Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

பணம் இருந்தாதான் நாலு பேர் மதிப்பாங்க என்பது ஏ.டி.எம்-க்கும் பொருந்தும்.

suresh.kannan.1806

தேர்வுக்கட்டணத்துக்காக ஒரு தொகையை இன்று மகளிடம் காலையில் கொடுத்தனுப் பினேன்.

‘கட்டியாயிற்றா' என்று சற்று முன் வாட்ஸ் அப்பில் கேள்வி அனுப்பினால்... ‘Yep’ என்று பதில் அனுப்பியிருக்கிறாள்.

கட்டிவிட்டாளா, பீட்சா கடையில் எதையாவது வாங்கிச் சாப்பிட்டு ‘ஏப்பம்’ விட்டுவிட்டாளா... ஒன்றும் புரியவில்லை.

kundhaani

ஐட்டம் சாங்…

“கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன” மாதிரி ஆண் பாடறதா இருக்கட்டும்…

இல்ல “சொப்பன சுந்தரி நான்தானே…” மாதிரி பெண் பாடறதா இருக்கட்டும்…

ரெண்டுத்துலயும் பாட்டோட மையப் பொருள் என்னவோ பெண்ணாதான் இருக்கும்.

ஐட்டம் சாங்கோட flavour எப்பவும் அப்படித்தான் இருந்திருக்கு… (அட்லீஸ்ட் எனக்கு தெரிஞ்ச வரை)

முதல் தடவ, ஒரு ஐட்டம் சாங்ல ஆண் மையப்பொருளா இருக்கறதாலயோ என்னவோ…

இந்த #புஷ்பா பாட்டு அவ்வளோ பிடிச்சுருக்கு.

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

suriya.manian

மணலில இருந்து எக்மோருக்கு பைக்குல வந்துகிட்டு இருந்தேன். வர்ற வழியில ஒரு விபத்தைப் பார்த்தேன். ஆள் நடமாட்டம் குறைவா இருக்கும் அந்த இடத்துல, ஆக்டிவால வந்த 3 காலேஜ் பசங்க வண்டி கவுந்து ரத்தம் சொட்ட, சொட்ட நின்னுட்டு இருந்தாங்க.

அதை வேடிக்கை பார்த்துகிட்டு நின்னவங்க, ‘பசங்க ேவகமா வந்துருப்பாங்க, ஹெல்மட் போடல’னு குறை சொல்லிட்டு இருந்தாங்க.

அதுக்காக நான் மனுஷங்களை குறை சொல்லல, எத்தனையோ பேருக்கு ஓடிப் போயி உதவக் கூடியவங்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா, இன்னைக்கு நான் சந்திச்சவங்க இப்பிடி.

அந்த பசங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போக, பக்கத்துல இருந்த ஆட்டோகாரரை கேட்டா, `சவாரி உள்ள இருக்காங்க'னு சொல்லிட்டாரு, இன்னொரு பைக் காரரை கேட்டா , ‘டிரெயினுக்கு நேரமாச்சு’னு சொல்லிட்டாரு. வேற யாரும் உதவ முன்வரல. என்ன பண்றதுனு தெரியாம , ரொம்ப அடிப்பட்ட 2 பசங்களை என் பைக்குல ஏறுங்கப்பா நான் ஹாஸ்பிட்டல்ல விட்டுருறேன்னு சொல்லி பைக்குல ஏத்திக்கிட்டேன். இன்னொரு பையன், ‘நான் பசங்களுக்கு போன் பண்ணி, அவங்க கூட வந்துறேன்க்கா’னு சொன்னாரு.

அதுக்கு அங்க இருந்த வயசான பெரியவர் ஒருவர்,

`ஏம்மா போலீஸ் கேஸ்னு அலையவிடுவாங்கம்மா, ஆம்பளைங்களே பேசாம இருக்கும்போது உனக்கு எதுக்கு வேண்டாத வேல, பொம்பளப் புள்ள அமைதியா போம்மா'னு சொன்னாரு. பசங்களோட உசுரவிட பிரச்னை பெரிசு இல்லைனு தோணவே, பைக்கில் பசங்களை கூட்டிக்கிட்டு கிளம்பிட்டேன். இன்னும் எத்தன நாள் ஆம்பள, பொம்பளனு வித்தியாசம் பார்ப் பாங்க. உசுர காப்பாத்தணும்னு நினைக்கக்கூடவா ஒரு பொண்ணுக்கு தகுதி இல்ல? என்ன மானங்கெட்ட சிந்தனையோ இது?

நான் ஹாஸ்பிட்டல் போகவும், அந்த பசங்களோட ஃபிரெண்ட்ஸ் அங்க வரவும் சரியா இருந்துச்சு. சின்ன உதவி பெரிய திருப்தியைக் கொடுத்துச்சு.

இத பெருமைக்காகப் பதிவிடல. ஆழமாகப் பதிய வைக்கணும்.

“வீ ஆர் நாட் எ வீக்கர் செக்ஸ்.''

aruna.raj.35

‘எம்மா வெதர் ரிப்போர்ட் பார்க்கணும் போன் குடுங்க'

‘எதுக்கு? அதான் மழை வரலையே!'

‘அதைத்தாம்மா பார்க்கணும்... ஏன் வரலைன்னு! பரீட்சைய சொன்ன டேட்ல வச்சு தொலைக்கப்போறாங்க ஸ்கூல்ல!’

@manipmp

பணம் இருந்தாதான் நாலு பேர் மதிப்பாங்க என்பது ஏ.டி.எம்-க்கும் பொருந்தும்.

@arattaigirl

ஓடி வந்து ஏற முனைகையில் கிளம்பிச் செல்லும் பேருந்து வாழ்வின் அத்தனை அவமானங்களையும் நினைவுபடுத்திவிடுகிறது.

@Ganesh_ViruFan

ஃபுல் மேக்கப்புல இருக்க பொண்ண பார்த்து நீ இன்னும் ரெடி ஆகலையான்னு கேக்கற கொடும சீரியல்ல மட்டும்தான் நடக்கும்!

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

@RavikumarMGR

நாமளே டிராபிக், பிசினஸ் டென்சன்ல வண்டி ஓட்டிக்கிட்டுருப்போம். இந்த ஆட்டோக்காரங்க கண்டதை ஆட்டோ பின்னாடி எழுதி வச்சுக்கிட்டு நம்மள இன்னும் காண்டாக்குறாங்க... `நெருங்கி வராதே... நொறுங்கிப் போவாய்...'

@rvsubbiah

தராசுக்கு நியாய/அநியாயங்கள் தெரியாது.எப்பக்கம் கணமோ அப்பக்கம் சாயும்.இவ்வுலகமும் அதுபோலவே இருக்கிறது...

@Kozhiyaar

குழந்தைகள் தப்பு பண்ணா நாம கூட்டுக் களவாணி ஆகணும்...

அதே நாம ஏதாவது தப்பு பண்ணா, அப்ரூவராகி மாட்டி விட்டுட்டு போய்கிட்டே இருப்பாங்க!