Published:Updated:

நெஞ்சு எரிச்சலால் அவதியா?

நெஞ்சு எரிச்சலால் அவதியா?

நெஞ்சு எரிச்சலால் அவதியா?
நெஞ்சு எரிச்சலால் அவதியா?

பெயர் வெளியிட விரும்பாத வாசகி, திருவண்ணாமலை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நெஞ்சு எரிச்சலால் அவதியா?

'என் பத்து மாதக் குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் புகட்டி வருகிறேன். தற்போது தாய்ப்பாலுடன், சத்து மாவு உள்ளிட்ட வேறு சில திட உணவுகளையும் கொடுத்துவருகிறேன். குழந்தைக்கு ஒரு வயதான பிறகு தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்திவிடலாமா? தாய்ப்பால் சுரப்பும் எனக்குக் குறைந்துகொண்டே வருகிறது. ஆலோசனை கூறுங்கள்.'

டாக்டர் அருண்பாபு

குழந்தைகள் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி.

'குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஒரு வயது வரை கொஞ்சம் கொஞ்சமாக, திட உணவுடன் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர வேண்டும். ஒரு வயதுக்குப் பிறகு, தாயின் விருப்பத்தின் பேரில், தாய்ப்பால் கொடுப்பதைத் தொடரலாம். குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவதற்கு உச்சவரம்பு எதுவும் இல்லை. தாய்ப்பால் தொடர்ந்து அளிப்பதன் மூலம், குழந்தையின் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியும் கிடைக்கிறது. நிமோனியா, வயிற்றுப்போக்கு ஏற்படுவதைத் தடுக்கிறது. மூளையின் வளர்ச்சிக்கு உதவும் டி.எச்.ஏ. என்ற வேதிப்பொருள், தாய்ப்பாலில் உள்ளது.  குழந்தைக்கு ஒரு வயதான பிறகு, தாய்ப்பாலை நிறுத்த விரும்பினால், தாராளமாக நிறுத்திக்கொள்ளலாம். விருப்பப்பட்டால், தாய்ப்பால் கொடுப்பதைத் தொடரலாம்.'

நெஞ்சு எரிச்சலால் அவதியா?
##~##

என்.தமிழ்ச்செல்வன், மதுரை.

நெஞ்சு எரிச்சலால் அவதியா?

'எனக்கு 15 ஆண்டுகளாக நெஞ்சு எரிச்சல் இருக்கிறது. டாக்டரிடம் ஆலோசனை பெற்று மருந்து மாத்திரை சாப்பிட்டும் எந்தப் பலனும் இல்லை. இதனால் சரியாகச் சாப்பிடக்கூட முடியவில்லை. பசித்தாலும், நெஞ்சு எரிச்சல் பயத்தால் சாப்பிட முடியவில்லை. இதற்கு மாற்று மருத்துவத்தில் தீர்வு ஏதேனும் உண்டா?'

டாக்டர் சுபாஷ் சந்திரன்

சித்த மருத்துவர், திருநெல்வேலி.

'வயிறு புண்ணாகி இருப்பதும் நெஞ்சு எரிச்சலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதிகக் கார உணவு, துரித உணவு, கொறிக்கும் உணவு போன்றவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்வதாலும் நெஞ்சு எரிச்சல் வரலாம். ஒரு நேரத்து உணவுக்கும் அடுத்த நேர உணவுக்கும் இடைப்பட்ட இடைவெளி அதிகரித்தாலும் வயிற்றில் கூடுதலாக அமிலம் சுரந்து, அதன் காரணமாகவும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். நெஞ்சு எரிச்சல் இருந்தால், காரத்தைத் தவிர்க்க வேண்டும். மன அழுத்தம் கூட நெஞ்சு எரிச்சலை உருவாக்கலாம். அதனால் மனதை ஒருநிலைப்படுத்தும் முயற்சியாக யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது.

காய்கறி, பழங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். அதுவும் நீர்ச் சத்து அதிகம் இருக்கும் காய்கனிகள் மிகவும் உகந்தது. எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே தொடக் கூடாது. அகத்தை (வயிறு) சீர் செய்வதே சீரகம். சீரகத்தை உணவில் அதிகமாகச் சேர்க்கலாம். சீரகத்தைத் தண்ணீரில் சேர்த்து, அந்த நீரைக் குடித்து வருவதும் நலம் உண்டாகும்.

அடிக்கடி உணவில் சேர்க்கும் கார வகைகளைப் பட்டியலிட்டு, அதில் எந்த வகையான கார உணவைச் சாப்பிடும்போது தொல்லை ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடித்து, அதனைத் தவிர்க்கலாம். நாள்பட்ட நெஞ்சு எரிச்சல் நோய்க்கு, சித்த மருத்துவத்தில் நிறைய மருந்துகள் இருக்கின்றன. வில்வ மரத்தில் இருந்து எடுக்கப்படும் வில்லாதி லேகியம் நல்ல பலனைக் கொடுக்கும். அதனைத் தினமும் காலை, மாலை ஐந்து கிராம் எடுத்துக்கொண்டால், நெஞ்சு எரிச்சல் மறைந்துபோகும். தவிர, காவிக்கல் கரைச்சல் லேகியமும் நல்ல பலனைக் கொடுக்கும். சித்த மருத்துவர் ஒருவரைச் சந்தித்து ஆலோசனை பெற்று மருத்துவம் செய்தால், நெஞ்சு எரிச்சலில் இருந்து விடுபடலாம்.'