'இயல்பாகவே சமைப்பதில் எனக்கு அதிக ஆர்வம். வீட்டிலேயே மூலிகை உணவுகளையும், ஊட்டச் சத்து நிறைந்த தானியங்களில் சுவையான உணவுகளை வெரைட்டியாகவும் சமைத்துக் கொடுப்பேன். ஆரோக்கியம் காக்கும் குடும்பத் தலைவியாக மட்டுமின்றி, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் உணவியல் நிபுணராகவும் பணிபுரிந்தேன்'' என்று உற்சாகமாகச் சொல்லும் தஞ்சாவூரைச் சேர்ந்த ஜெயந்தி தினகரன், 'தினை அரிசி உப்புமா’ செய்முறையுடன் அதன் பலன்களையும் பட்டியலிடுகிறார்.

தேவையானவை: தினை - 200 கிராம், நீர் - 600 மி.லி, பெரிய வெங்காயம், தக்காளி, கேரட் - தலா 1, துருவிய இஞ்சி - ஒரு ஸ்பூன், பச்சைப் பட்டாணி - 50 கிராம், எண்ணெய் - 50 மி.லி, கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். உமி நீக்கிய தினை அரிசியை வறுத்து வைத்துக்கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய்விட்டு, கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, தக்காளி, நறுக்கிய காய்கறிகள், உப்பு இவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்த பின் வறுத்த தினையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறி, வெந்ததும் இறக்கவும். கொத்துமல்லித் தழை, தேவையானால் 2 டீஸ்பூன் நெய் சேர்க்க, சுவையான தினை உப்புமா தயார்.

பலன்கள்: உடல் வலிமையுடன் உறுதியாக இருக்கும். புரதம், இரும்பு, பி-வைட்டமின், தாது உப்புகள், கால்சியம் இதில் நிறைந்து இருக்கிறது. நார்ச் சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. ஃபைடேட் (றிலீஹ்tணீtமீ), ஃபைட்டிக் அமிலம் (றிலீஹ்tவீநீ கிநீவீபீ), இருப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கவும், அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

படங்கள்: கு.கார்முகில் வண்ணன்

இதேபோல் உங்கள் வீட்டு உணவு அனுபவங்களை 'அம்மா ரெசிபி!’ பகுதிக்கு உங்கள் தொலைபேசி எண்ணுடன் உடனே எழுதி அனுப்புங்கள். கலக்கலான பரிசுகள் உண்டு.

அனுப்பவேண்டிய முகவரி:
'அம்மா ரெசிபி’ டாக்டர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை
600 002.
மின்னஞ்சல்: doctor@vikatan.com