ஸ்பெஷல்
Published:Updated:

செல்லப் பிராணிகளின் ஆரோக்கியம்... குடும்பத்துக்கு அவசியம்!

செல்லப் பிராணிகளின் ஆரோக்கியம்... குடும்பத்துக்கு அவசியம்!

'டிப் பிடித்து விளையாட ஒரு தம்பி பாப்பா வேணும் என்கூட...’ என்று அந்த காலத்தில், வீடெங்கும் மழலைச் செல்வம்தான் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தக்கவைத்தது.  ஆனால், இன்றோ, ஒரு குழந்தையை வளர்க்கவே திண்டாடும் அளவுக்கு, விலைவாசியும் உயர்ந்து கொண்டேயிருக்கிறது.  இந்த நிலையில், குழந்தைகளைப் போல நாய், பூனை, கிளி, அணில்,

செல்லப் பிராணிகளின் ஆரோக்கியம்... குடும்பத்துக்கு அவசியம்!

லவ்பேர்ட்ஸ், மீன்கள் என வீட்டு மிருகங்களையும், செல்லமாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் பலரும்.  யாரிடமாவது அன்பை எதிர்பார்த்து, அது கிடைக்காத பலருக்கு, தங்கள் அன்பைக் காட்ட ஒரு வடிகாலாக வளர்ப்பு மிருகங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, நாய்கள், பல வீடுகளில் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே வலம் வருவதைப் பார்க்க முடிகிறது. வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் பல இருந்தாலும், பெரும்பாலான வீடுகளில் ரேஷன் கார்டில் பெயர் இடம் பெறாத குறையாக இருப்பது நாய்தான். செல்ல நாய் வளர்ப்போர் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் மற்றும் மருத்துவ ரீதியான குறிப்புகளை வழங்குகிறார், சென்னை பாலோ மல்ட்டி ஸ்பெஷாலிட்டி பெட் கிளினிக்கின் தலைமை மருத்துவர் டாக்டர் நாகராஜன். 

'முன்பு எல்லாம் நாய்களை வீட்டுக் காவலுக்காக மட்டும்தான் வளர்ப்பார்கள். ஆனால், இப்போதோ வீட்டில் ஒரு தோழனாக, குழந்தையாக வளர்க்கப்படுகின்றன. தனிமையில் இருப்பவர்களுக்கு ஓர் அன்புத் துணையாக நாய் இருக்கிறது. அதற்குக் காரணம், தம்மிடம் காட்டும் அன்புக்குப் பிரதிபலனாக அவை எதையும் எதிர்பார்ப்பதில்லை. அதோடு, நாம் அன்பு காட்டிவிட்டால், நம் மீது அளவுக்கு அதிகமான பாசப் பிணைப்போடு சாகும் வரை இருக்கும் பிராணி அது! அதனால்தான், பலரும் நாயையே 'பெட் அனிமல்’ ஆகத் தேர்ந்தெடுத்து வளர்க்கிறார்கள்.

நாய் வளர்க்கும் குடும்பங்களின் பெரிய தலைவலியே, அவற்றைக் காலைக் கடன்களைக் கழிக்க அழைத்துச் செல்வதுதான். பலர், இதற்குச் சங்கடப்பட்டே நாய் வளர்ப்பதில்லை. ஆனால், அது ஒரு பெரிய விஷயமே இல்லை. நாய் குட்டியாக இருக்கும்போதிலிருந்தே அதைப் பழக்க வேண்டும். வெளியே அழைத்து போய், செடிகள் இருக்கும் இடத்தில் விட்டால், அதன் வேலையை அது முடித்துவிடும். காலைக்கடன் கழிக்கும் இடத்தின் வாசனையை வைத்துத் தான், அது மறுநாளும் அதே இடத்துக்கு போகிறது. நாய் குட்டியாக இருக்கும் போதே, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, அதை இப்படி வெளியில் அழைத்துச் சென்று பழக்கினால், பிறகு அது வீட்டுக்குள் அசிங்கம் செய் யாது. அப்படியும் வீட்டுக்குள் அசிங்கம் செய்தால், அதற் கென்று சில ஸ்பிரே வகைகள் இருக்கின்றன. அசிங்கம் செய்த இடத்தில் அதை அடித்து விட்டால், நாயால் அந்த வாடையை மோப்பம் பிடிக்க முடியாது. எனவே, மீண்டும் வீட்டுக்குள் அசிங்கம் செய்யாது.  

செல்லப் பிராணிகளின் ஆரோக்கியம்... குடும்பத்துக்கு அவசியம்!

நாய்க் குட்டியின் நான் காவது மாதத்தில் பல் ஊறும் போது, ஷூ, சாக்ஸ், சோஃபா என எல்லாவற்றையும் கடிக்க முயலும். நமது கெண்டைக் காலையும் விட்டு வைக்காது. பெரிய சைஸ் கேரட் ஒன்றை அதன் அருகில் போட்டுவிட வேண்டும். கேரட், நம் கெண்டைக் கால் போல உறுதியாகவும் இருக்கும்; கடிப்பதற்கும் மென்மையாக இருக்கும். எனவே அதைக் கடித்துக்கொண்டு பேசாமல் இருந்துவிடும்.

செல்லப் பிராணிகளின் ஆரோக்கியம்... குடும்பத்துக்கு அவசியம்!

நாய்களின் மற்றொரு பிரச்னை, வெறிகுணம். நாய், தனது 18-வது மாதத்தில் பருவம் அடைகிறது. அப்போதுதான் அதற்கு இந்த வெறிகுணம் வரும். இதில் பல வகை உண்டு. ஆனால், அதிகம் காணப்படுவது இரண்டு தான். வீட்டுக்கே தான்தான் முதலாளி போல கட்டில், நாற்காலி என்று எல்லாவற்றிலும் ஏறி உட்கார்ந்து கொள்வது, நம் கால்களுக்கிடையே அமர்ந்து கொள்வது... தான்தான் அந்த ஏரியாவின் தாதா போல, எல்லாரையும் விரட்டுவது போன்றவை 'டாமினன்ஸ் அக்ரெஷன்’ எனப்படும். இன்னொரு வகை, 'டெரிடோரியல் அக்ரெஷன்’... அதாவது, தனக்கென ஓர் எல்லை வகுத்துக்கொண்டு அதற்குள் மட்டுமே குரைத்துக்கொண்டு, அனைவரையும் விரட்டிக்கொண்டு இருப்பது! தெருநாய்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட இடம் வரை விரட்டிக்கொண்டே வந்து, அதோடு நின்று விடுவது இந்த வகை வெறிகுணம்தான்! ஆனால், வெறிகுணம் வேறு; வெறி நாய் வேறு! இந்த வெறிகுணம் வந்துவிட்டால், அதற்கென்று மாத்திரைகள் உள்ளன. அவற்றைக் கொடுத்தால் குறைந்துவிடும். இதற்காக நாய்களைத் தண்டிக்கக் கூடாது.

நாய்க்கு பால், தயிர் சாதம் போன்ற உணவுகளை மட்டும் போடாமல், சரிவிகித உணவு கொடுத்தால், அந்தந்த வயதுக்குரிய வளர்ச்சியினை அடைந்து பார்க்க ஆரோக்கியமாக அழகாக இருக்கும். ஆனால், நாய் வளர்ப்பவர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை: நாய்களுக்கு திராட்சை, வெங்காயம், காளான், சாக்லேட் ஆகிய நான்கு உணவுகளையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் நாயை வெகுவாக பாதிக்கும். இவை, நாயின் உடலில் நச்சுப் பொருட்களை உருவாக்கிவிடும்'' என்றார் டாக்டர் நாகராஜன்.

'நாய் வளர்க்கிறதில் இத்தனை விஷயங்களா?’ என்று மலைக்காமல், செல்லப் பிராணிகளின் நலம் பேணினால், குடும்பத்தினரின் ஆரோக்கியம் குறைவின்றி இருக்கும்.  

செல்லப் பிராணிகள் வளர்ப்போர் கவனத்துக்கு...!

செல்லப் பிராணிகளின் ஆரோக்கியம்... குடும்பத்துக்கு அவசியம்!

எந்தப் பிராணி அல்லது பறவையாக இருந்தாலும், அதைத் தூக்கிக் கொஞ்சினாலோ, விளையாடினாலோ கண்டிப்பாகக் கைகளை சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். கையைக் கழுவி விட்டுத்தான் சாப்பிட வேண்டும். நாயின் எச்சில் அல்லது உடலில் ஒட்டியிருக்கும் கழிவில் இருந்து கிருமிகளோ நாடாப்புழுவின் முட்டை போன்றவையோ மனிதருக்குள் சென்றால், விளைவு... பயங்கர நோய்கள்!

செல்லப் பிராணிகளின் ஆரோக்கியம்... குடும்பத்துக்கு அவசியம்!

 நாய், பூனை போன்ற விலங்குகளின் முடி உதிர்ந்தால், பெருக்கிவிட வேண்டும். அலர்ஜி இருப்பவர்களுக்கு நாய், பூனையின் ரோமம் உதிர்ந்தால், அதனால் ஏதாவது பிரச்னை உண்டாகலாம். அப்படி அலர்ஜி உள்ளவர்கள், பூடில் (poodle), சில்க்கி டெர்ரியர் போன்ற இனங்களை வளர்க்கலாம். இந்த வகை நாய்களுக்கு முடியே கொட்டாது.

செல்லப் பிராணிகளின் ஆரோக்கியம்... குடும்பத்துக்கு அவசியம்!

 எல்லா விலங்குகளுக்கும் தடுப்பூசிகள் போட வேண்டும். நாய்களுக்கு நான்கு வகைத் தடுப்பூசிகள் போடவேண்டும். பார்வோ (காலரா போன்ற நோய்), டிஸ்டம்பர் (போலியோ போன்றது), லெப்டோஸ்பைரா (எலியின் சிறுநீரை மிதிப்பதால் வருவது), ஹெபடைட்டிஸ் என்ற இந்த 4 நோய்களுக்கும் தடுப்பூசிகள் உள்ளன. குட்டியாக இருக்கும்போதே போட்டுவிட்டு, பிறகு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து போட வேண்டும்.

செல்லப் பிராணிகளின் ஆரோக்கியம்... குடும்பத்துக்கு அவசியம்!

 நாய்களுக்கு பூச்சி மருந்தும் சீரான இடைவெளியில் கொடுக்க வேண்டும். இல்லையெனில், நாடாப்புழு வந்துவிட்டால், அதனால் வளர்ப்பவருக்கும் பிரச்னை. அந்தப் புழுவால் மனிதரின் இதயம், மூளை பாதிக்கப்படும். நாய்க்கு வரும் உருண்டைப்புழுவால் மனிதரின் கண் பாதிக்கப்படும். அல்லது சருமப் பிரச்னை வரும். எனவே பூச்சி மருந்து அவசியம். முக்கியமாக நாயின் கழிவு, நம் கைகளில் படக் கூடாது.

செல்லப் பிராணிகளின் ஆரோக்கியம்... குடும்பத்துக்கு அவசியம்!

 நாய்க்கு உண்ணி இருந்தாலும் ஆரம்பத்திலேயே கவனித்து, சிகிச்சை தரவேண்டும்.

- மித்ரா