'இதய நோய்கள் வருவதற்கு உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சி இன்மை, கொழுப்புள்ள உணவை எடுத்துக்கொள்வது, மரபியல் என்று ஏராளமான காரணங்கள் உள்ளன. தவிர, சிகரெட், மது, மன அழுத்தம் என வேறு சில முக்கியக் காரணங்களும் உள்ளன. ரத்தத்தில் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால், சிகரெட், மதுப் பழக்கத்தை நிறுத்துவதன் மூலம் இதனால் ஏற்படக்கூடிய இதயப் பாதிப்புகளை முற்றிலுமாகத் தடுக்க முடியும்.

சிகரெட் புகைக்கும்போது இதய ரத்தக் குழாய்கள் சுருங்குகின்றன... ரத்தம் உறையும் தன்மை அதிகமாகிறது. என்னதான் மருந்து, மாத்திரை, உணவுப் பழக்கவழக்கம் என்று ஆரோக்கியம் காத்தாலும், சிகரெட் பிடிக்கும் பழக்கம் இவை அனைத்தையுமே கெடுத்துவிடுகிறது. சிகரெட் பழக்கத்தை நிறுத்தினால் பாதிப்புகள் மறைய 10 ஆண்டுகள் ஆகும் என்று அறிவியல் கூறுகிறது. ஆனால், அதை நிறுத்திய ஐந்தாவது நிமிடத்தில் இருந்தே உங்களுக்கு பலன் கிடைக்க ஆரம்பித்துவிடுகிறது' என்கிறார் இதய நோய் சிகிச்சை நிபுணர் பேராசிரியர் டி.ஆர்.முரளிதரன்.

இதய நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்களைப் பட்டியலிட்ட டாக்டர், மாரடைப்பு பற்றிப் பேசுகையில், 'அம்மாவின் வயிற்றில் கருத்தரித்த 19-வது நாளில் துடிக்க ஆரம்பிக்கும் இதயம், இறப்பு வரை ஓய்வின்றித் துடிக்கும். இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் துடிக்க மறந்தால் மயக்க நிலை ஏற்படுகிறது, 10 நிமிடங்களில் மூளை செயல் இழக்கிறது. அதன் பிறகு மரணம் நிகழ்கிறது. நம் கை, கால் தசைகளைப் போல இதயமும் ஒரு தசைதான். உடல் முழுவதற்கும் ரத்ததத்தை பம்ப் செய்தாலும், அது இயங்கவும் ரத்தம் தேவைப்படுகிறது. இதயத் தசைக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதையே மாரடைப்பு என்கிறோம்.

100-ல் 50 பேருக்கு மாரடைப்பு ஏற்படும்போது, நெஞ்சில் யாரோ ஏறி மிதிப்பது போன்ற கடுமையான வலி இருக்கும். இந்த வலி கழுத்து, கை, முதுகுப் பக்கம்கூட இருக்கலாம். உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் ஏற்பட்டு, உடனே மருத்துவ மனைக்கு வந்துவிடுவார்கள். 30 சதவிகிதம் பேருக்கு வலி தெரிவது இல்லை. நெஞ்சு எரிச்சல் போல இருக்கும், விக்கல் இருக்கும், கை வலிப்பது போல இருக்கும். 'பல் வலி’ என்றுகூட பல் மருத்துவரிடம் சென்றுவந்தவர்களும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த அறிகுறிகளைப் புறக்கணிப்பதால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும் ஏதேனும் ஒருவகையில் மருத்துவமனைக்கு வந்துவிடுகின்றனர். 20 சதவிகிதம் பேருக்கு எந்த அறிகுறியும் இருப்பதில்லை. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு... சிலருக்கு மூச்சுத் தினறல் இருக்கலாம். இதனால் இதயம் செயல் இழந்து பல வகையான பாதிப்புக்கு ஆளாகின்றனர்' என்று எச்சரிக்கை விடுக்கிறார் டாக்டர் முரளிதரன்.

- பா.பிரவீன் குமார், படம்: வீ.நாகமணி