'ட்வின்ஸ்’ மேளா!

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் கடந்த மார்ச் 2-ம் தேதி, 'ட்வின்ஸ் ஃபீஸ்ட் 2014' என்ற

பெயரில் இரட்டைக் குழந்தைகள் ஒன்றுகூடல் விழா நடந்தது. எங்கு பார்த்தாலும், அச்சு அசலாக ஒரே உருவ அமைப்பு கொண்ட அழகழகான இரட்டை குழந்தைகள்...! இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமரன் கூறுகையில், 'இந்த நிகழ்ச்சியில் 40 ஜோடி இரட்டைக் குழந்தைகள் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆறு வருடங்களில் என்னால் பிரசவம் பார்க்கப்பட்டு பிறந்த இரட்டைக் குழந்தைகள் இவர்கள். இவர்களை ஒருசேரப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். பெரும்பாலானவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. தொடர்புகொள்ள முடிந்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். கருவைச் சுமக்கும் தாய்க்கு மட்டுமல்ல, பிரசவம் பார்க்கும்போது எங்களுக்கும் அது மிகக் கடுமையான தருணம். பெற்ற தாயைப் போலவே குழந்தைகளைப் பாதுகாப்பாக வெளியே எடுத்ததும் நாங்கள் அடையும் ஆனந்தத்துக்கு அளவே இல்லை' என்றார். நிகழ்ச்சியில் இரட்டைக் குழந்தைகளை வளர்ப்பது பற்றிய சந்தேகங்களுக்கு டாக்டர்கள் விளக்கம் அளித்தனர். இதுதவிர, குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

பெண்கள் ஆரோக்கியம்... வேண்டாம் அலட்சியம்!

வேலைக்கு செல்லும் நான்கு பெண்களில் மூன்று பேர் ஏதோ ஒரு வகையில் ஆரோக்கியக் குறைபாட்டுக்கு ஆளாகின்றனர் என்று திடுக்கிடும் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது அசோசியேட்டட் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்டு இன்டஸ்ட்ரீஸ் என்ற அமைப்பு. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட 10 பெருநகரங்களில், ஆய்வை நடத்தியது இந்த அமைப்பு. இதில் 78 சதவிகித வேலைக்கு செல்லும் பெண்கள் ஏதேனும் ஓரு உடல் நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதிலும் குறிப்பாக 32 முதல் 58 வயதுக்குட்பட்ட பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது இந்த ஆய்வு. 42 சதவிகிதப் பெண்கள் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள், முதுகுவலி போன்ற வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளாலும், 22 சதவிகித பெண்கள் 'க்ரானிக்’ எனப்படும் நீண்ட கால உடல் நலக் குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

எய்ட்ஸுக்கு மருந்து

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் மிசிசிபியில் எச்.ஐ.வி. தொற்று உள்ள பெண்மணிக்குப் பிறந்த குழந்தைக்கும் எச்.ஐ.வி. இருப்பதை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் அந்த பச்சிளம் சிசுவுக்கு மிகக் கடுமையான ஆன்டிவைரல் மருந்து செலுத்தப்பட்டது. மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில் அந்தக் குழந்தையைப் பரிசோதித்தனர். குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று இருந்ததற்கான அடையாளமே இல்லை. இனி அந்தக் குழந்தை எச்.ஐ.வி. பயமின்றி வாழலாம் என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கலிஃபோர்னியாவில், பிறந்து நான்கு மணி நேரத்துக்குப் பிறகு ஆன்டிவைரல் மருந்து அளிக்கப்பட்டது. அந்தக் குழந்தைக்கு 11-வது நாள் மற்றும் ஒன்பதாவது மாதத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கிருமித் தொற்று இல்லை. இருப்பினும் அந்தக் குழந்தை இன்னும் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளது. இந்த இரண்டு சிகிச்சைகளும் உலகம் முழுக்க உள்ள மருத்துவர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த மிசிசிபி மாடல் சிகிச்சை பற்றித் தொடர்ந்து பல ஆய்வுகள் நடத்த வேண்டும் என்று டாக்டர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு புதிய சிகிச்சை முறையை உருவாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புகை... உயிருக்குப் பகை!

உலக அளவில் தவிர்க்கக்கூடிய உயிரிழப்பில், முதல் இடத்தில் இருப்பது புகையிலைப் பழக்கம். சிகரெட் பழக்கத்தால் கடந்த நூற்றாண்டில் மட்டும் 10 கோடி பேர் உயிரிழந்துள்ளனர். அதிகரித்து வரும் புகையிலைப் பழக்கத்தால் இந்த நூற்றாண்டில் இது 100 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சிகரெட் பழக்கத்தை நிறுத்தினால் ஆண்டுக்கு 50 லட்சம் உயிரிழப்புக்களை தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இதுமட்டுமல்ல, புகையிலைப் பழக்கத்தை நிறுத்துவதன் மூலம் இரண்டாம் நிலைப் புகையிலைப் பழக்கத்தால் ஏற்படக்கூடிய 6 லட்சம் உயிரிழப்புக்களையும் தடுக்க முடியும். சிகரெட் பிடிக்கும்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுக்கள் நம் உடலுக்குள் செல்கின்றன. இதில் 69 ரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை.