடல் ஓர் நேர்கோடு ஈர்ப்பில் இயங்குகிறது. வழக்கமான செருப்பு அணிந்து நடக்கும்போது இந்த நேர்கோடு நம் உடலுக்குள்ளே விழும். ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும்போது கணுக்கால், மூட்டு, முதுகெலும்பு, இடுப்புப் பகுதிகள் பாதிக்கப்படும். தண்டுவடத்துக்கு இடையே உள்ள டிஸ்க் விலகி முதுகு வலியை ஏற்படுத்துவதுடன், மூளையிலிருந்து பாதங்களுக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லாது.

'வெட்ஜ் ஹீல்ஸ்’ தொடங்கி... 'ஸ்டில்லட்டோஸ்’ வரை ஹீல்ஸில் ஆறு வகை உண்டு. இதில் வெட்ஜ் ஹீல்ஸ் அனைவரும் அணியும் வகையில் மிகவும் வசதியானதாக இருக்கும். ஹீல்ஸ் வகைகளிலேயே அதிக உயரம் கொண்டது ஸ்டில்லட்டோஸ். பார்க்கவும் அணியவும் அழகாக இருந்தாலும் அதன் பக்கவிளைவுகள் ஏராளம். ஹீல்ஸின் உயரம் அதிகரித்தால், அதன் விளைவுகளும் அதிகரிக்கும். எப்போதும் 1/2 இன்ச் முதல், 1 இன்ச் வரை உள்ள ஹீல்ஸ் செருப்புகளை உபயோகிப்பதே நல்லது. முடிந்தவரையில் தட்டையான செருப்புகளை உபயோகிப்பது பாதத்துக்கும், உடலுக்கும் நல்லது' என்றார்.

பாதம்: நம் உடல் எடையைத் தாங்கும் ஸ்பிரிங் பொருத்தப்பட்ட ஷாக்அப்சர்வர் போலச் செயல்படுகிறது. ஹை ஹீல்ஸ், உடலின் இந்த அதிசயத்தை சிதைக்கிறது. 4 இன்ச் உயரம் உள்ள ஹை ஹீல்ஸ் அணியும்போது, முன் பாதத்தில் 30 சதவிகிதம் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். தொடர்ந்து ஹை ஹீல்ஸ் அணிவதால், நரம்பு மண்டலமும் எலும்புகளும் பாதிக்கப்படுகின்றன. மேலும், மூன்றாவது நான்காவது விரல்களுக்கு இடையில் உள்ள நரம்புப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு, பாதத்திலும் அதிக வலியை ஏற்படுத்தும்.

கணுக்கால்: ஹை ஹீல்ஸ் அணிவதால், கணுக்கால் சற்று முன்னோக்கி வளைக்கப்பட்டு, ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் கணுக்காலின் நெகிழ்வுத்தன்மை குறைந்து, இயற்கையான நடையில் மாற்றம் ஏற்படும்.

முதுகெலும்பு:

ஹை ஹீல்ஸ் அணியும்போது நம்முடைய முதுகுப் பகுதி, அதிகம் வளைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது இடுப்பெலும்பு தசைப் பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்திவிடுவதால், கீழ் முதுகில் வலி ஏற்படும்.

- லோ.இந்து படங்கள்: வி.சதீஸ்குமார்

ஹை ஹீல்ஸ் சில டிப்ஸ்

உட்காரும்போதெல்லாம் ஹீல்ஸைக் கழற்றிவிட்டு, கால்களை நீட்டி, கால்களுக்கு ஓய்வு தரலாம்.

பாய்ன்டட் ஹீல்ஸ் அணிபவர்கள், பாதத்துக்குப் போதுமான பயிற்சி எடுத்த பிறகே நடக்க வேண்டும். இது, கால் பிசகுதலைத் தடுக்கும்.

தினசரி அணியாமல், விசேஷ தருணங்களில் மட்டும் அணியுங்கள்.

வெளியூருக்குச் செல்லும்போது, கையோடு 'ஃப்ளாட்’ செருப்புகளையும் எடுத்துச் செல்லுங்கள்.

ஹீல்ஸை அணிந்துசெல்லும் நீண்ட தூர நடைப் பயணத்தைத் தவிர்க்கவும்.

கர்ப்பக் காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டும்

ஹீல்ஸ் அணிவது கர்ப்பக் காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்' என்கிறார் மகளிர் மகப்பேறு மருத்துவர் ஹெலன் ஜெபசிங்.

'ஹீல்ஸ் அணிந்து நடக்கும்போது, பெண்களுக்கு இடுப்பில் இருக்கும் 'லம்பார்’ எலும்பு பாதிக்கப்பட, அதிக வாய்ப்புகள் உண்டு. இதனால் தீராத இடுப்பு வலி ஏற்படும். எனவே, பெண்கள் கர்ப்பக் காலங்களில் ஹீல்ஸ் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இந்தக் காலங்களில் 'ப்ரோஜெஸ்டிரான்’ ஹார்மோன் அதிகமாகும். இந்த நேரத்தில் ஹீல்ஸ் அணியும்போது கால், மூட்டு மற்றும் இதர இணைப்புப் பகுதிகளில் உள்ள இடைவெளி அதிகரிப்பதுடன், பிரசவ வலியைத் தாங்கும் சக்தியையும் இழக்கச் செய்யும். இதனால் உடல் அமைப்பு மாறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. கர்ப்பப்பை பிரச்னையும் ஏற்படலாம்' என்று எச்சரிக்கிறார்.