சில காட்சிகளுக்கு முன்புதான், ஆணாதிக்கத் திமிரால் ஆசிட்வீச்சில் பாதிப்புக்குள்ளான பெண்ணைப் பார்த்து, ‘சாதிக்கிறதுக்கு முகமோ உருவமோ தேவையில்லை’ என்று வசனம் பேசியிருப்பார் ஹீரோ விஜய். அவரே சில காட்சிகள் கழித்து, போட்டியின் முதல்பாதியில் சொதப்பிய பெண்களைக் கடிந்துவிட்டு, ‘குண்டம்மா’ என்று அந்தப் பருமனான பெண்ணைத் திட்டுவார். உருவகேலி செய்து உற்சாகப்படுத்துகிறாராம். இது ஒரு தவறான புரிதல் என்றால், திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நேரடியாகவே நிறத்தையும் உருவத்தையும் வைத்துவரும் கிண்டல்களுக்கு அளவேயில்லை.

சமீபத்தில் நடிகை அனுஷ்கா விமான நிலையத்திலிருந்து வெளியேறிய புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. சமூக வலைதளங்களில் பலரும், அனுஷ்கா உடல் எடை அதிகரித்திருப்பதாக எல்லை தாண்டி விமர்சித்தனர். இதற்கு அனுஷ்கா விடமிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை. ஆனால், அனுஷ்காவின் ரசிகர்களும், பாடி ஷேமிங்குக்கு எதிரான மனநிலை கொண்ட பலரும் அனுஷ்காவின் திறமை குறித்த தகவல்களைப் பதிவிட்டு, உருவகேலிக்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

பாலிவுட் நடிகை ஸரீன் கான், தனது சமீபத்திய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட, அதில் அவரின் வயிற்றில் ‘ஸ்ட்ரெச் மார்க்ஸ்’ இருப்பதை கேலி செய்த நெட்டிசன்கள், ‘போட்டோஷாப்பில் எடிட் செய்து போஸ்ட் செய்ய வேண்டியதுதானே’ என்று ஆலோசனை யையும் அள்ளிக்கொட்டினார்கள்.

இந்த விஷயத்தை நேரடியாக எதிர்கொண்ட ஸரீன் கான், ‘டீன் ஏஜில் 100 கிலோ எடையில் இருந்தேன். அதன்பிறகு எடையைக் குறைத்தபோது, சருமம் சுருங்கி ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஏற்பட்டது. நான் நானாக இருக்கும் புகைப்படத்தையே பதிவிட விரும்பினேன். அதை எடிட் செய்து என்னுடைய குறைகளை மறைக்க நான் விரும்பவில்லை’ என்று துணிச்சலாகப் பதிலளித்தார்.

உருவ கேலி என்பது பல ஆண்டுகளாக இருந்தாலும் இப்போது அதற்கெதிரான வலுவான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. சமீபத்தில் அப்படிக் குரல் எழுப்பியவர் ஸ்ரீபிரியா. “உருவ கேலிகளுக்கு நான் நிறைய ஆளாகியிருக்கிறேன். அதனால்தான் அழைப்புகள் வந்தாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்க்கிறேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒருவரையொருவர் உருவத்தை வைத்து கேலி பேசுவதை அடுத்த தலைமுறைக் குழந்தைகள் பார்க்கும்போது, அது ஏதோ ஜாலி என்று நினைத்து அவர்களும் அப்படியே நடக்க ஆரம்பிக்கிறார்கள். இது தப்பு என வீட்டிலும் அவர்களுக்கு யாரும் சொல்வதில்லை. இது மிகப்பெரிய தவறான முன்னுதாரணம். அதனால் உருவ கேலிக்கு தொடர்ந்து என் எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன்” என்கிறார்அவர்.

உருவ கேலி என்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அணுகுகிறார்கள். கிரேஸ் கருணாஸ், ‘`நான் கலந்துகொள்ளும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் என் உருவத்தைக் கேலி செய்கிற நகைச்சுவைக் காட்சிகளை இயக்குறதுக்கு முன்னால, என்கிட்ட அதைச் சொல்லிட்டுத்தான் செய்யுறாங்க. மக்களை சந்தோஷப்படுத்தணும், அவங்க கவனத்தை ஈர்க்கணும்னுதான் அப்படிச் செய்யுறாங்க. என்னைக் காயப்படுத்தணும்ங்கிறது அவங்க நோக்கம் இல்ல. அதனால நானும் அதை சாதாரணமா எடுத்துக்கிறேன். ஆனா, என்னை மட்டம்தட்டியோ சீரியஸாவோ யாராச்சும் கேலி செய்தா, அதைப் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்” என்கிறார்.

செஃப் தாமு, “இதுவரை உருவ கேலின்ற விஷயத்தை நான் எதிர்கொண்டதில்ல. என் உடலை என்னுடைய தனித்த அடையாளமாத்தான் பார்க்கிறேன். என்னுடைய திறமைகளுக்கும் என் உடலமைப்புக்கும் தொடர்பில்ல. எனக்கு சுகர், பிபி, கொலஸ்ட்ரால்னு எந்த வியாதியும் கிடையாது, ஆரோக்கியமா இருக்கேன். பரம்பரையா வந்த உடல்வாகு இது. எனக்கு எந்த அசௌகர்யத்தையும் கொடுக்காததால அதைப் பெரிய விஷயமா நான் எடுத்துக்கல” என்கிறார்.

“உருவ கேலியால் ஒருவர் பாதிப்புக்குள்ளாகும் போது, அவருக்குப் பக்கபலமாக இருக்க வேண்டியவர்கள் குடும்பத்தி னரும் நண்பர்களுதான். சில நேரங்களில் குடும்பத்தினரே கேலி செய்வது துயரம். இதனால் ‘நாம நல்லா இல்லை’ என்ற எண்ணம் மனதில் பதிந்து, அவர்களின் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என எல்லா இடங்களிலும், செயல்பாடுகளிலும் அவர்கள் தன்னம்பிக் கையுடன் நடைபோடுவதைத் தளர்த்தும். எனவே, ‘எங்களுக்கு நீதான் அழகு, நீதான் முக்கியம். உருவமெல்லாம் பொருட்டே இல்ல, திறமைதான் எப்பவும் கூட வரும்’ போன்ற நேர்மறையான வார்த்தைகளை, உருவ கேலிகளால் துவளும் பிள்ளைகளுக்கு வீட்டினர் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இன்னொரு பக்கம், உருவ கேலியால் துவண்டுவிடாமல், ‘என் உடலைப் பற்றி விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை’ என்ற உணர்வு இன்றைய தலைமுறையிடம் ஏற்பட்டிருப்பதும் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்’’ என்கிறார் மனநல மருத்துவர் சுவாதிக் சங்கரலிங்கம்.

ஒருகாலத்தில் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளப்படும் விஷயங்கள் இன்னொரு காலகட்டத்தில் கடுமையாக விமர்சிக்கப்படுவது காலத்தின் நியதி. நகைச்சுவை என்பது நன்றாக இருக்கவேண்டும், நாலுபேரைச் சிரிக்கவைக்க வேண்டும் என்பதுமட்டுமல்ல, நாகரிகமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.