Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்
அக்கம் பக்கம்

 பெருகும் மலேரியா... தேவை நிதி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்பவர்களுக்கு நான்கில் மூன்று பேருக்கு மலேரியா காய்ச்சல் வருவதற்கான அபாயம் உள்ளது. இதைத் தவிர்க்க மிகப்பெரிய நிதி உதவியும் கடுமையான முயற்சியும் தேவை என்று உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த மண்டலத்தில் 140 கோடி பேருக்கு மலேரியா காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கான பரிசோதனை, மருந்து மாத்திரைகள், கொசு ஒழிப்பு, கொசு வலை உள்ளிட்டவைக்கு அதிக நிதி தேவை. போதுமான நிதி உதவி கிடைப்பதன் மூலம், இந்த தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மலேரியாவை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கான இயக்குனர் டாக்டர் பூனம் தெரிவித்துள்ளார்.

அக்கம் பக்கம்

 'ஸ்வாச’ மழை!

அக்கம் பக்கம்

ஆண்டுதோறும் மே மாதம் முதல் செவ்வாய், உலக ஆஸ்துமா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை ஃபோர்ட்டிஸ் மலர் மருத்துவமனை, கடந்த வாரம் ஒரு வித்தியாசமான இசை மாலையை அரங்கேற்றியது. போர்ட்டிஸ் மருத்துவமனையின் பிரதிநிதி மனோஜ் குமார் நாயர், ஆஸ்துமா அலர்ஜி சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன் மற்றும் பொதுமருத்துவர் கைலாஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். 'ஆஸ்துமாவுக்கு சமர்ப்பணம்’! என்ற இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஆஸ்துமா சிறப்பு டாக்டர் ஸ்ரீதரன் தயாரித்திருக்கும் 'பனித்திரை’ என்ற ஆஸ்துமா விழிப்பு உணர்வுப் பாடல்கள் அடங்கிய டிவிடி திரையிடப்பட்டது. அவர் பேசுகையில், ''நாம் ஒரு நாளைக்கு 21,600 மூச்சுகளை வெளியேவிடு கிறோம். அனிச்சையாக விட வேண்டிய மூச்சை இப்போது நாம் கஷ்டப்பட்டு விடுகிறோம். எதெல்லாம் நம் மனதை ரிலாக்ஸ் பண்ணுகிறதோ, அதெல்லாம் மூச்சையும் ரிலாக்ஸ் பண்ணும். அந்த வகையில் இசை மிக முக்கியமானது!'' என்ற அவர், மாசுக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆஸ்துமாவுக்கு சிறந்த தீர்வான இன்ஹேலர் பற்றியும் பேசினார். ஆஸ்துமா நோயாளிகள் பெருமளவில் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், மனதை வருடும் இனிமையான பழைய படத்தின் பாடல்களைத் தேர்ந்தெடுத்து டாக்டர்களே பாடியது ஹைலைட்.

அக்கம் பக்கம்

 'சாஃப்ட்’ கார்னர்!

காசநோயை வேரோடு அழிக்க, தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், 10 பேர் சிகிச்சைக்கு வந்தால் அவர்களில் மூன்று பேர் சிகிச்சையைத் தொடராமல் போய்விடுகின்றனர். இதனால், காசநோய் ஒழிப்பு முயற்சி தோல்வியில் முடிகிறது. மருந்துக்கு எதிராகச் செயல்படும் தன்மையை காசநோய் கிருமியும் பெற்றுவிடுகிறது என்பதுதான்

அக்கம் பக்கம்

வேதனைக்குரிய விஷயம். காசநோய் கிருமி மற்றும் மருந்துக்கு எதிர்ப்புத்தன்மை பெற்ற காசநோய்க் கிருமியை அழிக்க, புதிய மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இதில், 'கிளீனிகல் டிரையல்’ எனப்படும் மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கும் முறையில் கடைசிக்கட்டத்தில் உள்ளனர் விஞ்ஞானிகள். இதற்கு கோடிக்கணக்கில் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிச் சிக்கலால் புதிய மருந்து கண்டுபிடிப்பது தடைப்பட்டுவிடக்கூடாது என்று எண்ணி, இந்தப் பரிசோதனைக்கு நிதி உதவியை அறிவித்துள்ளார் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ். மருந்துக்கு எதிரான தன்மை பெற்ற கிருமியால் ஏற்பட்ட காசநோயை குணப்படுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்தப் புதிய மருந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும்போது குறைந்தது ஆறு மாதத்திலேயே காசநோயைக் குணப்படுத்திவிட முடியும். இதனால், மற்றவர்களுக்கு காசநோய் பரவுவதற்கான வாய்ப்பு தவிர்க்கப்படும். இந்தியாவில் போலியோ நோயை ஒழிக்க பில்கேட்ஸ் நிதி உதவி அளித்ததும், இந்தியாவில் தற்போது போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.