Published:Updated:

உடல் எடையைக் குறைக்குமா உண்ணா விரதம்?

உடல் எடையைக் குறைக்குமா உண்ணா விரதம்?

உடல் எடையைக் குறைக்குமா உண்ணா விரதம்?

உடல் எடையைக் குறைக்குமா உண்ணா விரதம்?

Published:Updated:
உடல் எடையைக் குறைக்குமா உண்ணா விரதம்?

ஜி.தாரிணி, சென்னை

'23 வயதான நான் உடலை 'ஃபிட்டாக’ வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக, அவ்வப்போது சாப்பிடாமல் இருப்பேன். இது சரியா? உண்ணா நோன்பு இருப்பதால் உடலுக்கு ஏதாவது பிரச்னை வருமா?'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாமினி, டயட்டீஷியன், சென்னை

'சீக்கிரத்தில் எடை குறைய வேண்டும் என்று பலரும் உண்ணாவிரதம் இருப்பார்கள். ஆனால்

உடல் எடையைக் குறைக்குமா உண்ணா விரதம்?

மருத்துவர்களும், என்னைப் போன்ற உணவு ஊட்டச்சத்து நிபுணர்களும் உண்ணாவிரதம் இருப்பதைக் கடுமையாக எதிர்க்கின்றோம். எடை இழக்க உண்ணாவிரதம் சிறந்த வழி அல்ல. உண்ணாமல் இருப்பது ஒருவரின் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய விஷயம். இரவில் ஆறு முதல் எட்டு மணி நேரத்துக்கு தூங்குகிறோம். இந்த நேரத்தில் எந்த உணவையும் நாம் எடுத்துக்கொள்வது இல்லை. இது இயற்கை செயல்பாடு என்பதால் உடலுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. காலை விழித்ததும் காலை உணவைக் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நீண்ட நேரம் உண்ணாமல் இருந்ததைத் தடுப்பதால்தான், காலை உணவை 'பிரேக்ஃபாஸ்ட்’ என்றே கூறுகிறோம். ஆனால், பலரும் உடல் எடையைக் குறைக்க காலை உணவைத் தவிர்க்கின்றனர். இது மிகத் தவறான பழக்கம். நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து சாப்பிடும்போது அளவில்லாமல் சாப்பிடுவார்கள். இதனால், உணவை நன்கு மெல்லாமல், ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படும். சாப்பிடாமல் இருப்பதால் ஹைபர்கிளைசிமியா (Hyperglycemia)  எனப்படும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு, நடுக்கம் போன்ற பிரச்னைகள் வர அதிக வாய்ப்புள்ளது. முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள், சர்க்கரை நோயாளிகள் ஒருபோதும் உண்ணா நோன்பு இருக்கவே கூடாது.'

வி.ராமகிருஷ்ணன், திருத்தணி

'என் அப்பாவுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. அதனால், நான் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன். இஞ்சிச் சாறுடன் வெங்காயச் சாறைக் கலந்து குடித்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் என்று சொல்கிறார்களே, இது உண்மையா? சர்க்கரை அளவு குறைய, தொடர்ந்து இதைக் குடிக்கலாமா?''

டாக்டர் ரமேஷ், சித்த மருத்துவர், திருநெல்வேலி

உடல் எடையைக் குறைக்குமா உண்ணா விரதம்?

'ஞ்சிச் சாறுடன் வெங்காயச் சாறைக் கலந்து குடிப்பது சர்க்கரை நோய்க்கு உகந்தது. இருந்தாலும் இந்த இரு சாறுகளும் சில பக்க விளைவுகளை உருவாக்கக்கூடியது என்பதைப் புரிந்துகொண்டு, தொடர்ந்து அதனைக் குடிப்பதைத் தவிர்க்கவேண்டும். இஞ்சிச் சாறை நீண்ட நாட்கள் பருகினால் இரைப்பை மற்றும் குடலில் புண் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. மேலும், தோலில் தடிப்புத் தன்மை ஏற்படும். சித்த மருத்துவத்தைப் பொருத்தவரை, இஞ்சி என்பது காயகல்ப மருந்தாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதனை உரிய முறையில் பக்குவப்படுத்தி, மேலும் சில பொருட்களுடன் கலந்தே நோயாளிகளுக்குக் கொடுக்கப்படுகிறது. இஞ்சிச் சாறு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் சக்தி உடையது என்றாலும் கவனமுடன் பயன்படுத்துவது நல்லது.

உடல் எடையைக் குறைக்குமா உண்ணா விரதம்?

வெங்காயச் சாறு வாந்தியை உடனடியாக நிறுத்தக்கூடியது. உடல் வெப்பத்தைக் குறைக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்கும். வாய்ப்புண், பேதி போன்றவை உடனே குணமாகும். வெங்காயக் குடிநீர் நீர்க்கடுப்பைத் தடுக்கும். புகைபிடிப்பவர்கள் வெங்காயச் சாறு உட்கொள்வது நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கும் வெங்காயச் சாறு நல்ல பலனைக் கொடுக்கும். தினமும் 100 மி.லி சாறு பருகினால் ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவு கணிசமாகக் குறையும். ஆனாலும், தொடர்ந்து இந்த சாறைப் பருகி வந்தால் அலர்ஜி, வாய்ப் பகுதியில் வீக்கம், மூச்சு விடும்போது துர்நாற்றம் ஏற்படுவது போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். அதனால், இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு ஆகியவை சர்க்கரை நோய்க்கு உகந்தது என்றாலும், அவற்றைச் சித்த மருத்துவரின் பரிந்துரைப்படி உட்கொள்வது மட்டுமே சரியானது''.

  உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:

 கன்சல்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002.

doctor@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism