Published:Updated:

பருவுக்கும் பொடுகுக்கும் என்ன சம்பந்தம்?

பருவுக்கும் பொடுகுக்கும் என்ன சம்பந்தம்?

பருவுக்கும் பொடுகுக்கும் என்ன சம்பந்தம்?

பருவுக்கும் பொடுகுக்கும் என்ன சம்பந்தம்?

Published:Updated:
##~##

ராஜேஸ்வரி, கீழ்க்கட்டளை

'எனக்கு வயது 66. சில மாதங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து ஒரு வாரத்துக்கு நீடித்தது. கூடவே மூட்டு வலியும் வந்ததால், டாக்டரிடம் காட்டினேன். ரத்தப் பரிசோதனை செய்துபார்த்ததில், வைரஸ் காய்ச்சல் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டேன். இப்போது காய்ச்சல் குணமானாலும், எனது கை, கால் மூட்டுகளில் தொடர்ந்து வலி இருந்துகொண்டே இருக்கிறது. டாக்டரிடம் காட்டியும், இன்னும் சரியாகவில்லை. தினமும் மாத்திரை மருந்துகள் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த மூட்டு வலி ஏன் ஏற்படுகிறது? இதைத் தீர்க்க வழி உண்டா?'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர் வேலாயுதம், சித்த மருத்துவர், சென்னை.

'காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகள் மூட்டுப் பகுதியில் தங்கிவிடும். இப்படித் தங்கும் வைரஸ் கிருமி, மூட்டு எலும்பு முனைகளில் அழற்சியை ஏற்படுத்தும். காய்ச்சல் குணமான பிறகும்கூட இந்தக் கிருமி வலியை ஏற்படுத்தும். இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், மாதக்கணக்கில் வலி நீடிக்கும். 'போஸ்ட் சிக்கன்குனியா’ அறிகுறி என்று இதனைச் சொல்கிறோம். பருவ மாற்றத்தில் ஏற்படக்கூடிய வைரஸ் காய்ச்சலும் அதனைத் தொடர்ந்து வரக்கூடிய உடல் வலி, மூட்டு வலிகளுக்கும் சிறந்த நிவாரணமாக இருப்பது நிலவேம்புக் குடிநீர்.

பருவுக்கும் பொடுகுக்கும் என்ன சம்பந்தம்?

பல மூலிகைகளின் கூட்டு மருந்தான நிலவேம்புக் குடிநீர் சூரணம் பொதுவாக எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். 250 மி.லி. நீரில் 10 கிராம் சூரணத்தைப் போட்டு, 60 மி.லி. அளவு சுண்டக் காய்ச்சி, ஆறவைத்து வடிகட்டி, காலை மற்றும் மாலை வேளைகளில் தலா 60 மி.லி. வீதம் இரண்டு வாரத்துக்குக் குடித்துவர வேண்டும். ஒவ்வொரு வேளையும் புதிதாகத் தயாரித்து அருந்த வேண்டும்.

இதனுடன் அமுக்ரா சூரண மாத்திரை, காலையில் இரண்டு, இரவில் இரண்டு; விஷ்ணு சக்கர மாத்திரை, காலையில் இரண்டு, இரவில் இரண்டு என உட்கொண்டு வரவேண்டும். கற்பூராதி தைலம் அல்லது வாத கேசரி தைலத்தை வலியுள்ள மூட்டுக்களில் தடவி, 10 நிமிடங்கள் ஊறிய பிறகு, வெந்நீரில் நனைத்த துணியால் ஒத்தடமிட வேண்டும். இப்படி இரண்டு வாரத்துக்கு தொடர்ந்து செய்ய வேண்டும். முடக்கத்தான் கீரைக் கஞ்சி, வாதனாராணிக் கீரை அடை சாப்பிடலாம். பிரண்டைத் துவையல், அசைவ விரும்பிகள் ஆட்டுக்கால் சூப் சாப்பிடலாம். கிழங்குகளைச் சாப்பிடக் கூடாது. புளிப்பு, மாவுப் பொருட்களைத் தவிர்த்தல் நல்லது. எளிதில் செரிக்காத உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இப்படிச் செய்தால் காய்ச்சலால் வரக்கூடிய மூட்டுவலிப் பிரச்னைகள் முற்றிலும் தீர்ந்துவிடும்.'

பருவுக்கும் பொடுகுக்கும் என்ன சம்பந்தம்?

ச.லாவண்யா, சோழிங்கநல்லூர்

'நான் கல்லூரி மாணவி. என் முகத்தில் பருக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. எனக்குப் பொடுகு இருப்பதால்தான் பருக்கள் வருவதாக என் தோழி கூறுகிறாள். பொடுகுக்கும் பருவுக்கும் சம்பந்தம் உண்டா? பருவைப் போக்க வழி என்ன?'

டாக்டர் கோதண்டராமன்,தோல் மருத்துவர், அரசு மருத்துவமனை, மதுரை.

'சருமத்தில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள்தான் பொடுகு மற்றும் முகப்பருவுக்குக் காரணம். பொடுகு ஒருவகை பூஞ்சையால் ஏற்படுகிறது. 'சீபம்’ என்ற எண்ணெய், குறைந்த அளவில் சுரப்பது அல்லது அதிக அளவில் சுரப்பது, ஊட்டச் சத்து குறைபாடு, மன அழுத்தம் என பல்வேறு காரணங்களால் பொடுகு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், இது மரபு ரீதியானது என்றும் கூறப்படுகிறது. பொடுகு வந்துவிட்டால், அதைப் போக்க முடியாது. ஆனால், கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதற்கு, தலையைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். பொடுகைக் கட்டுக்குள் வைத்திருக்கும் செப்டோ ((ZPTO & zinc pyrithiyonone, ketoconozole)) என்னும் வேதிப்பொருட்கள் அதிகம்

பருவுக்கும் பொடுகுக்கும் என்ன சம்பந்தம்?

உள்ள ஷாம்பூக்களைப் பயன்படுத்தலாம். இது கடைகளில் சாதாரணமாகக் கிடைக்கக்கூடியதுதான். சருமத்தில் எண்ணெய் அதிகமாகச் சுரந்து, சுரப்பிகளில் அடைப்பு ஏற்படுவதாலும், இளம் வயதில் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் பருக்கள் தோன்றுகின்றன. பதின் பருவத்தில் எண்ணெய்ப் பசை அதிகமாகச் சுரந்து, அவை பருக்களாக வெடிக்கும். சுய மருத்துவம் செய்துகொள்ளாமல், உங்களுக்கு எதனால் முகப்பருக்கள் ஏற்படுகின்றன என்பதை உங்கள் அருகில் உள்ள தோல் நோய் சிகிச்சை நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. அடிக்கடி முகம் கழுவுதல், எண்ணெய்ப் பசை மிகுந்த க்ரீம்களைத் தவிர்த்தல், ஊட்டச் சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளுதலின் மூலம் பரு வருவதைத் தவிர்க்கலாம். '

உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:
கன்சல்டிங் ரூம், டாக்டர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை-600002.
doctor@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism