Published:Updated:

எலி வால் கூந்தலுக்குத் தீர்வு! - சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

கூந்தலுக்குத் தீர்வு
பிரீமியம் ஸ்டோரி
News
கூந்தலுக்குத் தீர்வு

#Health

டர்த்தியான கூந்தல் அமையப்பெறுவது வரம். எல்லோருக்கும் அது அமைவ தில்லை. மாறிப்போன வாழ்க்கையில் கூந்தல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க பலருக்கும் நேரமும் பொறுமையும் இருப்பதில்லை. விளைவு... கூந்தல் எலி வால் போல் மெலிந்து கவலை கொள்ளச் செய்கிறது. கூந்தல் மெலிவுக்கு காரணமாகும் அடிப்படை விஷயங்களை அறிந்து சரிசெய்து கொள்ளுங்கள்.

அக்னி நட்சத்திரத்தில்கூட ஆவி பறக்கும் வெந்நீரில்தான் தலைக்குக் குளிப்பேன் என்பவர்கள், எலி வால் கூந்தலை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். அதிக சூடான நீர், கூந்தல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. எப்போதுமே வெது வெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் தலையை அலசுவதுதான் சிறந்தது.

எலி வால் கூந்தலுக்குத் தீர்வு! - சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

நயன்தாரா மாதிரி முன்னந்தலை முடியை இழுத்து உயர்த்திச் செய்துகொள்கிற ஹேர் ஸ்டைல் உங்களுக்கு அழகாக இருக்கலாம். ஆனால், அது ஆரோக்கியமானதா என யோசியுங்கள். கூந்தலை இழுத்துப் பிடித்து, இறுகக் கட்டும்படியான எந்த ஹேர் ஸ்டைலும் நல்லதல்ல. கூந்தல் மெலிவுக்கு காரணமாகும். ஜாக்கிரதை.

தினமும் 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் கட்டாயம். அதுதான் அழகு, ஆரோக்கியம் எல்லாவற்றுக்கும் அடிப்படை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எலி வால் கூந்தலுக்குத் தீர்வு! - சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

உடைகளைத் தினமும் அயர்ன் செய்து அணியலாம், ஆபத்தில்லை. கூந்தலை தினமும் அயர்ன் செய்யத்தான் வேண்டுமா... அது தற்காலிக அழகைத் தந்தாலும் காலப் போக்கில் கூந்தலை மெலியச் செய்யும்.

கூந்தலைச் சிக்கெடுக்காமல் அப்படியே பின்னிக்கொள்வது மிகப்பெரிய தவறு. அகலமான பற்கள் கொண்ட சீப்பு அல்லது விரல் நுனிகளால் கூந்தலைச் சிக்கெடுத்துவிட்டு, பிறகே எந்தவிதமான ஹேர் ஸ்டைலையும் செய்துகொள்ள வேண்டும்.