Published:Updated:

மீண்டும் மிரட்டும் கொரோனா... மக்கள் கேள்விகளும் மருத்துவ விளக்கங்களும்

மீண்டும் மிரட்டும் கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
மீண்டும் மிரட்டும் கொரோனா

ஒரு நபருக்கு காணப்படும் அறிகுறிகளை வைத்து அது கோவிட் -19, டெல்டா, ஒமிக் ரான் என்றெல்லாம் கண்டுபிடித்துச் சொல்ல முடியாது.

மீண்டும் மிரட்டும் கொரோனா... மக்கள் கேள்விகளும் மருத்துவ விளக்கங்களும்

ஒரு நபருக்கு காணப்படும் அறிகுறிகளை வைத்து அது கோவிட் -19, டெல்டா, ஒமிக் ரான் என்றெல்லாம் கண்டுபிடித்துச் சொல்ல முடியாது.

Published:Updated:
மீண்டும் மிரட்டும் கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
மீண்டும் மிரட்டும் கொரோனா

வரும்... ஆனால் வராது என்று போக்கு காட்டிய கொரோனாவின் மூன்றாவது அலை ஒருவழியாக வந்துவிட்டது. வந்தவேகத்தில், அதிதீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. தொற்றால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை பன்மடங்கு பெருகினாலும், மூன்றாம் அலையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோர் ஆபத்தின்றி நோயிலிருந்து மீள்கிறார்கள் என்றும் மருத்துவ வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

மீண்டும் கட்டுப்பாடுகள், வீட்டுக்குள் சுருங்கும் வாழ்க்கை என ரிப்பீட் மோடுக்குள் போய்க் கொண்டிருக்கும் மக்களுக்கு, இந்தத் தொற்று குறித்த ஏராளமான சந்தேகங்கள், கேள்விகள், குழப்பங்கள் தொடர்கின்றன. அத்தனைக்கும் அந்தந்தத் துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.

மீண்டும் மிரட்டும் கொரோனா... மக்கள் கேள்விகளும் மருத்துவ விளக்கங்களும்

ஆபத்தில்லை என்ற அலட்சியம் வேண்டாமே...

ஒமிக்ரான் ஆபத்தில்லாத உருமாற்றமா, ஒமிக்ரான் அறிகுறிகள், அதன் தீவிரம் என ஒமிக்ரான் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்று நோய் மருத்துவர் சுப்ரமணியம் சுவாமிநாதன்.

``அதிவேகமாகப் பரவும் இந்த கோவிட் வைரஸ் கிட்டத்தட்ட எல்லோரையும் (ஏற்கெனவே தொற்றுக் குள்ளானவர்கள், ஆகாதவர்கள்) பாதித்துவிட்டுதான் போகும் என்பது உண்மையா?''

``கடந்த சில தினங்களாக கோவிட் தொற்று உறுதியாகி மருத்துவமனைக்கு வருபவர்களில் ஏற்கெனவே தொற்றுக்குள்ளானவர்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என எல்லோரையும் பார்க்கிறோம். அந்த அளவுக்கு இந்த அலை அதிவேகமாக இருப்பது உண்மைதான். இந்த உருமாற்ற வைரஸ் ஆபத்தில்லாதது என்ற அலட்சியத்தையும் மக்களிடம் பார்க்க முடிகிறது. பல நாடுகளில் ஐசியூ படுக்கைகள் நிரம்ப ஆரம்பித்திருக் கின்றன. அதைவைத்துப் பார்க்கும் போது தொற்றின் வீரியம் ்அதிகரித்திருக்கிறது என்று தெரிகிறது. எனவே எல்லோருமே கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.''

``கோவிட் -19, டெல்டா, ஒமிக்ரான் இதில் எந்த வகை கொரோனா இப்போது பரவுகிறது என எப்படிக் கண்டறிவது?''

``ஒரு நபருக்கு காணப்படும் அறிகுறிகளை வைத்து அது கோவிட் -19, டெல்டா, ஒமிக் ரான் என்றெல்லாம் கண்டுபிடித்துச் சொல்ல முடியாது. ஜீன் சீக்வென்சிங் டெஸ்ட் மூலம் உறுதிசெய்யப்பட வேண்டியது அது. எனவே அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடலாம். என் அனுபவத்தையே உதாரணமாகச் சொல் கிறேன்.

எனக்கு கோவிட் தொற்றியபோது கடுமையான உடல்வலி, தலைவலி என அறிகுறிகள் கிட்டத்தட்ட டெங்குவை போன்றே இருந்தன. டெங்குவாக இருக்கலாம் என டெஸ்ட் செய்தபோது, அது கோவிட் என உறுதியானது. எனவே அறிகுறிகளை வைத்து யாரும் தானாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம். அலட்சியமும் வேண்டாம். இது யாருக்கு உயிர்சேதத்தை ஏற்படுத்தும் என்பதை யும் நம்மால் சொல்ல முடியாது.''

மீண்டும் மிரட்டும் கொரோனா... மக்கள் கேள்விகளும் மருத்துவ விளக்கங்களும்
சுப்ரமணியம் சுவாமிநாதன்

``ஒமிக்ரான் ஆபத்தில்லாதது என்று நம்பலாமா?''

``ஒமிக்ரான் ஆபத்தில்லாதது என்றால் உயிரிழப்புகளே இருக்கக்கூடாதே.... தென் ஆப்பிரிக்காவில் டெல்டா ஏற்படுத்திய உயிரிழப்புகளில் ஒமிக்ரான் உயிரிழப்புகள் 16 சதவிகிதம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதாவது ஆறில் ஓர் உயிரிழப்பு என்பது சாதாரணமானதில்லையே... ஓர் உயிர் போனாலும் இழப்புதானே.... ஃபின் லாந்தின் சுகாதாரத் துறை அமைச்சர், இது `லாங் கோவிட் சிண்ட்ரோம்' பாதிப்பை, (அதாவது தொற்றிலிருந்து மீண்டபிறகும் ஏற்படும் அவதிகள்) ஏற்படுத்தும் என எச்சரித்திருக்கிறார். லாங் கோவிட் பாதிப்பை இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோதே நாம் இந்தியாவில் பார்த்தோம். அப்போது நோய்த் தொற்றின் எண்ணிக்கை குறைவு. இப்போதைய சூழலில் நோய்த்தொற்றின் எண்ணிக்கை மிக அதிகம். நோய் பாதிப்புக்குப் பிறகு இத்தனை சதவிகிதம் லாங் கோவிட் பாதிப்பு வரக்கூடும் என ஒரு கணிப்பு உண்டு. ஆனால் இந்த முறை அந்தச் சதவிகிதம் மிக அதிகமாகும் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.

மூன்றாம் அலையில் தொற்றால் பாதிக்கப் படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதைப் பார்க்கிறோம். அப்படி பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு பிரச்னைகள் பெரிதாக இல்லை என்றாலும், நோய் பாதித்த 30 நாள்களுக்குப் பிறகு நீரிழிவு இருப்பது கண்டுபிடிக்கப்படுவதாக அமெரிக்காவின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் சொல்கிறது. கடந்த அலையில் தொற்றுக் குள்ளான பெரியவர்களுக்கு இதுபோன்ற நீரிழிவு கண்டறியப்பட்டது. இந்த முறை குழந்தைகளுக்கு நீரிழிவு கண்டறியப்பட்டது 115 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகச் சொல்லப் படுகிறது. ஏற்கெனவே பாதிப்பு இருந்து கண்டறியப்படாதவர்களா, கோவிட் பாதிப் பால் புதிதாக அந்தப் பிரச்னை உருவானதா என்பது பற்றிய விவாதம் தொடர்ந்து கொண் டிருக்கிறது. எனவே இந்த அலை ஆபத்தில் லாதது என்ற அலட்சியம் வேண்டாம்.''

``கொரோனா காற்றில் பரவுவது உறுதிசெய்யப்பட்ட நிலையில் வீட்டுக்குள்ளும் மாஸ்க் அணிய வேண்டுமா?''

``வீட்டுக்குள் இருக்கும் நபர்கள் என்றால் வீட்டில் இருக்கும்போது மாஸ்க் அணியத் தேவையில்லை. ஆனால், அக்கம்பக்கத்து வீட்டாருடன் பேச வேண்டிய நிலையில் வீட்டுக்குள்ளும் மாஸ்க் அணிய வேண்டும். அறைக்குள் இருக்கும்போது கொரோனாவின் பரவல் வேகம் மிக மிக அதிகம். அதிலும் ஒமிக்ரான் பரவ, 15 நிமிடங்கள் எல்லாம் தேவையில்லை, ஒரு நிமிடம் போதும் என கண்டுபிடித்திருக்கிறார்கள். வெளியே இருக்கும்போதும், சாப்பிடுவது, டீ குடிப்பது போன்ற அவசியமான விஷயங்களின்போதும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது பாதுகாப்பானது.''

``தடுப்பூசி போட்டுக்கொள்வது ரிஸ்க் என்ற நம்பிக்கையில் அதைத் தவிர்ப்போருக்கு உங்கள் அட்வைஸ்....''

``சாதாரணமாக சாலையைக் கடப்பதில்கூட ரிஸ்க் இருக்கவே செய்கிறது. 100 சதவிகித பாதுகாப்பு வேண்டும் என்றால் வெளியே போகாமல் வீட்டுக்குள்தான் இருக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டபிறகும் தொற்றுக்குள்ளானவர்கள், தீவிர நிலைக்குச் செல்வதில்லை என்பதை மருத்துவர்களாகிய நாங்கள் பார்க்கிறோம்.''

``நெருக்கடியான குடியிருப்புகளில் வசிக்கும் மனிதர்கள் தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வார்கள்?''

``இதே பிரச்னை நியூயார்க், டோக்கியோ என பல நாடுகளிலும் இருக்கிறது. அவர்களால் இந்தச் சூழலை சமாளிக்க முடிந்தபோது நம்மால் முடியாதா... பிரச்னை இடமல்ல, தனிமனித ஒழுக்கம்தான். மால், தியேட்டர் மாதிரியான காற்றோட்டமில்லாத இடங்களில் தான் தொற்று வேகமாகப் பரவும். மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது, தடுப்பூசி... இந்த மூன்றும் பின்பற்றப்பட்டாலே பயப்பட வேண்டாம்.

லட்சுமிநாராயணன்
லட்சுமிநாராயணன்

''இன்னும் பல அலைகள் வரலாம்... ரமணன் லட்சுமிநாராயணன்

வாஷிங்டனின் ‘சென்டர் ஃபார் டிசீஸ் டைனமிக்ஸ், எகனாமிக்ஸ் அண்ட் பாலிசி’ அமைப்பின் இயக்குநரும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் துறையில் விரிவுரையாளருமான ரமணன் லட்சுமிநாராயணன், கொரோனா இந்தியாவுக்குள் அடியெடுத்துவைப்பதற்கு முன்பே அடுத்த ஹாட்ஸ்பாட் இந்தியாதான் என்று கணித்தவர். பெருந்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறதா ஒமிக்ரான், நான்காவது அலைக்கும் வாய்ப்பிருக்கிறதா, ஒருவேளை மற்றோர் உருமாற்றம் வந்தால் அதன் தாக்கம் எப்படியிருக்கும் என்றெல்லாம் பேசுகிறார் அவர்...

‘`ஒமிக்ரான் திரிபுடன் இந்தத் தொற்றுநோய் முடிந்து விடுவதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதேநேரத்தில், இந்த உருமாற்றமானது, சுகாதார கட்டமைப்பு தொடர்பான சவால்களில் முந்தைய இரண்டு அலைகளைப் போல அதிக சேதத்தை ஏற்படுத்தாது என்று நம்பலாம். கொரோனா வைரஸின் அடுத்த உருமாற்றம் ஆபத்தானதாக இருக்குமா, இல்லையா என்பது இப்போதைக்கு யாருக்கும் தெரியாது. ஒவ்வோர் ஆண்டும் இன்ஃப்ளூயென்ஸா வைரஸின் உருமாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றிலும் சில திரிபுகள் ஆபத்தற்றவையாகவும், சில திரிபுகள் ஆபத்தானவையாகவும் இருப்பதைப் பார்க்கிறோம். இப்போதைக்கு ஒரு விஷயத்தை உறுதி யாகச் சொல்ல முடியும்.... கொரோனா நம்மைவிட்டுப் போகப் போவதில்லை.... ஒமிக்ரான் என்பது கடைசி திரிபுமல்ல. அடுத்தடுத்த அலைகளுக்கும் நிச்சயம் வாய்ப்பிருக்கிறது. அது அந்த வைரஸ் திரிபின் தன்மை மற்றும் தடுப்பூசி போடப்படும் அளவைப் பொறுத்தது. உலகின் ஒவ்வொரு குடிமகனும் தன்னை யும், தன் உறவுகளையும் தன்னைச் சுற்றியுள்ள முதியவர் களையும் பாதுகாக்க எடுக்க வேண்டிய குறைந்தபட்ச முன்னெச்சரிக்கை தடுப்பூசி. அது நம் கடமையும்கூட.

குழந்தைசாமி
குழந்தைசாமி

’’உருமாற்றங்களுக்கு எதிராக வேலைசெய்யாதபோது பூஸ்டர் டோஸை பரிந்துரைப்பது ஏன்?

மீண்டும் நிரம்ப ஆரம்பித்திருக்கும் மருத்துவமனை படுக்கைகள், அவசரமாகத் தொடங்கப்பட்ட பூஸ்டர் டோஸ், ஒமிக்ரானின் வீரியம் தொடர்பாக மக்களுக்கு நிறைய கேள்விகள் உள்ளன. அவற்றுக் கெல்லாம் பதில் தருகிறார், பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநரும், கோவிட்-19 டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினருமான மருத்துவர் குழந்தைசாமி.

``ஒமிக்ரான் பாதித்தவர்களுக்கு மருத்துவமனை அனுமதி தேவைப்படுவதில்லை என்கிறார்கள். ஆனால் மருத்துவமனைகளை அவசரமாகத் தயார் செய்கிறார்களே?''

``தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், கோவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் மத்தியில் ஒமிக்ரான் லேசான தொற்றை ஏற்படுத்தும். ஆனால், தடுப்பூசி போடாமல் இருப்பவர்களை ஒமிக்ரான் தீவிரமாக பாதிக்கும் என்று கருதப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. சென்னையில் மட்டும் 10 சதவிகிதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்றால் அதுவே 7-8 லட்சம் பேர் இருப்பார்கள். இதனைக் கருத்தில் கொண்டுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.''

``கொரோனாவின் புதிய உருமாற்றங்களுக்கு எதிராக இப்போதுள்ள தடுப்பூசிகள் வேலைசெய்யாது என்கிறார்கள். அப்போது ஏன் பூஸ்டர் டோஸை பரிந்துரைக்கிறார்கள்?''

தடுப்பூசிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். உதாரணத்துக்கு போலியோ, தொண்டை அடைப்பான், ரணஜன்னி தடுப்பூசிகளைச் செலுத்தினால் அந்த நோய்கள் மீண்டும் வராது. இரண்டாவது வகை தடுப்பூசிகளைச் செலுத்தினால் நோயும் வராது, நோயைப் பரப்பும் கிருமியையும் உலகத்திலிருந்து அழித்துவிடும். பெரியம்மை நோயைப் பரப்பும் வைரஸ் மனிதர்களிடம் மட்டுமே வாழும். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியதால், அதற்கு வாழ வழியில்லாமல் போய்விட்டது.

மூன்றாவது வகை தடுப்பூசியைச் செலுத்தினால் எதிர்காலத்தில் நோய் வராது என்று சொல்ல முடியாது. ஆனால், அதைச் செலுத்திக்கொண்டால் கடுமையான பாதிப்பு, உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கும். காசநோய் தடுப்பூசியைச் செலுத்தினால் நோய் பாதிக்காது என்று சொல்ல முடியாது. ஆனால், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மூளை பாதிப்புகள் போன்றவை ஏற்படாது. கொரோனா தடுப்பூசி 3-வது வகையைச் சேர்ந்தது. கடுமையான தொற்றைக் குறைத்து, உயிரிழப்பைக் குறைக்க வேண்டும் என்பதுதான் இந்தத் தடுப்பூசியின் நோக்கம். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஏற்படும் தொற்றை `Breakthrough Infection' என்பார்கள். இது மக்கள்தொகையில் 1 சதவிகிதம் பேருக்கு வரலாம். வந்தாலும் தாக்கம் குறைவாகவே இருக்கும்.

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகுதான் பூஸ்டர் டோஸ் போடவேண்டும் என்கிறார்கள். இரண்டு டோஸ் போட்ட பிறகு (ஒன்பது மாதங்களுக்குள்) கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவர்கள் எப்போது பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்?

கோவிட் பாதிப்பு ஏற்பட்டு ஒன்பது மாதங்கள் கழித்து பூஸ்டர் போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி செலுத்தியதையும், பாதிப்பு ஏற்பட்டு மீண்டதையும் ஒன்றுபோல கணக்கிட வேண்டும். அதாவது நோய் பாதிப்பு உறுதி செய்யப்படும் நாளை ஒரு தடுப்பூசி டோஸ் செலுத்திக்கொண்ட நாளாகக் கணக்கிட வேண்டும். அதிலிருந்து ஒன்பது மாதங்கள் கழித்து பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism