Published:Updated:

கொரோனா... பயப்படத் தேவையில்லை. ஏனெனில்...

கொரோனா... பயப்படத் தேவையில்லை
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா... பயப்படத் தேவையில்லை

டாக்டர் சசித்ரா தாமோதரன், மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்

சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஈரான், இந்தியா உட்பட 36-க்கும் மேற்பட்ட நாடுகளை உச்சக்கட்ட உயிர் பயத்தில் தள்ளியிருக்கிறது கொரோனா.

ஒரு லட்சத்துக்கும் அதிக மானோர் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள்! ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ‘நிற்காதீர்கள் போராடுங்கள்’ என்று கொரோனாவுக்கு எதிரான போரில், உலக நாடு களை வேகமாக முடுக்கியுள்ளது உலக சுகாதார அமைப்பு.

சசித்ரா தாமோதரன்
சசித்ரா தாமோதரன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கொரோனா என்பது தனி வைரஸ் அல்ல; ஒரு குடும்பம். சாதாரண சளி, இருமல், காய்ச்சலை உருவாக்கும் ஆல்ஃபா கொரோனா மற்றும் பீட்டா கொரோனா வைரஸ் களான 229E, NL63, OC43, HKU1 ஆகியவற்றின் பாதிப்புகள் தானாக குணமடையக் கூடியவை. அடுத்ததாக வந்த மெர்ஸ் மற்றும் சார்ஸ் கொரோனா வைரஸ்களும், தற்போதைய புதுவரவான கோவிட் 19-ம் வௌவால் களிடமிருந்து மனிதனுக்கு பரவி பாதிப்புகளையும் உயிரிழப்பு களையும் ஏற்படுத்துகின்றன.

பொதுவாக மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் செல்களைத் தாக்கும் இவை, நோயாளியின் உடலில் ஏறத்தாழ 14 நாள்கள் வரை தங்கியிருக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் நோயாளியின் சளி, எச்சில், கண்ணீர் மூலமாக, அவற்றை தொடுபவர்களுக்கு நோய்த் தொற்றை ஏற்படுத்துகின்றன. அதேசமயம் இவை பன்றிக்காய்ச்சல், அம்மை நோய் வைரஸ்கள் போல் காற்றில் பரவாது.

கொரோனா வைரஸ் தனக்கு ஏதுவான தட்பவெப்பத்தில் 48 மணி நேரத்திலிருந்து 7 நாள்கள் வரை வெளியே உயிர்வாழும். உலோகங்களின் மேற்பரப்பில் 12 மணி நேரமும், துணிகளின்மீது 9 மணி நேரமும் உயிர் வாழும். 26-27 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும், கொதிநீர், பிளீச்சிங் பவுடர் போன்ற கிருமிநாசினிகளிலும் எளிதாக அழிந்துவிடும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
எனினும் கொரோனாவைக் கண்டு இந்தியா போன்ற உலக நாடுகள் அச்சம்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில்,

l இவை நுரையீரல் செல்களை நேரடியாகத் தாக்குகின்றன. குணப்படுத்தும் மருந்துகளோ முன் தடுக்கும் தடுப்பூசிகளோ கண்டறியப்படவில்லை.

l பரவும் வேகம் அதிகம். ஒரே நேரத்தில் ஒருவரிடமிருந்து மூன்று பேர் வரை பரவும்.

l வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், வைட்டமின் டி குறைபாடுள்ளவர்களை எளிதில் தாக்கும். ஆரம்ப அறிகுறிகளான சளி, காய்ச்சலில் ஆரம்பித்து நிமோனியா, மூளைக்காய்ச்சல், சிறுநீரகச் செயலிழப்பு என பாதிப்புகள் வெகுவிரைவாக ஏற்படும்.

l கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவிகிதத்தினர் மருத்துவமனைகளிலும், அவர்களில் 20 சதவிகிதத்தினர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் சேர்க்கப்படும் நிலை உள்ளது. பெரும் மக்கள்தொகைகொண்ட நம் நாட்டில் அவ்வளவு பேரை தனிமைப்படுத்திப் பராமரிக்கவும் சிகிச்சை அளிக்கவும் மிகப்பெரிய திட்டமிடல் தேவை.

கொரோனா... பயப்படத் தேவையில்லை
கொரோனா... பயப்படத் தேவையில்லை
அதேசமயம் தனி மனிதனாக நாம் கொரோனாவைக் கண்டு பயப்படத் தேவையில்லை. ஏனெனில்,

l இது சாதாரண சளி, காய்ச்சல் வைரஸ்தான். ஆரம்ப அறிகுறிகளுடன் தானாகவே பெரும்பாலான நேரங்களில் குணமடைந்துவிடும். தவிர, மிகக் குறைந்த தருணங்களில் மட்டுமே உயிருக்கு ஆபத்தை விளைவித்திருக்கிறது.

l வயதானவர்கள், நீரிழிவு, ஆஸ்துமா, நுரையீரல் நோயாளிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையும் மட்டுமே கொரோனா பாதித்துள்ளது.

l கொரோனாவால் இதுவரை ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகள், கடந்த காலங்களில் பிளேக், அம்மை, ஃப்ளு போன்றவற்றின்மூலம் ஏற்பட்ட உயிரிழப்புகளைவிட குறைவே.

நாம் ஒவ்வொருவரும் இதிலிருந்து எளிதாக தற்காத்துக்கொள்ள முடியும். எப்படியெனில்,

l கொரோனாவின் முதல் எதிரிகள் சுத்தமும் சுகாதாரமும்தான். அவற்றில் அக்கறைகொள்வோம்.

l பயணங்களையும், நெரிசல்களையும், காற்றோட்டம் இல்லாத இடங்களையும் தவிர்ப்போம்.

l ஒவ்வொரு முறையும் உள்ளங்கை, புறங்கை, விரல் இடுக்குகள், நகக்கண்கள், மணிக்கட்டு ஆகியவற்றை சுத்தமான நீரில் 20 - 30 விநாடிகள் வரை முறையாகக் கழுவுவோம்.

l இயன்றவரை கைகளை முகத்துக்குக் கொண்டுபோக வேண்டாம். கைகளுக்குப் பதிலாக மணிக்கட்டைப் பயன்படுத்துவோம்.

l அன்றாடப் பொருள்களை கிருமிநாசினியால் சுத்தம் செய்வோம். துணிகளை கொதிநீரில் துவைப்போம்.

l கைக்குட்டை, மாஸ்க், டிஷ்யூ மற்றும் சானிட்டைஸர்களைப் பயன்படுத்துவோம்.

l பொது இடங்களில் எச்சில் துப்ப வேண்டாம்; முடிந்தவரை கைகளால் எதையுமே தொட வேண்டாம்.

l எல்லாவற்றுக்கும்மேலாக நோய் குறித்த தவறான தகவல்களைப் பரப்பாமல் இருப்போம். வைரஸை விட ஆபத்தானது, தவறான தகவல்களைப் பரப்புவது!