ஸ்பெஷல்
Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

 நோ யூஸ்... இசிகரெட்!

'சிகரெட் பழக்கத்தை நிறுத்தணுமா? இ-சிகரெட்டுக்கு மாறுங்க' என்று விளம்பரங்களைப்

அக்கம் பக்கம்

பார்க்கிறோம். சிகரெட் புகைப்பதை நிறுத்த ஆசைப்படும் பலரும் வாங்கி முயற்சிப்பது இ-சிகரெட். ஆனால், இந்த இ-சிகரெட்டுக்கு மாறியவர்கள் ஓராண்டுக்குப் பிறகும் கூட சிகரெட் பிடிப்பதை நிறுத்துவது இல்லை, ஏன் பயன்படுத்தும் அளவைக்கூட குறைப்பது இல்லை என்கிறது 'ஜம்மா இன்டேர்னல் மெடிசின்’ ஆய்வு. அமெரிக்காவில் 2011-ம் ஆண்டில் சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ள 949 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் குறிப்பிடத்தகுந்த அளவு இ-சிகரெட் பழக்கத்துக்கு மாறியவர்களும் இருந்தனர். ஓராண்டுக்குப் பிறகு இ-சிகரெட் பழக்கத்துக்கு மாறியவர்களில் எத்தனை பேர் சிகரெட் பழக்கத்தை கைவிட்டள்ளனர் என்று ஆய்வு நடத்தப்பட்டது. முடிவு எதிர்பார்ப்புக்கு மாறாக இருந்தது. சிகரெட் பழக்கத்தில் இருந்து விடுபட இ-சிகரெட் எந்த வகையிலும் உதவவில்லை என்பதே அது.  இதன்மூலம், சிகரெட் விளம்பரங்களை மட்டுமல்ல, இ-சிகரெட்டை ஆதரிக்கும் விளம்பரங்களையும் கூட தடை செய்ய வேண்டும் என்று விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக்கம் பக்கம்

  கர்ப்பத்தைத் தடுக்கும் மன அழுத்தம்

அக்கம் பக்கம்

மன அழுத்தம், பெண்கள் கருத்தரிப்பதற்கான வாய்ப்பை 30 சதவிகிதம் குறைப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மன அழுத்தம் இல்லாத பெண்களைக் காட்டிலும், மன அழுத்தம் உள்ள பெண்களுக்கு குழந்தைப் பேறுக்கான வாய்ப்பு மிகமிகக் குறைவாக உள்ளதாக அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது. கருத்தரிக்க முயற்சிக்கும் 400 பெண்களிடம் மேற்கொண்ட இந்த ஆய்வில்,  மன அழுத்தத்தை அறிய உதவும் ஆல்பா-அமிலேஸ் (alpha-amylase) அதிகமாக இருந்த பெண்களுக்குக் கருத்தரிப்புக்கான வாய்ப்பு குறைவாக இருந்தது. இதுவே, குறைவாக இருந்தவர்கள் விரைவில் கருத்தரித்தனர். மன அழுத்தம் நீடித்தால், பெண்களுக்கு குழந்தைப்பேறுக்கான வாய்ப்பு முற்றிலும் தடைப்பட்டு போகவும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கருக்குழாய் அடைப்பு, முட்டை வெளியேறுவதில் பிரச்னை, ஆண்களுக்கு விந்து அணுக்களின் தரம் குறைவாக இருப்பது, எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு மன அழுத்தம் முக்கிய காரணமாக இருக்கிறது.

அக்கம் பக்கம்

 காற்றில் மாசு: பலி 70 லட்சம் பேர்!

காற்று மாசு காரணமாக கடந்த 2012-ம் ஆண்டில் மட்டும் 70 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும், இதி

அக்கம் பக்கம்

ல் 60 லட்சம் பேர் தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்ற 'பகீர்’ தகவலை வெளியிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம்.  

உலக அளவில் நிகழும் 8-ல் ஒரு மரணத்துக்கும் காற்று மாசுக்கும் தொடர்பு உண்டு என்கிறது இந்த ஆய்வு. உலக சுகாதார நிறுவனத்தின் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் இயக்குனர் டாக்டர் மரியா கூறுகையில், 'காற்று மாசால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் முன்பு கணிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளன. உலக அளவில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நாம் சுவாசிக்கும் காற்றைச் சுத்தப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் லட்சக்கணக்கானவர்களின் உயிரைக் காப்பாற்றலாம்' என்றார். காற்று மாசு காரணமாக இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்பட்டு 40 சதவிகிதம் பேரும், சுவாசக் குழாய் பிரச்னை காரணமாக 11 சதவிகிதம் பேரும், நுரையீரல் புற்று«நாய் காரணமாக ஆறு சதவிகிதம் பேரும் உயிரிழந்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

அக்கம் பக்கம்

 பைபாஸ்... ஹா(ர்)ட் நியூஸ்!

அக்கம் பக்கம்

இதய ரத்தக் குழாயில் ஏற்பட்ட 17 அடைப்புகளுக்கு, 12 பைபாஸ் கிராஃப்ட்ஸ் அறுவைசிகிச்சை செய்து மும்பையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த 58 வயதான மிட்டாலால் தோகா, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு ஆஞ்ஜியோ பரிசோதனை செய்தபோது, வியப்பூட்டும் விஷயத்தை கண்டறிந்தனர். பொதுவாக இதயத்துக்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்தக் குழாய்கள் மூன்றுதான் இருக்கும். ஆனால், இவருக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்ததால் 12-க்கும் மேற்பட்ட, ஒரு மி.மீ-க்கும் குறைவான சிறிய சிறிய ரத்தக் குழாய்கள் உருவாகியிருந்தன. இவை அனைத்திலும் சேர்த்து மொத்தம் 17 அடைப்புகள் இருந்ததும் கண்டறியப்பட்டது. உடனடியாக அவரை மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  11 மணி நேரம் தீவிர அறுவைசிகிச்சை செய்து, அடைப்பு உள்ள இடங்களில் எல்லாம் பைபாஸ் செய்து ரத்தக் குழாய்கள் பொருத்தப்பட்டன. அறுவைசிகிச்சைக்குப் பிறகு மூன்று வாரங்கள் கழித்து மீண்டும் ஆஞ்ஜியோ பரிசோதனை செய்ததில், அனைத்து ரத்தக் குழாய்களும் நன்றாக வேலை செய்வதை டாக்டர்கள் கண்டறிந்துள்ளனர். இதுவரை இத்தனை ரத்தக் குழாய் அடைப்புகள் யாருக்கும் இருந்ததில்லை.                  17 அடைப்புகள் கண்டறியப்பட்டதும், அதற்கு 12 பைபாஸ் செய்யப்பட்டதும் இதுவே முதன்முறை.

அக்கம் பக்கம்

  தரமற்ற மருந்து இரண்டு  சதவிகிதம்!

போலி மருந்துகள், தரம் குறைந்த மருந்துகள் விற்பனை தொடர்பாகத் தொடர்ந்து புகார்கள்

அக்கம் பக்கம்

எழுந்தவண்ணம் உள்ளன. மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு, ஒவ்வொரு மாநிலத்தின் மருந்து கட்டுப்பாட்டாளர்களிடம் அந்தந்த மாநிலத்தில் விற்பனையாகும் மாத்திரை மருந்துகளை பரிசோதிக்கும்படி அறிவுறுத்தியது. இதன்படி, அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருந்துக் கடைகளில் விற்கப்படும் மாத்திரை, மருந்துகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மண்டலத்தில் 278 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவற்றில் 112 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இவை அனைத்துமே தரத்துடன் இருந்ததாக மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு கூறுகிறது. நாடு முழுக்க நடத்தப்பட்ட ஆய்வில் வெறும் இரண்டு சதவிகித மருந்துகள்தான் தரம் குறைந்ததாக இருந்ததாகவும், ஜம்மு மாநிலத்தில் அதிகபட்சமாக தரம் குறைந்த மருந்து விற்பனை நடப்பதாகவும் கண்டுபிடித்தனர். இந்தப் பரிசோதனையில் போலி மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது ஆறுதல் தரும் செய்தி.