Published:Updated:

"எபிடெமிக்கில் தமிழகம்!" - கொரோனா உண்மை நிலவரம் என்ன?

கொரோனா
கொரோனா

மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டதா, சென்னை மட்டும் ஹாட்ஸ்பாட் ஆக என்ன காரணம்? இதுதான் தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களின் இப்போதைய கேள்வி.

''தமிழகம், இப்போது எந்தக் கட்டத்தில் இருக்கிறது?'' - இந்தக் கேள்விக்கு மூத்த மருத்துவர் சுந்தரராமன் அளித்த பதில்:

''நான்காவது நிலையான எபிடெமிக்கில் இருக்கிறது. எபிடெமிக்கில் சில சூழல்கள் இருக்கின்றன. அதன்படி, இனிவரும் நாள்களில் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும். அப்படி அதிகரிக்கும் எண்ணிக்கை, ஒருகட்டத்துக்குமேல் தானாகக் குறையும். அப்போது எண்டெமிக் சூழலை அடைந்து, கொஞ்சம் கொஞ்சமாக வைரஸ் முடிவுக்கு வரலாம்.''

- கொரோனா குறையுமா, எகிறுமா? - இதுதான் அனைவரின் மனத்திலும் உள்ள கேள்வி! ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன், 'கொரோனாவின் உச்சக்கட்ட நிலை ஜூலை மாத நடுவில் ஏற்படும்' என எதிர்பார்க்கப்பட்டது.

சுந்தரராமன்
சுந்தரராமன்

பிறகு, 'தடுப்பு நடவடிக்கைகள் ஜூன் வரை மேற்கொள்ளப்பட்டால், நான்கு மாதங்கள் தள்ளிப்போடப்பட்டு அக்டோபரில் அதன் உச்சக்கட்டம் ஏற்படலாம்' எனக் கூறப்பட்டது. இப்போது, 'மே 17-லிருந்து தளர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், செப்டம்பர் மாத நடுவிலேயே உச்சக்கட்டம் வந்துவிடக்கூடும்' என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாள்களாக, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500-யைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள். இந்த நிலையிலும், 'இன்று வரை நாம் `சமூகப் பரவல்' எனப்படும் மூன்றாம்கட்ட தாக்குதலுக்குள்ளேயே செல்லவில்லை' என்கிறது தமிழக அரசு.

இந்தப் பின்புலத்தில்தான் 'உண்மையில் நாம் எந்தக் கட்டத்தில் இருக்கிறோம்?' என்பதை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின்கீழ் பணிபுரிந்த மூத்த மருத்துவர் சுந்தரராமன், ஜூனியர் விகடன் இதழிடம் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

கொரோனா குழப்பங்களைத் தெளிவுபடுத்தும் அந்தப் பேட்டியை முழுமையாக வாசிக்க > நான்காம் கட்டத்தில் தமிழகம்! - எச்சரிக்கும் மருத்துவர் Click here https://bit.ly/2ztMwIh

சென்னை 'ஹாட்ஸ்பாட்' ஏன்?

சமீப நாள்களாக, தமிழகத்தில் ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப் படுகிறது. அதில் ஐம்பது சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டதா, சென்னை மட்டும் ஹாட்ஸ்பாட் ஆக என்ன காரணம்? இதுதான் தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களின் இப்போதைய கேள்வி.

"எபிடெமிக்கில் தமிழகம்!" - கொரோனா உண்மை நிலவரம் என்ன?

இதுகுறித்து நம்மிடம் பேசிய பொது மற்றும் அறுவைசிகிச்சை மருத்துவர் பூபதி ஜான், ''ஒரு வைரஸின் பரவும் தன்மை, அதன் பெருக்கத் தன்மையைப் பொறுத்தது. கொரோனா வைரஸ் ஒருவர்மூலம் ஐந்து பேருக்குப் பரவுகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் ஐந்து பேருக்குப் பரப்புகின்றனர். அதுதான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம். நெருக்கமான சூழ்நிலைகளில் வேகமாகவும், காற்றோட்டம் உள்ள விசாலமான பகுதிகளில் மெதுவாகவும் தொற்று பரவும். மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியாக சென்னை இருப்பதால், கொரோனா தொற்று வேகமாகப் பரவுகிறது'' என்றார்.

'சென்னையில் மட்டும் பரிசோதனையை அதிகரிக்க காரணம் என்ன... சென்னை மட்டும் ஹாட்ஸ்பாட்டாகப் பார்க்கப்படுவது ஏன்?' என்று இன்னொரு பக்கம் கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கான பதிலைச் சொல்லும் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > சென்னை 'ஹாட்ஸ்பாட்' ஏன்? Click Here https://bit.ly/2WtNqgZ

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு