Published:Updated:

டாக்டர் விகடனின் நாடி பிடித்து நலம் விசாரிப்பும் நெகிழ்ந்து உருகிய கடலூர் வாசிகளும்...

டாக்டர் விகடனின் நாடி பிடித்து நலம் விசாரிப்பும் நெகிழ்ந்து உருகிய கடலூர் வாசிகளும்...

டாக்டர் விகடனின் நாடி பிடித்து நலம் விசாரிப்பும் நெகிழ்ந்து உருகிய கடலூர் வாசிகளும்...

டாக்டர் விகடனின் நாடி பிடித்து நலம் விசாரிப்பும் நெகிழ்ந்து உருகிய கடலூர் வாசிகளும்...

Published:Updated:
டாக்டர் விகடனின் நாடி பிடித்து நலம் விசாரிப்பும் நெகிழ்ந்து உருகிய கடலூர் வாசிகளும்...

தானே புயல் கடலூரைத் தாக்கியபோது, 'உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்’ என்று முதலில் மருத்துவ முகாமை நடத்தியது டாக்டர் விகடன். பத்திரக்கோட்டையில் தொடங்கி சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சை, திருப்பூர், புதுச்சேரி போன்ற பல ஊர்களில் டாக்டர் விகடனின் மருத்துவச் சேவைப்  பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த மார்ச் 9-ம் தேதி, கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் பள்ளி வளாகத்தில், டாக்டர் விகடனும் புதுச்சேரி எம்.வி.ஆர். மருத்துவ மையமும் இணைந்து, மருத்துவ முகாமை நடத்தியது.

டாக்டர் விகடனின் நாடி பிடித்து நலம் விசாரிப்பும் நெகிழ்ந்து உருகிய கடலூர் வாசிகளும்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலை 9 மணிக்கு முகாம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காலை 8 மணிக்கே  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரளாக வந்தது, விகடன் மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது. முகாமில் எம்.வி.ஆர். மருத்துவ மையத்தைச் சேர்ந்த சர்க்கரை நோய், இதயம், நுரையீரல், சிறுநீரகம், மகளிர் - மகப்பேறு, எலும்பு மூட்டு, பொது அறுவைசிகிச்சை, பல் என 10-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு, வந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் கடலூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி விழுப்புரம், புதுச்சேரி பாகூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து கலந்துகொண்டனர்.

முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் ரத்தத்தில் சர்க்கரை, ரத்த அழுத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, பொது மருத்துவரிடம் ஆலோசனை பெறப்பட்டு, அதன் அடிப்படையில் சிறப்பு மருத்துவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர். தேவைப்பட்டவர்களுக்கு ஈ.சி.ஜி., எக்கோ, அல்ட்ரா சவுண்ட், பி.எம்.டி. (எலும்பு அடர்த்தி கண்டறியும் பரிசோதனை), நுரையீரல் திறன் பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாகச் செய்யப்பட்டன. இவை தவிர, பி.எம்.ஐ., ரத்தச் சோகை உள்ள பெண்களுக்கு அவற்றைக் கண்டறியும் பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.

முகாமில் கலந்துகொண்ட சரசு என்பவர் கூறுகையில், 'ரொம்ப நாளா மூட்டு வலியோட அவஸ்தைப்பட்டு வந்தேன். ஆஸ்பத்திரிக்குக்கூடப் போக முடியலை. டாக்டர் விகடனைப் படிச்சிட்டு என் மகன்தான் இங்கே கூட்டிட்டு வந்தான். எனக்கு இங்க எல்லா டெஸ்ட்டும் எடுத்தாங்க. பிரச்னையை அனுசரணையா கேட்டாங்க. சில டெஸ்ட் செஞ்சு பார்த்துட்டு, மூட்டுத் தேய்மானமானத்துக்கு மேல்சிகிச்சை எடுத்துக்கலாம்னு சொன்னாங்க. முகாமுக்கு வந்ததாலதான் எனக்கு என்ன பிரச்னைன்னு தெரியவந்தது. இதுக்கு உதவிய விகடனுக்கு ரொம்ப நன்றிங்க!' என்றார்.

கடலூரைச் சேர்ந்த கோவிந்தன், 'எனக்கு அப்பப்ப மயக்கம் வரும். சுகர் பிரச்னை இருக்குமோன்னு ரொம்ப நாளா பயந்திட்டு இருந்தேன். இங்கே வந்து பரிசோதனை செஞ்சு பார்த்தேன். ஆனா, சர்க்கரை அளவு எல்லாம் சரியாத்தான் இருக்குன்னு சொல்லிட்டாங்க. மயக்கத்துக்கு என்ன காரணம்னு செக் பண்ணனும்னு சொல்லியிருக்காங்க. இப்ப பயம் போயிடுச்சு... ரொம்ப நிம்மதியா இருக்கேன். இதுபோல நிறைய முகாம்களை விகடன் நடத்தணும். இதுபோல நிறைய டாக்டருங்க வந்து மக்களுக்குச் சேவை செய்யணும்'' என்றார்.

டாக்டர் விகடனின் நாடி பிடித்து நலம் விசாரிப்பும் நெகிழ்ந்து உருகிய கடலூர் வாசிகளும்...

மன மகிழ்ச்சி தந்த நிறைவான சேவை!

முகாமில் கலந்துகொண்டு சிகிச்சை அளித்த டாக்டர் எம்.ஆர்.வித்யா, 'தேர்வு நேரமாக இருக்கே, மக்கள் வருவார்களா? என்று சந்தேகமாக இருந்தது. ஆனால், அதிக அளவில் மக்கள் வந்திருந்தனர். முகாமில் கலந்துகொண்டவர்களில், பலருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 400-500-க்கு மேல் இருந்தது. தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதையே தெரியாமல் இவர்கள் இருந்திருக்கின்றனர். 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் இருப்பதையும் கண்டறிந்தோம். இவர்களுக்கு, வேறு பரிசோதனைகளுக்குப் பரிந்துரைத்ததுடன், சர்க்கரை நோயை வராமல் தடுப்பது எப்படி என்றும் கவுன்சலிங் கொடுத்தோம்.

டாக்டர் விகடனின் நாடி பிடித்து நலம் விசாரிப்பும் நெகிழ்ந்து உருகிய கடலூர் வாசிகளும்...

ஏழு பேருக்கு பித்தப்பையில் கல் இருப்தைக் கண்டறிந்து, மேல் சிகிச்சைக்குப் பரிந்துரைத்தோம். இதேபோல சிறுநீரகக் கல், சினைப்பையில் கட்டி இருப்பதையும் கண்டறிந்து, அவர்களுக்கு மேல்சிகிச்சைக்குப் பரிந்துரைத்துள்ளோம். முகாமில் பி.எம்.டி. பரிசோதனை செய்ததன்மூலம் பலருக்கும் எலும்பு அடர்த்திக் குறைவு பிரச்னை இருந்தது. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், தவிர்ப்பு வழிகளைப் பரிந்துரைத்தோம். எங்கள் மருத்துவமனையின் 3-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில், பலருக்கு இலவசமாகச் சேவை புரிந்திருக்கிறோம் என்ற மன நிறைவே மகிழ்ச்சியைத் தருகிறது' என்றார்.

- டாக்டர் விகடன் டீம்

படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism