Published:Updated:

ஆரோக்கியம் காக்கும் அற்புத நூல்!

ஆரோக்கியம் காக்கும் அற்புத நூல்!

பிரீமியம் ஸ்டோரி
ஆரோக்கியம் காக்கும் அற்புத நூல்!
##~##

பாரம்பரியம், கலாசாரத்துடன் பின்னிப் பிணைக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவம், ஒரு நோயாளியின் உடல், மனம் மற்றும் ஆன்மிகத் தன்மைகளைக் கருத்தில்கொண்டு அளிக்கப்படும் சிகிச்சை முறை. ஆயுர்வேதம் பற்றிய ஓர் அறிமுகமாகச் சின்னச் சின்ன ஆன்மிகக் கதைகளைச் சொல்லி, ஆயுர்வேத வைத்தியத்துக்கும் இறைவனுக்கும் உள்ள இணைப்புப் பாலத்தை அழகாக விளக்குகிறது 'ஆரோக்கியம் தரும் ஆயுர்வேதம்’ என்ற நூல். ஆரோக்கிய வாழ்வுக்குப் பயன்படக்கூடிய மருந்துகளை விரிவாகச் சொல்லியிருக்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் எல்.மகாதேவன்.

நோய் வராமல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கவும், வந்த நோயை நீக்கவும் ஆயுர்வேதம் வழிகாட்டுகிறது. அஷ்டாங்கத்தை வைத்து யாருக்கு என்ன சிகிச்சை தேவை என்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாம்.  

வாதம், பித்தம், கபத்துக்கு என்னென்ன உணவுகளைச் சேர்க்க வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும்.. அந்தந்த உடல் தன்மைக்குரியவர்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் தெரியும் என்பதை விளக்குகிறது இந்த நூல். உதாரணத்துக்கு, பித்த உடம்புக்காரர்களுக்கு நகம், தலைமுடி மிருதுவாக இருக்கும். பசி, தாகம் தீவிரமாக இருக்கும். செம்பட்டை படிந்து விரைவில் நரைத்துவிடும் என்பது போன்ற விவரங்கள் இந்த நூலில் விவரிக்கப்பட்டிருப்பது சிறப்பு.

வாதம், பித்தம் கபம் என்ற மூன்றும் சேர்ந்த உடல்வாகு உள்ளவர்களுக்கு நோய் அண்டாது. நோய் வந்தாலும் சீக்கிரம் போகாது. பித்தம், வாதம், கபம் என சில வினாக்களைக் கொடுத்து, நம் உடல் எந்த வகையைச் சேர்ந்தது என்பதைத் தெரிந்துகொள்ள எளிய வழிகள் தந்திருப்பது பாராட்டுக்குரியது.  

'பட்டினியால் ஏற்படுவதைவிட, அளவுக்கு அதிகமாகத் தின்பதாலேயே நோய்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன’ என்கிறார் நூலாசிரியர்.

'இடையில் குடியேல்... கடையில் மறவேல்’ என்பது முன்னோர்கள் வாக்கு. சாப்பிட்ட பிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும். இடையிலோ, முன்போ குடிக்கக் கூடாது. உணவை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதை அழகாகப் பதிவுசெய்திருக்கிறார். 'அறுசுவை உணவுகளில் இனிப்பு, புளிப்பு, உப்பு உடலை போஷிக்கக்கூடியவை. கசப்பு, காரம், துவர்ப்பு மூன்றுமே உடலை மெலியச் செய்பவை’ என்கிற ஆசிரியர், தோல் பிரச்னை தீர்க்கும் ஸ்நானப் பொடி மற்றும் கூந்தல் வளர்ச்சியைத் தரும் ஆயுர்வேதத் தைலங்களைச் செய்முறை விளக்கத்துடன் தந்திருப்பது சிறப்பு.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு