Published:Updated:

`கொரோனாவுக்குப் பரிந்துரைக்கப்படும் மலேரியா மருந்துகள்!’ - ஏற்றுமதிக்குத் தடை

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

நம் நாட்டில் முகக் கவசம், சானிட்டைஸர்கள், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றின் தேவை கொரோனா வைரஸ் தாக்குதலால் அதிகரித்துக் கொண்டிருப்பதால் இந்தப் பொருள்கள் அனைத்தையும் ஏற்றுமதி செய்வதற்கும் அரசு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவை எதிர்த்துப் போராட ஒரு மருந்து கூட இல்லையா என்பது விடையற்ற கேள்வியாக உள்ளது. மருந்து, தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆகியன இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளன. இந்த நிலையில் SARS நோயை எதிர்த்துப் போராடிய, மலேரியாவுக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (Hydroxy chloroquine ) மருந்தை, கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கும் தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தலாமா என்ற கேள்வியும் எழுந்தது.

கொரோனா
கொரோனா

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ( I C M R ) தலைவரான பல்ராம் பார்கவா திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயினை மருத்துவப் பணியாளர்கள் உட்கொள்ளலாம்.

நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகப்படுபவர்கள், நோய்த் தொற்று உறுதியானவர்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் வீட்டில் வசிப்பவர்கள் என இவர்களுக்கு அருகில் பணி செய்யும் மருத்துவப் பணியாளர்கள் இம் மருந்தை உட்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

மருந்து
மருந்து

இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைச்சகமும், மிகவும் அவசியமான காலகட்டத்தில் இம்மருந்தைப் பயன்படுத்தலாம் என்று ஒப்புதல் வழங்கி இருந்தது. இந்த நிலையில், DGFT( Director General of Foreign Trades) புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, ஹைட்ரோ குளோரோகுயின் மற்றும் அதன் மூலக்கூறுகளால் தயாரிக்கப்படும் மருந்துகள் அனைத்தையும், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் தேவை ஏற்பட்டால், நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அனுப்பலாம். மேலும், மார்ச் 25,2020-க்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி உண்டு என்றும் கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டுச் சந்தையில் மருந்து தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்ற காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசுகையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் குளோரோகுயின் மருந்துகள் கோவிட் 19-ஐ எதிர்த்துப் போராட வல்லவை எனக் குறிப்பிட்டதிலிருந்து இந்த மருந்துக்கான தேவை அதிகரித்துள்ளது.

ஏற்றுமதி
ஏற்றுமதி

நம் நாட்டில் முகக்கவசம், சானிட்டைஸர்கள், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றின் தேவை கொரோனா வைரஸ் தாக்குதலால் அதிகரித்துக் கொண்டிருப்பதால், இந்தப் பொருள்கள் அனைத்தையும் ஏற்றுமதி செய்வதற்கும் அரசு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு