டப்பாவாலாக்களின் உணவும்... உணர்வும்...!

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மும்பையின் புகழ்பெற்ற டப்பாவாலாக்கள் மலேரியா கொசு ஒழிப்பு பிரசாரத்தை மேற்கொண்டனர். ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் மலேரியா காய்ச்சலால் உயிரிழக்கின்றனர். மலேரியா மற்றும் டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட கொசுவால் பரவக்கூடிய காய்ச்சல்கள் பற்றி இவர்கள் டிபன் பாக்ஸ் கொடுக்கும் நபர்களிடம் 'சிறிய கடி, மிகப் பெரிய ஆபத்து’ உலக சுகாதார நிறுவனம் அளித்த விழிப்பு உணர்வு தகவலை அளித்து பிரசாரம் செய்தனர். இது குறித்து டப்பாவாலாக்கள் நல அமைப்பின் முன்னாள் தலைவர் ரகுநாத், '5,000 டப்பாவாலாக்கள் மும்பையில் உள்ளனர். இவர்கள் 2 லட்சம் பேருக்கு மதிய உணவைக் கொண்டுசெல்கின்றனர். இவர்கள் மூலம் கொசுவால் பரவக்கூடிய நோய் பற்றி விழிப்பு உணர்வுத் தகவல் இரண்டு லட்சம் பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதைப் படித்துப்பார்த்து அவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்கலாம். நாளுக்கு நாள் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்புடன் வாழ எங்களால் முடிந்த சேவை இது' என்கிறார்.

சப் வே... இனி, ரைட் வே!

உலக அளவில் பிரபலமான உணவகமான 'சப்வே’-யில் வழங்கப்படும் ரொட்டி உள்ளிட்ட சில

உணவுப் பொருட்களில் சுவை கூட்டுவதற்காக 'அசோடைகார்பனமைடு’ (Azodicarbonamide) என்ற ரசாயனம் சேர்க்கப்பட்டுவந்தது. இது, யோகா மேட் மற்றும் ஷூ ரப்பரில் பயன்படுத்தப்படும் ஒரு வகை ரசாயனம். உணவு நிபுணர் வாணி ஹரி 'இந்த ரசாயனம் சேர்ப்பதை நிறுத்த வேண்டும்’ என்று பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த, சுமார் 50 ஆயிரம் பேர் இதற்கு ஆதரவாகக் கையெழுத்திட்டனர். இதைத் தொடர்ந்து சப்வே நிறுவனம் இறங்கிவந்தது. தங்கள் உணவகங்களில் இனி இந்த ரசாயனத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்துள்ளது. புற்றுநோய், சுவாசம் தொடர்பான நோய்களை ஏற்படுத்தக்கூடியது இந்தக் கொடிய ரசாயனம். பொது மக்களின் போராட்டத்துக்கு பணிந்த சப்வே நிறுவனம், இனி தனது உணவில் சுகாதாரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்துவோம் என்று உறுதியளித்துள்ளது. உணவு ரசிகர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இபுவோவுக்கு இடுப்பு மாற்று... சென்னை மருத்துவக் குழு சாதனை!

நைஜீரீயாவைச் சேர்ந்தவர் 43 வயதான இபுவோ டுண்டே. தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்துவந்தார். ஒரு தனியார் நிறுவனத்தில் காசாளராகப் பணியாற்றிவந்த இபுவோவுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இடுப்பில் வலி ஏற்பட்டது. வலி கொஞ்சம் கொஞ்சமாக இரு பக்கமும் பரவ, அவரால் நீண்ட தூரம் நடக்கவோ, படி ஏறவோ முடியாமல் போனது. சிகிச்சைக்காக சென்னை வந்தார் இபுவோ. அவருக்கு இடுப்பு மாற்று அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்த, சென்னை நோவா மருத்துமனை, மருத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் நந்தகுமார் சுந்தரம்,

''30 வயதுக்கு மேற்பட்ட சில ஆண்களுக்கு எலும்பினுள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மூட்டுகளுக்கு இடையில் உள்ள ஜவ்வுப் பகுதி வறண்டுபோகும். இதனால் மூட்டுகளில் உராய்வுத்தன்மை இழந்து இறுக்கமாகி கால்கள் செயலிழந்து விடும். இபுவோவுக்கு வந்த பாதிப்பு இது தான். மூட்டுகள் இறுகிப்போய்விட்டால் மறுபடி செயல்படவைப்பது மிகவும் கடினம். இதை ஒரு சவாலாக எடுத்து, அமெரிக்காவில் இன்று நடைமுறையில் இருக்கும் நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை போலவே, கால்களின் அளவும் குறைந்து விடாமல் மிகவும் கவனத்துடன் சிக்கலான இந்த அறுவைசிகிச்சையை செய்துள்ளோம்'' என்கிறார் டாக்டர் நந்தகுமார். வலி ஏதும் இன்றி நலமாக இருக்கிறார் இபுவோ.

குரலையும் தானம் செய்யலாம்!

கண் தானம் போல இப்போது, குரலையும் தானம் செய்யலாம். அமெரிக்காவில், நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ருபல் படேல், நேமோர்ஸ் குழந்தைகள் மருத்துவமனை டாக்டர் டிம் பன்னல் ஆகியோர் இணைந்து 'வோக்கல் ஐ.டி.’ என்ற ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளனர். வாய் பேச முடியாத ஒரு நோயாளி, தனது வாயால் உருவாக்கும் சத்தங்களைப் பயன்படுத்தி, ஒரு செயற்கைக் குரல் உருவாக்கப்படுகிறது. குரல் தானம் செய்ய முன்வருபவர்களில், அந்த நோயாளியின் வயது, பாலினம், உருவ அளவு ஆகியவை யாருடன் பொருந்துகிறதோ, அந்த நபரின் குரலுடன், நோயாளியின் செயற்கைக் குரல் இணைக்கப்படுகிறது. இதன் மூலம், வாய் பேச முடியாதவர்கள் தங்களது சொந்தக் குரலை கேட்க முடிகிறது. ஒவ்வொரு செயற்கைக் குரலும், கைரேகை போன்று தனித்துவம் வாய்ந்தது என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். குரல் தானம் அளிப்பதற்கு ஒருவர், இரண்டு முதல் மூன்று மணி நேரம் பேச வேண்டும். அல்லது பிரபல புத்தகங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாக்கியங்களை வாசிக்க வேண்டும். அப்போது, அவரது பேச்சு பதிவுசெய்யப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது.