தாய்ப்பால்... குழந்தைக்குத் தாய் கொடுக்கும் முதல் அமுதுணவு. குழந்தைக்குக் கொடுக்கும் முதல் தடுப்பு மருந்தும் அதுதான். தாய்ப்பாலின் சிறப்பு பற்றி நிறைய பேசுகிறோம். தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள சவால்கள் பற்றி அவ்வள வாகப் பேசுவதில்லை. ஒரு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்த குழந்தையும் பிறந்துவிட்டால், அந்தத் தாய் என்ன செய்வாள்?

பொதுவாக இரண்டாவது குழந்தை பிறந்துவிட்டால் முதல் குழந்தைக்கு பாலை மறக்கடிக்கச் சொல்வார்கள் பெரியவர்கள். இரண்டாவது குழந்தை பிறந் தாலும் முதல் குழந்தைக்குப் பாலூட்டுவதை அம்மா நிறுத்த விரும்பாதபட்சத்திலும், திட உணவுக்குப் பழகிய பிறகும் குழந்தை தாய்ப்பாலை விரும்பு கிறது என்றாலும் இரண்டு குழந்தைகளுக்கும் பாலூட்டலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஒரே நேரத்தில் இரு வேறு வயதிலுள்ள குழந்தைகளுக்குத் தாய்ப்பாலூட்டுவதை `டேண்டெம் நர்சிங்' (Tandem Nursing) என்கின்றனர். அதைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் தாய்ப்பால் ஆலோசகர் டாக்டர் ஜெய ஜெயகிருஷ்ணன்.

``பெரும்பாலும் தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும் பெண்கள் உடனே கர்ப்பமாவ தில்லை. விதிவிலக்காகச் சில பெண்கள் அந்நிலையிலும் கருத்தரிக்க வாய்ப்புள்ளது.

இரண்டாவது குழந்தை பிறந்துவிட்டால் அம்மா தன்னை கவனிப்பதில்லை. இரண்டாவது குழந்தைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்ற எண்ணம் முதல் குழந்தைக்கு ஏற்படும். அப்போது தாய்ப்பாலையும் நிறுத்தும்போது குழந்தை ஒருவித பாதுகாப்பின்மையை உணரக்கூடும். தான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணரலாம்.

அதே நேரம் இரண்டு குழந்தைகளுக்கும் பாலூட்டு வதற்கு அந்தத் தாய் முழு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். ஏற்கெனவே தாய் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருந்தால் இரண்டு குழந்தைகளுக்கும் பாலூட்டுவது இயலாத காரியம். எனவே, டேண்டெம் நர்சிங் செய்ய விரும்பும் தாய் மார்கள், அதற்கு முன்பாக கட்டாயம் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பாலூட்டுவதைத் திட்டமிட வேண்டும். இரு குழந்தை களுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் ஆரோக்கியமான உணவுடன் போதிய ஓய்வும் எடுக்க வேண்டும். ஆரோக்கியமான மனநிலையும் அவசியம்'' என்கிறார் டாக்டர் ஜெய.

யாருக்கு முன்னுரிமை?

``குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதால் இரண்டாவது குழந்தைக்குதான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால் அப்படிக் கொடுக்கும்போது முதல் குழந்தைக்கு ஏக்கம் வர வாய்ப்புள்ளது. எனவே, முதல் குழந்தையிடம் `குட்டி பாப்பா பால் மட்டும்தான் குடிக்கும். ஆனால், நீ சாப்பாடும் சாப்பிடலாம். பாப்பாவுக்குக் கொடுத்திட்டு உனக்கு' என்று பேசிப் புரியவைக்க வேண்டும். ஒருவேளை குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் போன்ற தொற்று ஏற்பட்டிருந்தால் அது அடுத்த குழந்தைக்கும் பரவாமல் தடுக்க, ஒரு குழந்தைக்கு ஒருபக்க மார்பிலும், அடுத்த குழந்தைக்கு இன்னொரு பக்க மார்பிலும் தாய்ப்பால் கொடுக்கலாம்.

இரண்டு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் போதுமானதாக இருக்குமா?

தாய்ப்பால் கொடுப்பது என்பது தாயின் மனநிலையில்தான் இருக்கிறது. என்னால் என் குழந்தை களுக்குப் பாலூட்ட முடியும் என்று நம்பும் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு குறைவதேயில்லை. பிறந்த குழந்தைக்குதான் குறுகிய இடைவேளைகளில் பாலூட்ட வேண்டியிருக்கும். மூத்த குழந்தை ஏற்கெனவே திட உணவுக்குப் பழகியிருப்பதால் அவ்வப்போது பாலூட்டினால் போதுமானது. இரண்டாவது பிரசவம் முடிந்த பிறகு சுரக்கும் தாய்ப்பாலின் சுவையில் சிறிய மாற்றம் ஏற்படும். புதிய சுவை மூத்த குழந்தைக்குப் பிடிக்காமல் போனால் குழந்தையே பால் குடிப்பதை நிறுத்திவிடவும் வாய்ப்புள்ளது.

முதல் குழந்தைக்கு எத்தனை வயதுவரை தாய்ப்பால் கொடுக்கலாம்?

எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் 7 வயது வரை குழந்தைக்குத் தாய்ப் பாலூட்டியிருக்கிறார். அதனால் தாய்ப்பாலை நிறுத்துவது என்பது முழுக்க முழுக்க தாயின் முடிவுதான். வளர்ந்து பல் முளைத்த குழந்தைக்குப் பாலூட்டும்போது தாய்மார்கள் சில சங்கடங்களை உணரலாம். குழந்தைக்கு கடிக்கும் பழக்கம் வரும் என்பதால் டம்ளர், ஸிப்பர் போன்றவற்றைப் பழக்குவதைத் தவிர்க்க வேண்டும்'' என்றார்.

மனசு சொன்னா நிறுத்திடுங்க...

முதல் குழந்தைக்குப் பாலூட்டும்போது ஆர்வமில்லாமல் போவது, வேண்டா வெறுப்பாகப் பாலூட்டுவது. பாலூட்டும்போதே தூங்கிவிடுவது போன்றவை தொடர்ந்தால், மருத்துவ ஆலோசனையுடன், முதல் குழந்தைக்குத் தாய்ப்பாலை நிறுத்திவிடலாம்.

இரண்டாவது குழந்தைக்கு சீம்பால் கிடைக்குமா?

பிறந்த குழந்தைக்கு சீம்பால் மிகவும் அவசியமானது. அது ஊட்டச் சத்துகள் நிறைந்த நோய்த் தடுப்பு மருந்தும்கூட. ஏற்கெனவே பாலூட்டிக் கொண்டிருக்கும் நிலையில், இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு சீம்பால் சுரக்குமா என்ற சந்தேகம் எழலாம். இயற்கையின் படைப்பில் அனைத்தும் விந்தைகளே! இரண்டாவது பிரசவம் நடந்து குழந்தை பிறந்த உடனே தாய்க்கு சீம்பால் சுரக்கும்.