Published:Updated:

உச்சி வெயில்... உஷார்

உச்சி வெயில்... உஷார்

உச்சி வெயில்... உஷார்

ஜி.தீபா, சிவகாசி.

'நான் கல்லூரி மாணவி. மதிய நேரத்தில் உச்சி வெயிலில் கல்லூரிக்குச் செல்ல வேண்டியதாக இருக்கிறது. உடலில் வெயில் படும் இடங்களான கை, முகம், கழுத்து, முதுகு போன்ற இடங்களில் 'டேன்’ ஆகிவிடுகிறது. இதைப் போக்க என்ன செய்ய வேண்டும்?'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டாக்டர் பா. சதீஸ், தோல் நோய் சிகிச்சை நிபுணர், மதுரை

'வெயில் காலத்தில் உடலில் உள்ள நிறமியான மெலனின் இடம் மாறும். அதனால்தான் தோலின் நிறம் மாறுபடுகிறது. புற ஊதாக் கதிர்களில் பல வகைகள் உள்ளன. இதில் 'ஏ’, 'பி’ என்ற இரண்டு வகைகள் தோலைப் பாதிக்கும். இதைத் தவிர்க்க வெயிலில் வெளியே செல்லும்போது முகம், கழுத்து, கை பகுதிகளில் சன்ஸ்கிரீன் லோஷனைத் தடவுவதுதான் ஒரே வழி. இது, வெயிலால் ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்தும். அந்த லோஷன்களில் 'ஜிங்க் ஆக்ஸைடு’ மற்றும் 'டைட்டானியம் டைஆக்ஸைடு’ இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். அதோடு சன் ப்ரொடக்ஷன் ஃபேக்டர் 30 (sun protectin factor (SPF 30) வரை இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். இந்த லோஷன் இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே வேலை செய்யும். எனவே, இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை சன்ஸ்கிரீன் கிரீம் தடவிக்கொள்ள வேண்டியது அவசியம். 'டேன்’ உள்ள இடங்களில் ஸ்கின் லைட்டனிங் கிரீம் தொடர்ந்து தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கோடையில் காரம், மசாலா சேர்த்த உணவுகளை முற்றிலும்

உச்சி வெயில்... உஷார்

தவிர்த்து விடுங்கள். அதிகமான நீர் ஆகாரங்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் நம் உடலுக்கு நீர்ச்சத்து கிடைப்பதுடன், சருமமும் புத்துணர்ச்சி அடையும். அலர்ஜி வராமல் தடுக்கும். வெளியே செல்லும்போது அதிகப்படியான மேக்கப்பைத் தவிர்த்துவிடுங்கள். மேக்கப் சாதனங்களில் இருக்கும் ரசாயனங்களால் தோலில் சிலருக்கு அலர்ஜி ஏற்படும் அபாயம் உண்டு.'

ஜி.ரவிச்சந்திரன், திண்டிவனம்

'என் மகனுக்கு 10 வயது. சில சமயம் இரவில் தூங்கும்போது, படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிறான். இதை எப்படி நிறுத்துவது?''

டாக்டர் அருண்பாபு, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி

'ஐந்து வயது வரை ஒரு குழந்தை, படுக்கையில் சிறுநீர் கழித்தால் பயப்படத் தேவை இல்லை. ஐந்து வயதுக்குப் பிறகும் படுக்கையில் சிறுநீர் கழித்தால், என்ன காரணம் என்பதைக் கண்டறிய வேண்டும். ஒரு முறைகூட அவன், இரவில் படுக்கையை ஈரப்படுத்தாமல் இருந்தது இல்லையென்றால் அதை 'தானாக சிறுநீர்கழித்தலின் முதல் நிலை’ (Primary Nacturnal Enuresis) என்போம். அதுவே, தொடர்ந்து ஆறு மாதம் குழந்தையின் படுக்கை ஈரம் இல்லாமல் இருந்து, தற்போது மீண்டும் இரவில் படுக்கையிலே சிறுநீர் கழித்தால் அதை 'இரண்டாம் நிலை’ (Secondary Nocturnal Enuresis) என்போம். இரண்டாம் நிலைப் பிரச்னையானது மன அழுத்தம், உளவியல் பிரச்னை, சிறுநீர்ப் பாதையில் நோய்த்தொற்று, டைப் 1 சர்க்கரை நோய், டயாபடீஸ் இன்ஸிபிடஸ் (Diabetes insipidus) போன்றவற்றால் ஏற்படலாம்.

நடத்தை சிகிச்சை மூலம் இதனைக் குணப்படுத்த முடியாமல் போனால், மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம். உங்கள் மகனுக்கு உள்ள பிரச்னையின் காரணத்தைக் கண்டறிந்து சரியான சிகிச்சையளிக்க, குழந்தை நல மருத்துவர் மற்றும் மன நல ஆலோசகரை நீங்கள் அணுகவேண்டியது அவசியம். இந்த பிரச்னையைக் குறைக்க நீங்கள் செயல்படுத்த வேண்டிய சில வழிகள்:

உச்சி வெயில்... உஷார்

   தூங்குவதற்கு மூன்று மணி நேரம் முன்பே இரவு உணவு கொடுத்துவிடுங்கள். இரவு உணவின்போது, 250 மில்லி லிட்டருக்கு மேல் தண்ணீர் கொடுக்க வேண்டாம்.

உச்சி வெயில்... உஷார்

   சிறுநீர் கழித்துவிட்டு பிறகு தூங்குமாறு அறிவுறுத்துங்கள்

உச்சி வெயில்... உஷார்

   ஒவ்வொரு இரவு தூங்குவதற்கு முன், 'இன்றிரவு நான் படுக்கையிலே சிறுநீர் கழிக்க மாட்டேன்’ என்று உறுதியெடுத்துவிட்டு தூங்க உற்சாகப்படுத்துங்கள். அடிப்பது, திட்டுவது போன்று எதையும் செய்யாதீர்கள்.

உச்சி வெயில்... உஷார்

   நடத்தை சிகிச்சையில் (Behavioural therapy), குழந்தை இரவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க, நேர்மறை வலுவூட்டலைத் (positive reinforcement) தர வேண்டும். எத்தனை இரவுகள் குழந்தையின் படுக்கை ஈரம் இல்லாமல் இருக்கின்றன என்று காலண்டரில் குறிக்க வேண்டும். போன வாரத்தைவிட இந்த வாரம், படுக்கை அதிக நாட்கள் ஈரம் இல்லாமல் இருந்தால், இனிப்பு தந்து குழந்தையைப் பாராட்டலாம்.

உச்சி வெயில்... உஷார்

   இதற்கு தீர்வு தர யூரினல் அலாரம் முறையைப் (Urine alarm method) பயன்படுத்தலாம். குழந்தையின் படுக்கை ஈரமாகத் தொடங்கியதும் அலாரம் அடிக்கும். அலாரம் கேட்டு விழிக்கும் குழந்தை, தான் படுக்கையிலே சிறுநீர் போவதை உணர்ந்து உடனே கழிவறைக்குச் செல்லும்.'

 உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி

கன்சல்டிங் ரூம், டாக்டர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை-600002.

doctor@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்!