Published:Updated:

நலம், நலம் அறிய ஆவல்!

மூட்டு தேய்மானம் முற்றாமல் தடுக்கலாம்!

##~##

40-45 வயதைக் கடந்துவிட்டால் மெள்ள எட்டிப்பார்க்கும் பிரச்னை... கால் மூட்டு தேய்மானம். ஏன் வருகிறது, அதைத் தவிர்க்க வழிகள் உண்டா, வந்தால் என்ன சிகிச்சை எடுத்துக்கொள்வது என்பது போன்ற சந்தேகங்கள் அனைவருக்கும் வரும். பொதுவாக வரக்கூடிய கால் மற்றும் கை எலும்பு மூட்டுத் தேய்மானங்கள் பற்றி விரிவாகப் பதில் சொல்கிறார், சென்னை காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை பிரிவு இயக்குனரும், மூத்த மருத்துவருமான அரவிந்தன் செல்வராஜ்.

'மூட்டு வலியை, இளையவர்களுக்கு வரக்கூடியது, முதியவர்களுக்கு வரக்கூடியது என்று பிரிக்கலாம். இளம் வயதினருக்கு மூட்டுப் பிரச்னை வர முக்கியக் காரணம், விளையாட்டு. வாரத்துக்கு ஆறு நாட்களும் எந்த முன் பயிற்சியும் இன்றி இருந்துவிட்டு, திடீரென விடுமுறை நாளில் கிரிக்கெட், ஹாக்கி விளையாடச் சென்றுவிடுகின்றனர் இன்றைய இளைஞர்கள். இதனால் மூட்டுக்கள், குறுத்தெலும்புகள் பாதிக்கப்பட்டு மூட்டு வலி அவர்களைத் தாக்குகிறது. இது தவிர்க்கக்கூடியதுதான். போதுமான ஆரம்பகட்டப் பயிற்சிகள் செய்துவிட்டு விளையாடும்போது மூட்டு ஜவ்வு கிழிவு, குறுத்தெலும்பு தேய்மானம் போன்றவற்றைத் தவிர்க்க முடியும். இதேபோல, உடல் பருமனும் இன்றைக்கு இளைஞர்கள் மத்தியில் மூட்டு வலி ஏற்படக் காரணம்'' என்கிறார் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ்.

'ஒரே நாளில், அதிக தூரம் நடந்து, 500 - 1000 படிகள் ஏறி இறங்கியதால் வலித்தது என்றால், பிரச்னை இல்லை. ஆனால், ஐந்து நாட்களுக்கு மேல் மூட்டு வலி, இரவில் தாங்க முடியாத வலி தொடர்ந்தால் உடனடியாக எலும்பு மூட்டு மருத்துவரை அணுக வேண்டும்.

எலும்பு, மூட்டுப் பிரச்னையை மூன்று வகைகளாகப் பிரிக்கிறோம். ஆரம்பக் கட்டத்தில் உள்ளவர்கள் மருந்து மாத்திரைகள், பிசியோதெரப்பி பயிற்சிகளை எடுத்துக்கொள்வதன் மூலம் பிரச்னையில் இருந்து விடுபடலாம். இரண்டாவது கட்டப் பாதிப்பு என்றால், சாவித் துவார சிகிச்சை தேவைப்படும். முற்றிய நிலை என்றால், மூட்டு மாற்று அறுவைசிகிச்சைதான் செய்ய வேண்டியிருக்கும். எனவே, வலியைப் புறக்கணிக்காமல் ஆரம்பக் கட்டத்திலேயே டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

தினமும் குறைந்தது 20 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் மட்டுமே எலும்பு, மூட்டுப் பிரச்னையின்றி ஆரோக்கியமாக வாழலாம்.'

- பா.பிரவீன் குமார், படம்: சொ.பாலசுப்ரமணியன்

நலம், நலம் அறிய ஆவல்!

மூட்டு வலி ஏற்படக் காரணம் என்ன?

நலம், நலம் அறிய ஆவல்!

உடல் பருமனுக்கும் மூட்டு வலிக்கும் என்ன சம்பந்தம்?

நலம், நலம் அறிய ஆவல்!

 மூட்டு வலியைத் தவிர்க்க முடியுமா?

நலம், நலம் அறிய ஆவல்!

 ஆரம்பக் கட்டத்தில் மூட்டு வலியைக் கண்டறிவது எப்படி?

நலம், நலம் அறிய ஆவல்!

 மருந்து மாத்திரைகளால் மூட்டு தேய்மானத்தை சரிப்படுத்த முடியுமா?

நலம், நலம் அறிய ஆவல்!

 மூட்டு மாற்று அறுவைசிகிச்சை சந்தேகங்கள் மற்றும் தீர்வுகள்...?

நலம், நலம் அறிய ஆவல்!

 தோள்பட்டை வலி ஏன் ஏற்படுகிறது?

நலம், நலம் அறிய ஆவல்!

 தோள்பட்டை இறக்கம், இறுகுதல் பிரச்னைக்கு தீர்வு உண்டா?

நலம், நலம் அறிய ஆவல்!

 கம்ப்யூட்டரில் பணிபுரிபவர்களுக்கு மணிக்கட்டுப் பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்க முடியுமா?

நலம், நலம் அறிய ஆவல்!