Published:Updated:

திடீரென அதிகரித்த ஃபேளேவர்டு ஆணுறைகள் விற்பனை; வெளிவந்த அதிர்ச்சியான காரணம்!

Condom (Representational Image) ( Photo by Reproductive Health Supplies Coalition on Unsplash )

ஆணுறைகளை நீண்ட நேரம் வெந்நீரில் ஊறவைப்பதால், பெரிய கரிம மூலக்கூறுகள் ஆல்கஹாலிக் சேர்மங்களாக சிதைந்து போதைப் பொருளாக மாற்றமடைவதாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வேதியியல் ஆசிரியர் கூறுகிறார். ஆணுறைகளை போதைப்பொருளாக பயன்படுத்துவது மேற்கு வங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் துர்காபூர் பகுதியில் சுவையூட்டப்பட்ட ஆணுறைகள் (Flavoured Condoms) கடந்த வாரங்களைவிட திடீரென அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக மருந்தக உரிமையாளர் ஒருவர் சந்தேகம் கொண்டுள்ளார். சுவையூட்டப்பட்ட ஆணுறைகளுக்கு, துர்காபூர் சிட்டி சென்டர், பிதான் நகர், பெனாசிட்டி மற்றும் முச்சிபாரா, சி மண்டலம், ஏ மண்டலம் போன்ற பகுதிகளில் கடும் தட்டுப்பாடும் நிலவியுள்ளது.

சந்தேகத்தின் அடிப்படையில், சுவையூட்டப்பட்ட ஆணுறைகள் வாங்குவோரை, அவர் கவனிக்கத் தொடங்கியுள்ளார். சுவையூட்டப்பட்ட ஆணுறைகளை வாங்க மருந்தகத்துக்கு வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது, கொதிநீரில் சுவையூட்டப்பட்ட ஆணுறைகளை நீண்ட நேரம் ஊறவைத்து, அந்த நீரை அருந்தினால் சுமார் 10 மணி நேரம் வரை போதை உச்சத்துடன் இருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Drug Addiction
Drug Addiction

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மருந்தக உரிமையாளர், `துர்காபூரை சுற்றியுள்ள பகுதிகளில் முன்பு, நாள் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு சுவையூட்டப்பட்ட ஆணுறைகளே விற்கப்பட்ட நிலையில், தற்போது, பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுவது சந்தேகத்தைக் கிளப்பியது. அதன் அடிப்படையில், கடைக்கு ஆணுறைகள் வாங்க வந்தவர்களிடம் இது குறித்து விசாரித்தோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆணுறைகளை நீண்ட நேரம் வெந்நீரில் ஊறவைப்பதால், பெரிய கரிம மூலக்கூறுகள் ஆல்கஹாலிக் சேர்மங்களாக சிதைந்து போதைப் பொருளாக மாற்றமடைவதாக மேற்கு வங்கத்தை சேர்ந்த வேதியியல் ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆணுறைகளை போதைப் பொருளாகப் பயன்படுத்தும் செயல் மேற்கு வங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விரிவான விசாரணையை நடத்தி வருவதாக துர்காபூர் துணை மாவட்ட மருத்துவமனையின் கண்காணிப்பாளர் திமான் மண்டல் பங்களாஹண்ட் கூறியுள்ளார்.

ஆணுறை
ஆணுறை
Freepik

இருமல் மருந்து, ஷேவிங் க்ரீம், பெயின்ட், நகப்பூச்சு என பலவற்றை மதுவுக்கு மாற்றாக உயிருக்கு ஆபத்தானது எனத் தெரிந்தும் பயன்படுத்திய நிலையில், அந்த வரிசையில், சுவையூட்டப்பட்ட ஆணுறைகளும் இணைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.