சினிமா
Published:Updated:

மருத்துவ நிலவரம் மாறிப்போச்சு!

கொரோனா சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா சிகிச்சை

தற்போது தொற்று எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், மருத்துவமனைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளன.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை சமயத்தில், மருத்துவமனைகளில் இடம் கிடைக்காது மக்கள் காத்திருந்த கொடுமைகளை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். தற்போது தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் பரவல் காரணமாக நாளொன்றுக்குப் புதிதாக 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகிறது. அதேபோல தினசரி 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைகிறார்கள். தற்போது மருத்துவமனைகளின் நிலைமை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு நேரில் சென்று பார்த்தோம்.

அன்று
அன்று
அன்று
அன்று
அன்று
அன்று
இன்று
இன்று
இன்று
இன்று
இன்று
இன்று

கொரோனா இரண்டாம் அலை உச்சத்திலிருந்த நேரத்தில், படுக்கையாக இருந்த நோயாளிகளுடன் இந்த மருத்துவமனை வாசலில் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்களும், நூற்றுக்கணக்கான பேர் ஆக்சிஜன் துணையோடும் காத்திருந்த காட்சியை எல்லாம் கண்முன்னே கண்டோம். தற்போது தொற்று எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், மருத்துவமனைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளன. அட்மிஷன் போடுமிடம் தொடங்கி ஐ.சி.யூ வார்டு வரை பெரும்பாலான படுக்கைகள் காலியாகவே உள்ளன. இந்த மருத்துவமனையில் இரண்டாம் அலை சமயத்தில் இரண்டாயிரம் நபர்களுக்கு மேல் சிகிச்சை பெற்றுவந்தனர். தற்போது வெறும் 200-க்கும் குறைவான நபர்களே சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிலும் பெரும்பாலானோருக்கு மிகவும் லேசான பாதிப்பு மட்டுமே. ஐ.சி.யூ வார்டில் வெண்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை பெற்றுவரும் 20 பேரில் 18 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். மீதமுள்ளவர்களும் நீண்ட நாள் இணைநோய் பாதிப்பு உடையவர்கள் தான். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்குப் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை நாம் கண்முன்னே காண முடிந்தது.