Published:Updated:

இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக!

டாக்டர் செரியன்

##~##

தயத்தை அதிர்வுகளில் இருந்து காப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை பெரிகார்டியம் என்ற சவ்வு செய்கிறது. அறுவை சிகிச்சையின்போது இதைக் கடந்துதான் இதயத் தசையை அடைய வேண்டியுள்ளது. எனவே, அறுவைசிகிச்சைக்குப் பிறகு செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பெரிகார்டியம் பட்டை வைக்கப்படும். ஆனால், இயற்கையான சவ்வுபோல இதன் செயல்பாடு இருக்காது. இதற்கு மாற்றாக விலங்குகளிடமிருந்து பெறப்படும் உயிர்செயற்கை பெரிகார்டியத்தைப் (Tissue Engineered Bovine pericardium) பொருத்துகிறார்கள்.

இவை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிசெய்யப்படுகின்றன. இதனால், இதய அறுவைசிகிச்சையின் செலவு அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்கும் வகையில், இந்தியாவிலேயே விலங்குகளிடமிருந்து பெரிகார்டியம், ரத்தக் குழாய், வால்வுகளை எடுத்து மனிதர்களுக்குப் பொருத்தும்வகையில் உயிர் செயற்கை ஆராய்ச்சியை, சென்னை ஃப்ராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனை மேற்கொண்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதை மனிதர்களுக்குப் பொருத்தி பரிசோதனை மேற்கொள்ள, 'டிரக் கன்ட்«ராலர் ஜெனரல் ஆஃப் இந்தியா’ சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது. இதுபற்றி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கே.எம்.செரியனிடம் பேசினோம்.

'பல ஆண்டுகளாகவே விலங்குகளின் இதய வால்வு, ரத்தக் குழாய் உள்ளிட்ட பகுதிகளை எடுத்து, இதயப் பிரச்னை உள்ள மனிதனுக்குப் பொருத்தப்பட்டுவருகிறது. உலோகத்தால் செய்யப்பட்ட வால்வுகளுக்குப் பதில், உயிருள்ள தசையைப் பொருத்துவதன் மூலம் இதயத் தசை கடினம் அடைதல், கால்சியம் படிவது, வடிவத்தில் மாறுபாடு போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக!
இதயம் துடிக்கட்டும் பாதுகாப்பாக!

இந்தியாவிலேயே முதன்முறையாக இத்தகைய உயிர்செயற்கை உறுப்புகள் தயாரிக்க, சென்னை அருகே மிகப் பெரிய ஆய்வு மையத்தை ஏற்படுத்திவருகிறோம். இங்கு, விலங்குகளின் இதய வால்வு, ரத்தக் குழாய், இதயத் தசைகளை எடுத்து, பல்வேறு உயிரி பொறியியல் மாறுதல்கள் செய்து மனிதனுக்குப் பொருத்தும் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளோம்.

தற்போது பெரிகார்டியம், நுரையீரலுக்குச் செல்லும் தமனி, கழுத்து பெருஞ்சிரை ஆகியவற்றை உயிர்செயற்கையாகத் தயாரித்துள்ளோம். இதை, மனிதர்களுக்குப் பொருத்தி, ஆராய்ச்சி நடத்துவதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது.

இதில் வெற்றிபெறும்போது விலை குறைவான அதே சமயம் நம்பகமான இதயத் திசுவை மனிதர்களுக்குப் பொருத்தலாம். இதனால், ஏராளமானவர்கள் உயிர் காப்பாற்றப்படும். விரைவில் துடிக்கும் இதயம் தயாரிக்கும் ஆய்வையும் ஆரம்பிக்க உள்ளோம். செயற்கைக் கருவிகள் ஆயிரம் வந்தாலும், இயற்கைக்கு அது மாற்றாக இருக்க முடியாது' என்றார்.

- பா.பிரவீன் குமார்,  படங்கள்: பா.கார்த்திக்

 வந்தாச்சு செயற்கை இதயம்

உலக அளவில் இதய மாற்று அறுவைசிகிச்சைக்கு காத்திருப்போர் அதிகம். இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 5,000 பேர் வரை காத்திருக்கின்றனர். ஆனால், கிடைப்பதோ ஒருசில மட்டும்தான். இப்படிக் காத்திருப்போருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வந்திருக்கிறது செயற்கை இதயம். சமீபத்தில் ஃப்ரான்சில் இந்த செயற்கை இதயத்தை 75 வயது முதியவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர் மருத்துவர்கள். இந்த இதயத்தின் விலை கிட்டத்தட்ட ஒன்றேகால் கோடி ரூபாய். அதுவும் தற்போதைய சூழ்நிலையில் ஐந்து ஆண்டுகள் வரையில்தான் இந்த இதயம் செயல்படும். தொடர் ஆராய்ச்சியில் இந்தச் செயற்கை இதயம், எல்லோரும் பயன்படுத்தும்வகையில் விலை குறைவானதாகவும், நீடித்து இயங்குவதாகவும் தயாரிக்கப்படும். இதற்குள், நம்முடைய ஸ்டெம் செல்லைப் பயன்படுத்தி, நம் இதயத்தையே மீண்டும் புதுப்பிக்கும் தொழில்நுட்பமும் வந்துவிடும் என்று நம்பிக்கை வார்க்கின்றனர் மருத்துவர்கள்.