
நம்முடைய திசுக்களுக்கு, போதிய அளவு ஆக்ஸிஜனைக் கொண்டுசெல்ல முடியாதபடி, நம் ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதையே ரத்தசோகை என்கிறோம். அனீமியா பிரச்னை ஏற்பட்டிருந்தால், உடலின் முழு ஆற்றலும் இழந்ததைப் போன்று சோர்வுடனே இருப்பார்கள். பெரும்பாலும், பெண்களிடமே ரத்தசோகை அதிக அளவில் காணப்படுகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
##~## |
• யாருக்கு ஏற்படலாம்?
ஊட்டச் சத்துக் குறைபாடு
இரும்பு, வைட்டமின் பி-12, 1 போலேட் போன்ற ஊட்டச் சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு ரத்தசோகை ஏற்படலாம்.
• செரிமான மண்டலத்தில் பிரச்னை
சிறுகுடலில் ஏற்படும் சில நோய்கள் காரணமாக, ஊட்டச் சத்து கிரகித்தல் பாதிக்கப்படுவதால், ரத்தசோகை ஏற்படலாம்.
• மாதவிலக்கு
பொதுவாக, பெண்களுக்கு மாதவிலக்கின்போது அதிக அளவில் ரத்தம் வெளியேறுவதால், ரத்தசோகை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
• கர்ப்பம்
கர்ப்பக் காலத்தில் தாயின் ரத்த அளவு அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து ரத்தசோகை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
• இதர காரணங்கள்
ஆட்டோ இம்யூன், மது அருந்துதல், அதிக அளவில் மாத்திரை மருந்துகள் எடுத்துக்கொள்வது, நோய்த் தொற்று, ரத்த நோய்கள் உள்ளிட்ட வேறு பல காரணங்களாலும் ரத்தசோகை ஏற்படலாம்.
• டாக்டரை எப்போது சந்திக்க வேண்டும்
காரணம் இல்லாத சோர்வு, மயக்கம் ஏற்பட்டால், உடனடியாகச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். மயக்கத்துக்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம். எனவே, நீங்களாகவே உங்களுக்கு அனீமியா பிரச்னை உள்ளது என்று முடிவு செய்துகொள்ள வேண்டாம்.