Published:Updated:

'தொடங்கியது விகடன் 'உயிர் காக்கும் பயணம்'

ரத்ததான முகாமில் வாசகர்கள் நெகிழ்ச்சி

'தொடங்கியது விகடன் 'உயிர் காக்கும் பயணம்'
##~##

'டாக்டர் விகடனின்’ மூன்றாம் ஆண்டுப் பயணத்தில் இது இன்னும் ஒரு மைல் கல். டாக்டர் விகடன், பெருநகரங்கள் தோறும் தொடர்ந்து நடத்திவரும் மருத்துவ முகாம்கள், மக்களின் நன்மதிப்பைப் பெற்று வருகிறது. இதேபோல உயிர் காக்கும் ரத்த தான முகாம்களையும் நடத்த வேண்டும் என்று வாசகர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து வேண்டுகோள்கள். கடந்த ஜனவரி 25-ம் தேதி, சென்னையில் மூன்று இடங்களில் ரத்த தான முகாம்களை நடத்தி, 'உயிர் காக்கும் பயணம்’ தொடங்கினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரி, கே.கே.நகர் மீனாட்சி பொறியியல் கல்லூரி மற்றும் குரோம்பேட்டை ஹில்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய மூன்று இடங்கள் ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் இருந்து வந்து ரத்தத்தைத் தானமாகப் பெற்றனர்.

சங்கர நேத்ராலயாவில் இருந்து கண் தானத்துக்கும், அரசு கேடவர் டிரான்ஸ்பிளான்ட் புரோகிராமில் இருந்து உறுப்பு தானம் செய்ய விரும்புபவர்கள் பெயர் பதிவுசெய்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

'தொடங்கியது விகடன் 'உயிர் காக்கும் பயணம்'

முகாமில், நல்விதைகள், விவேகானந்தா இளைஞர் மன்றம், 'ஃப்ரெண்ட்ஸ் டூ சப்போர்ட்’ ஆகிய ரத்த தானம் பற்றிய விழிப்பு உணர்வுப் பிரசாரம் செய்து வரும் தன்னார்வக் குழுவினர்களும் கல்லூரி மாணவ மாணவியரும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். கண் தானம், உறுப்பு தானத்துக்கும் பதிவுசெய்தது, நெகிழவைத்தது. மதியம் 2 மணி வரை என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு மேலும் மக்கள் வந்து தங்கள் குருதியைக் கொடையாகத் தந்தது, மறைந்துவிடவில்லை மனிதநேயம் என்பதற்கோர் மகத்தான சாட்சி!

'தொடங்கியது விகடன் 'உயிர் காக்கும் பயணம்'

இந்த மூன்று முகாம்களிலும் சேர்த்து 700-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவர்களில் 400-க்கும் மேற்பட்டோரிடமிருந்து ரத்த தானம் பெறப்பட்டது. எடை குறைவு, ரத்த அழுத்தம், அனிமியா போன்ற பிரச்னைகள் காரணமாகப் பலரிடமிருந்து ரத்தம் தானமாகப் பெற முடியவில்லை. இருப்பினும் அவர்கள் ஆர்வத்துடன் கண் மற்றும் உடல் உறுப்பு தானப் படிவங்களைப் பூர்த்திசெய்து அளித்து நிறைவுடன் சென்றனர். மொத்தம் 620 பேர் உடல் உறுப்பு தானத்துக்குப் பதிந்துகொண்டனர்.  435 பேர் கண் தானத்துக்குப் பதிவுசெய்து கொண்டனர். பலர் பெற்றோரிடம் கேட்க வேண்டும் என்று விண்ணப்பம் வாங்கிச் சென்றனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன், சாலை விபத்தில் இறந்து, உறுப்பு தானத்தின் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் ஹிதேந்திரன். மூளைச் சாவு அடைந்த தன் மகனின் உடல் உறுப்புக்களைத் தானமாகத் தந்து மாநிலத்துக்கே முன்னோடியாகத் திகழ்பவர் ஹிதேந்திரனின் தந்தை டாக்டர் அசோகன். அவர், மூன்று முகாம்களுக்கும் வந்து தானங்களின்

'தொடங்கியது விகடன் 'உயிர் காக்கும் பயணம்'

முக்கியத்துவத்தை எடுத்துச் சொன்னதுடன், மாணவர்கள் மத்தியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் ''என் மகன் உயிரோடு இருந்திருந்தால், உங்களைப் போல டாக்டராகவோ இன்ஜினீயராகவோ ஆகியிருப்பான். எனக்கு ஏற்பட்ட நிலைமையைத் தயவுசெய்து உங்கள் அப்பா, அம்மாவுக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிடக் கூடாது... பைக்கை வேகமாகத் திருப்புவதற்கு முன், ஒரு நிமிடம் வீட்டில் உங்களுக்காகக் காத்திருக்கும் பெற்றோரை நினையுங்கள். ஹெல்மெட் அணிந்து ஓட்டுங்கள்... என் மகனின் கல்லீரல் பொருத்தப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பெண்மணிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது'' என்று சற்றே கண் கலங்கியவர், ரத்த தானம் செய்வதால், உடலுக்கு ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, பிரபலத் திரைப்படப் பாடலாசிரியர் மதன் கார்க்கி, மற்றும் சமூக ஆர்வலரும் திரைப்பட நடிகையுமான ரேவதி சங்கரன் உள்ளிட்டோர் இந்த முகாமில் கலந்துகொண்டு, ரத்த தானம் மற்றும் உறுப்பு தானம் செய்தவர்களை ஊக்கப்படுத்தினர்.

'தொடங்கியது விகடன் 'உயிர் காக்கும் பயணம்'
'தொடங்கியது விகடன் 'உயிர் காக்கும் பயணம்'

இரக்க குணம், மனிதாபிமானம் இவற்றுடன் சேர்த்து, காதலின் அர்த்தத்தையும் உணர்த்தியது கே.கே.நகர் ரத்த முகாமில் நடந்த ஒரு சம்பவம். கிட்டத்தட்ட 50 ஆண்டுக்காலத் திருமணப் பந்தத்தில் ஒற்றுமையாக வாழ்ந்துவருபவர்கள், சமூகத்துக்குத் தங்களால் ஏதேனும் செய்ய முடியுமா என்று யோசித்து முகாமுக்கு வந்திருந்தனர் ஜெயலட்சுமி (72) கல்யாணசுந்தரம் (75) தம்பதியினர். இறந்த பின் தன் கண் மற்றும் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அனுமதி எழுதிக்கொடுத்தனர். இந்த நேரத்திலும் ஒருமித்த கருத்துடன் தம்பதியினர் ஒற்றுமையாக வந்தது நெகிழ்த்தியது.

- டாக்டர் விகடன் டீம்