லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

அவள் Online!

அவள் Online!
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் Online!

தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டதிலிருந்து ஒரு மாதம்வரை தாம்பத்திய உறவின்போது கருத்தடை முறைகளைப் பின்பற்றுவதும் பாதுகாப்பான உறவில் ஈடுபடுவதும் சிறந்தது

மகிழ்ச்சி, புன்னகை, ஆச்சர்யம், அற்புதம், அனுபவம், பரவசம், பயன்பாடு... இப்படி எண்ணற்ற விஷயங்கள் விகடன் இணையதளத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் நீங்களும் படித்து, பார்த்து, பயன்பெற கடந்த இரு வாரங்களில் வெளியானவற்றில் சில விஷயங்கள் இங்கே...

Covid Questions:

தடுப்பூசி போட்ட பின்பு எத்தனை நாள்கள் கழித்து தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்?

``கொரோனா தடுப்பூசிக்கும் இல்லற வாழ்க்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, உறவில் ஈடுபட இத்தனை நாள் இடைவெளி விட வேண்டும் என்கிற மாதிரி எந்தக் கணக்கும் இல்லை. ஆனால், தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டதிலிருந்து ஒரு மாதம்வரை தாம்பத்திய உறவின்போது கருத்தடை முறைகளைப் பின்பற்றுவதும் பாதுகாப்பான உறவில் ஈடுபடுவதும் சிறந்தது’’ என்று கூறும் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மேலும் சில ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்குகிறார்.

முழு கட்டுரையையும் இந்த https://bit.ly/3wIwwLq லிங்க்கில் படிக்கலாம்.

`வேலம்மாள் பாட்டி ஒரே நாளில் வைரலானது இப்படித்தான்!’ - பின்னணி சுவாரஸ்யம் சொல்லும் ஜாக்சன் ஹெர்பி

`` `அந்தப் பணத்த காட்ட மாட்டேன், அது நான் சேலை எடுக்க வச்சிருக்கேன்’ சொன்னாங்க. அவங்ககிட்ட ஜாலியா பேசி, `சும்மா காட்டுங்க பாட்டி...’னு சொன்னேன். உடனே பணத்தையும், மளிகைப் பொருள்களையும் காட்டிட்டு சந்தோஷத்துல பொக்கை வாய் காட்டி சிரிச்சாங்க. அதை அப்படியே கேமராவில பதிவு செஞ்சேன். பாட்டிக்குச் சேலை எடுத்துக்கொடுக்கலாம்னு ஏ.டி.எம்முக்கு போய் 2,000 ரூபாய் எடுத்து அந்தப் பாட்டி வீட்டுக்குப் போய் அவங்ககிட்ட கொடுத்து சேலை எடுத்துக்கோங்கனு சொல்லிட்டு வந்துட்டேன்...'' - பாட்டியை போட்டோ எடுத்த ஜாக்சன், சுவாரஸ்ய அனுபவங்களை அடுக்குகிறார்.

விரிவான பேட்டியை இந்த https://bit.ly/3cOu25W லிங்க்கில் படிக்கலாம்

கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின்! - குட்டி ரேவதி பகிரும் சித்த மருத்துவக் குறிப்புகள்

``கொரோனா வந்த பிறகு, தொண்டை கரகரப்பாக இருப்பது, சளி அதிகமாக இருப்பது, இதன் விளைவாகத் தொண்டையில் சதை வளர்வது, களைப்பாக இருப்பது போன்ற பிரச்னைகள் வருகின்றன. இவற்றுக்குத் தீர்வாக, கிராம்புக் குடிநீர், சய சூரணம், கபசுரக் குடிநீர் + ஆடாதோடை மணப்பாகு ஆகிய சித்த மருந்துகளை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் தென்மாவட்டங்களில், நிலவேம்புக் குடிநீரை விஷஜுரக் குடிநீர் என்று சொல்வார்கள். எந்த வகையான காய்ச்சல் வந்தாலும் நிலவேம்புக் குடிநீரை அருந்தலாம். அதனால், டெங்கு காய்ச்சல், சிக்கன்குன்யா போன்ற நோய்களுக்கும் இது பயன்பட்டதை நாம் அறிவோம். கொரோனா, கபம் தொடர்பான நோய் என்பதால் கபசுரக் குடிநீரை அருந்தச் சொல்கிறோம்'' என்கிற குட்டி ரேவதி பயனுள்ள சித்த மருத்துவக் குறிப்புகளைப் பகிர்கிறார்.

அவற்றைத் தெரிந்துகொள்ள இந்த https://bit.ly/3iSaAcu லிங்க்கில் படிக்கலாம்