சதாசிவம், சூலூர்.

'எனக்கு வயது 76. கடந்த வருடம் பைபாஸ் அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். தினமும் 45 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்கிறேன். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு எல்லாம் நார்மலாக உள்ளது. இந்த வயதிலும் ஆரோக்கியமாகத்தான் உணர்கிறேன். என் குடும்பத்தினர், 'உடல்நிலைதான் நன்றாக உள்ளதே, வாக்கிங் மட்டும் வேண்டாம். வீட்டிலேயே ஏதாவது பயிற்சிசெய்து கொள்ளுங்கள்’ என்கின்றனர். நான் தொடர்ந்து வாக்கிங் செல்லலாமா?'

டாக்டர் எம்.ஜெயராஜா,

இதயநோய் சிறப்பு மருத்துவர், சென்னை.

'தாராளமாக வாக்கிங் செல்லலாம். உங்களின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு எல்லாம் நார்மலாக உள்ளது. மேலும் உடலில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளீர்கள். இதில் இருந்து நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது. வாக்கிங் உள்ளிட்ட இதயத்துக்கான பயிற்சிகள் செய்யும்போது, இதயத்தில் கிளை ரத்தக் குழாய்கள் அதிகமாக உருவாகும் வாய்ப்பு உள்ளது. இது இதயத்துக்கு மிகவும் நல்லது. மேலும் இதய ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் நடைப்பயிற்சி உதவுகிறது. வாக்கிங் போவதற்கு வயது ஒரு தடையே கிடையாது. உடல்நிலை சரியான நிலையில் இருக்கும் யார் வேண்டுமானாலும் வாக்கிங் போகலாம். முதுமை அடையும் ஒருவர் தினசரி நடைப்பயிற்சி செய்யும்போது, உடலின் ரத்த ஓட்டம் சீராகி நோய்கள் வராமல் தடுக்கவும் உதவும். உங்கள் வயதில் இருக்கும் ஒருவர், நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 நிமிடங்கள் வரைக்கும் நடக்கலாம். குறைந்தபட்சம் வாரத்துக்கு மூன்று நாட்களாவது நடக்க வேண்டும். வாரத்தின் அனைத்து நாட்களும் நடைப்பயிற்சி செய்வது சிறந்தது.

வயது அதிகமாகும்போது, பொதுவாக உடல்நிலை பலவீனமாகிவிடும். எனவே, மிதமான வேகத்தில்தான் நடக்க வேண்டும். நடக்கும் நேரம்தான் முக்கியமே தவிர, தூரம் இல்லை. வெளி இடங்களில் நடைப்பயிற்சி செய்தாலும் சரி, வீட்டினுள் செய்தாலும் சரி மிதமான வேகத்தையே கடைப்பிடிக்க வேண்டும். வெளியில் போய் நடக்கும் சூழல் இல்லாதபோது, வீட்டுக்கு உள்ளேயே ட்ரெட் மில் மூலமாக நடைப்பயிற்சி செய்யலாம். கால் வலி உள்ளவர்கள் முடிந்தவரை இயந்திரத்தில் பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.'

காயத்ரி தேவி, மயிலாடுதுறை.

'எனக்கு வயது 45. தினமும் தலைசுற்றுகிறது. இப்படி அடிக்கடி தலைசுற்றல் இருந்தால், அது 'வெர்ட்டிகோ’ என்னும் நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என்கிறாள் என் தங்கை. 'வெர்ட்டிகோ’ நோய் பற்றி விளக்குங்கள் ப்ளீஸ்....'

டாக்டர் திலோத்தமா, நரம்பியல் நிபுணர், சென்னை.

''நம் உள் காதில் உள்ள வெஸ்டிபுளர் சிஸ்டத்தின் செயல் குறைபாடுதான், தலைசுற்றலுக்குக் காரணம். இதுவே தொடர் கிறுகிறுப்பை உண்டாக்கும் வெர்ட்டிகோ நோயாக வெளிப்படுகிறது. மேலும் மூளைக்குள் ஏற்படும் ஒருவிதமான சுழற்சி, அடிக்கடி தலைசுற்றலுடன் வாந்தி, மயக்கம், நிலைத்தன்மையில் தடுமாற்றம், மலச்சிக்கல், ஒற்றைத் தலைவலி, ஒவ்வாமை போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம். 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் அதிக அளவில் வருகிறது. தங்களுக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரை அணுகுவது அவசியம்.

கொழுப்புள்ள உணவு வகைகளைத் தவிர்த்து, கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம், இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம். குறிப்பிட்ட உடற்பயிற்சிகளும் நல்ல பலனைத் தரும். காலை எழுந்தவுடன், மேல், கீழ், இடது, வலது என பார்வையைச் சுழற்றி, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் உற்று நோக்குங்கள். தலையை முன்புறம், பின்புறம் நிமிர்த்தி வளைதல் என மாற்றி மாற்றிச் செய்யுங்கள். உட்கார்ந்த நிலையில் தோள்களைக் குலுக்கி முன்னும் பின்னும் அசைக்கலாம். நின்ற நிலையில், முழங்கால்களுக்குக் கீழே பந்தை ஒரு கையிலிருந்து மற்றொன்றுக்கு என மாற்றி மாற்றி வீசலாம். இவையெல்லாம் வெர்ட்டிகோ நோயை வராமல் தடுக்கும் பயிற்சிகள். ஆனால் உங்களுக்கு, தலைசுற்றல் பாதிப்பு இருக்கும்போது, இந்த உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. மருத்துவர் பரிந்துரைக்காத மருந்து ஏதாவது எடுத்துக்கொண்டால், சாப்பிடும் முன்பு அவரிடம் எப்போதுமே ஆலோசனை பெறவேண்டும்.''