'மாறிவரும் வாழ்க்கைச் சூழலில், இன்று பலருக்கும் தூக்கம் என்பது ஏக்கமாகிப் போய்விட்டது. யாரும் இதை ஒரு பொருட்டாக நினைப்பது இல்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு, மனிதனின் ஒரு நாள் தூக்கம், எட்டு மணி நேரத்துக்கும் மேல் இருந்தது. பின்பு, அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, இன்று பலரும் ஆறு மணி நேரத் தூக்கம் என்பதே அதிகம் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டனர். நாள் ஒன்றுக்கு எவ்வளவு நேரம் தூக்கம் அவசியம் என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.

ஒரு நாளின் 24 மணி நேரத்தை எட்டு எட்டாகப் பிரித்துக்கொள்ளும்படி நாங்கள் பரிந்துரைக்கிறோம். எட்டு மணி நேரம் அலுவலகப் பணிக்கு, எட்டு மணி நேரம் குடும்பத்தினர்- நண்பர்களுடன் செலவிடுவதற்கு, எட்டு மணி நேரம் தூங்குவதற்கு. ஒருவர் இரவில் படுக்கச் சென்று, காலையில் எழுந்திருக்கும்போது கண் எரிச்சல் இன்றி, புத்துணர்வோடு அன்றைய வேலைகளில் ஈடுபட முடிகிறது என்றால், அது ஆரோக்கியமான தூக்கம்' என்கிறார், தூக்கத்துக்கான சிறப்பு நிபுணர் என்.ராமகிருஷ்ணன்.

போதுமான தூக்கமின்றித் தவிப்பவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார்.

'ஒருவர் நன்றாகத் தூங்குவதற்கு, சில எளிய விஷயங்களைச் செய்தாலே போதும். கேட்பதற்கு ரொம்பவும் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், இதைப் பின்பற்றினால் போதுமான, நிம்மதியான தூக்கம் கிடைப்பது நிச்சயம். நன்றாகத் தூக்கம் வர வேண்டும் என்று நினைப்பவர்கள், சூரியோதயத்தின்போது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். தூங்கச் செல்வதற்கு நான்கு, ஐந்து மணி நேரத்துக்கு முன் காபி, தேநீர், குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். சிலர், நான் என்னதான் காபி, டீ குடித்தாலும் நன்றாகத் தூங்கிவிடுவேன் என்பார்கள். ஆனால், அவர்களின் தூக்கத்தின் தரத்தில் பாதிப்பு இருக்கும்.

தூங்குவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு இரவு உணவை முடித்துவிட வேண்டும். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு பால், வாழைப் பழம், ஒருசில சொட்டுகள் தேன் சாப்பிடலாம். இதில், தூக்கத்தைத் தரக்கூடிய ரசாயனங்கள் உள்ளதால், இதைச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கச் செல்லலாம். அனைத்துக்கும் மேலாக, தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படுக்கச் சென்று, காலையில் சரியான நேரத்தில் எழுந்திருக்கும்போது, அது ஒரு பழக்கமாகவே மாறிவிடும்' என்கிறார் டாக்டர் என்.ராமகிருஷ்ணன்.

இரவில் பணிக்குச் செல்பவர்கள் தூக்கம் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

போதுமான அளவு, தரமான தூக்கம் இல்லை என்றால் பிரச்னையா?

தூக்கமின்மைக்கு மாத்திரை தீர்வாகுமா?

நன்றாகத் தூங்குவதற்கு டிப்ஸ் என்ன?

நீண்ட நேரம் தூங்குவது தப்பா?

இரவில் தூக்கம் தடைபடுவது ஏன்?

குறட்டை ஏன் ஏற்படுகிறது? தீர்வு என்ன?

தூக்கத்தில் பயங்கர கனவு ஏற்படுவது ஏன்?

சிறுவர்- சிறுமியர் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பிரச்னைக்கு என்ன தீர்வு?

- பா.பிரவீன்குமார், படம்: ஆ.முத்துக்குமார்