ஸ்பெஷல்
Published:Updated:

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!

'ந்ததியை உருவாக்க, மகிழ்ச்சியாக இருக்க, உறவுமுறையைப் பெருக்க என்று மூன்று முக்கிய காரணங்களுக்காக தம்பதியருக்குள் தாம்பத்திய உறவு நிகழ்கிறது. இதில், ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்லாமை, சந்தேகம், செயல் திறனில் குறைவு, பாராபீலியா (paraphilia) எனப்படும் இயல்புக்கு மீறிய நிலை ஆகியவற்றால் பிரச்னைகள் ஏற்படுகின்றன' என்கிறார் பாலியல் மருத்துவ நிபுணர்  டி.நாராயண ரெட்டி.

நலம், நலம் அறிய ஆவல்!

'ஒரு ஆண் 13-14 வயதில் பருவத்துக்கு வருகிறான். அவனுக்கு அந்தப் பருவத்தில் பாலியல் உணர்வுகள் தோன்றுகின்றன. அந்த வயதில் அவனது பாலியல் தேவைகளை, சமுதாயம் அங்கீகரித்த 'திருமணம்’ என்ற நியாயமான முறைப்படியும் பெற முடியாது. படிக்க வேண்டும்; நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும்; கை நிறையச் சம்பாதித்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும்; அக்கா, தங்கை இருந்தால் முதலில் அவர்களுக்கும் திருமணம் முடிக்க வேண்டும்... போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும். இந்த நேரத்தில்தான், அந்த ஆண், தன் பாலியல் தேவையைப் பூர்த்திசெய்ய சுய இன்பப் பழக்கத்தில் ஈடுபடுகிறான். ஆனால், நாம் தவறு செய்கிறோமோ, இதனால் எதிர்காலத்தில் குடும்ப வாழ்வில் ஈடுபட முடியாதோ, குழந்தை பிறக்காதோ என்று ஆயிரம் சந்தேகங்கள் அவனுக்குள் முளைக்கின்றன. இதேபோன்று ஒரு சொட்டு விந்து அணு உற்பத்தியாக 8 சொட்டுகள் ரத்தம் தேவை என்பது போன்று ஏராளமானக் கட்டுக்கதைகளும், சந்தேகங்களும் எழும்பும்.  

ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் எனில், கணிதம், அறிவியல் என்று பல பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு ஆசிரியர் தேவைப்படுகிறார். ஆனால், செக்ஸ் பற்றி பெற்றோரும் சொல்லித் தருவதும் இல்லை. பள்ளிக் கூடங்களிலும் சொல்லித் தருவதும் இல்லை. இதனால், கடைசியில் இவர்கள் சென்று சேரும் இடம் போலி மருத்துவர்களின் கூடாரமாக இருக்கிறது' என்கிறார்!

இதேபோன்று திருமண பந்தம் முடிந்து ஒருவருக்கு ஒருவர் அனுசரியாமை, செயல் திறன் குறைவு பற்றி பேசும்போது, 'இன்றைக்கு 'இம்பொடென்ஸ்’ (impotence) என்ற வார்த்தைக்குச் சரியான தமிழ்ச் சொல் இல்லை. இதனால் 'ஆண்மையற்றவன்’ என்று கூறுகிறார்கள். இது அபத்தமானது; அர்த்தமற்றது. 'ஒருவர், ஆணா, பெண்ணா என்பதை 11 அறிகுறிகளை வைத்துச் சொல்ல முடியும்’ என்று மருத்துவம் கூறுகிறது. இப்படி இருக்கையில், வெறும் செக்ஸ் உறவில் ஈடுபட முடியவில்லை... ஈடுபட்டாலும் குழந்தை பெற்றெடுக்க முடியவில்லை... குழந்தை பிறந்தாலும், விறைப்புத்தன்மை குறைவாக உள்ளது என்பது போன்ற காரணங்களுக்காக ஆண்மையற்றவன் என்று கூறுவது அபத்தமானது. இப்போதைய நவீன மருத்துவத்தில், மேலே சொன்ன அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வுகள் உள்ளன' என்று நம்பிக்கை வார்க்கிறார் டாக்டர் டி.நாராயண ரெட்டி.

- பா.பிரவீன் குமார்,

படம்: சொ.பாலசுப்பிரமணியன்

நலம், நலம் அறிய ஆவல்!