Published:Updated:

நலம், நலம் அறிய ஆவல்!

தித்திக்கும் திருமண வாழ்வுக்கு...

பிரீமியம் ஸ்டோரி
நலம், நலம் அறிய ஆவல்!
##~##

'தாம்பத்திய வாழ்க்கை பற்றிய தெளிவு, தம்பதிக்குள் இருக்கும் அந்தரங்கப் பிரச்னைகள், சந்தேகங்கள் மற்றும் குழந்தையின்மையால் அவதிப்படும் தம்பதிகள் எனப் பல்வேறு பிரச்னைகளால் பலரது இல்லற வாழ்க்கை இனிமையாக இருப்பது இல்லை. இதற்கு, கவனத்துடன் உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால், கொஞ்சி மகிழக் குழந்தையும், குடும்ப வாழ்க்கையும் நலமாக அமையும்' என்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற குழந்தைப் பேறு மற்றும் செக்ஸாலஜி டாக்டர் கே.ஆர்.முத்துசாமி.

'திருமணத்துக்குப் பிறகு ஒவ்வொருவரின் வாழ்வும் சிறப்பாக அமைய வேண்டும். வாழ்க்கையை நல்லபடியாகக் கொண்டுசெல்ல நல்ல மனப்பாங்கு அவசியம். தனக்கென ஒரு குடும்பம் என்ற அமைப்புக்குள் வந்துவிட்டால், நிறைகளை ஏற்றுக்கொள்வதுபோல, அவரவர் குறைகளையும் முழு மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு காலத்தில் கணவன் - மனைவிக்குள் எஜமான், வேலைக்காரி என்ற நிலை இருந்தது. பெண்கள் நன்கு படித்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்ட நிலையில், குடும்பத்தில் கணவன்- மனைவி இருவரின் பங்குமே எல்லாவற்றிலும் சரிசமமாக இருக்கவேண்டியது அவசி யம். இருவரும் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும்.

'வேலைக்குச் செல்லும் மனைவி, வீட்டு வேலைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்...’ என்று கணவன் நினைக்கக் கூடாது. வீட்டு வேலைகளில், சரிசமமாகப் பங்கேற்கும் மனப்பாங்கு ஆணுக்கு வேண்டும். ஒருவரை ஒருவர் குறை கூறுவதோ, குத்திக்காட்டுவதோ நாளடைவில் வெறுப்பை வளர்க்கும். அந்த வெறுப்பு, மனமுறிவில் முடியலாம்.

நலம், நலம் அறிய ஆவல்!

ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தும் படி இருக்க வேண்டும். 'இன்னிக்குச் சமையல் ரொம்ப நல்லா இருந்தது, நல்லா செஞ்சிருக்கியே’ என்பதுபோன்ற வார்த்தைகள் வாழ்வை சிறப்பாக நடத்திச் செல்லும்'' என்கிறார் டாக்டர்.

'ஓர் இதயத்தால் மற்றோர் இதயத்தை உருவாக்க முடியாது. ஒரு சிறுநீரகம் மற்றொரு சிறுநீரகத்தை உருவாக்க முடியாது. ஆனால், பிறப்புறுப்புகள் ஓர் உயிரையே உருவாக்கும் உத்தமமான வேலையைச் செய்கின்றன. அதை அந்த அளவுக்குச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளே மற்றொரு தலைமுறையை உருவாக்குவதுதான். தலைமுறையை உருவாக்க உடலில் பிறப்புறுப்பு சுத்தமாகவும், செயல்படத் தக்க வகையிலும் இருக்க வேண்டும்' என்கிறார் டாக்டர் கே.ஆர்.முத்துசாமி.

- பா.பிரவீன் குமார் படம்: ப.சரவணகுமார்

நலம், நலம் அறிய ஆவல்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு