Published:Updated:

கோவிட்-19 தோற்றம்: தரவுகளைக் கேட்ட உலக சுகாதார நிறுவனம்; பதிலளிக்குமா சீனா?

டெட்ரோஸ் அதனோம் கெப்ரிசஸ்
News
டெட்ரோஸ் அதனோம் கெப்ரிசஸ்

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதேனாம் டிசம்பர் 14, புதன்கிழமையன்று ஊடக சந்திப்பு ஒன்றில் பேசினார்.

Published:Updated:

கோவிட்-19 தோற்றம்: தரவுகளைக் கேட்ட உலக சுகாதார நிறுவனம்; பதிலளிக்குமா சீனா?

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதேனாம் டிசம்பர் 14, புதன்கிழமையன்று ஊடக சந்திப்பு ஒன்றில் பேசினார்.

டெட்ரோஸ் அதனோம் கெப்ரிசஸ்
News
டெட்ரோஸ் அதனோம் கெப்ரிசஸ்

கோவிட் -19 உலகையே அச்சுறுத்திய நோய்த்தொற்று. பல நாடுகளின் அஸ்திவாரமும் ஆட்டம் கண்டது இந்நோய்த் தொற்றின் பரவலால்தான். சீனாவின் வூஹான் நகரில் இருந்து இந்தத் தொற்று உலக நாடுகளுக்குப் பரவியது. பல நாடுகளும் சீனாவைக் குற்றம் சாட்டியபோது, இதற்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போல சீனா கைகளை உயர்த்தி விட்டது. 

கோவிட்-19 தோற்றம்: தரவுகளைக் கேட்ட உலக சுகாதார நிறுவனம்; பதிலளிக்குமா சீனா?

சீனா, வேண்டுமென்று நோய்த்தொற்றைப் பரப்பியதா அல்லது இது ஒரு விபத்தா என்பது போன்ற பல கேள்விகள் ஒருபுறம் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதேனாம் , டிசம்பர் 14, புதன்கிழமையன்று ஊடக சந்திப்பு ஒன்றில் பேசினார்.

அதில், ``கோவிட்-19 வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்து நன்கு புரிந்துகொள்ள, நாங்கள் சில தரவுகளை சீனாவிடம் கேட்டுள்ளோம். நாங்கள் கோரிய தரவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு, சீனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹானில் இருந்து தோன்றிய SARS -CoV -2, மனிதனில் இருந்து மனிதனுக்குப் பரவும் தன்மை கொண்ட சுவாச நோய்க் கிருமியாக முதலில் வெளிப்பட்டது எப்படி என்பது தீவிர விவாதத்துக்குரியது.

WHO - உலக சுகாதார நிறுவனம்
WHO - உலக சுகாதார நிறுவனம்

வைரஸின் தோற்றம் குறித்து வல்லுநர்கள் இரண்டு கோட்பாடுகளை முன்வைத்துள்ளனர். முதல் கோட்பாடு இந்தத் தொற்று இயற்கையான முறையில் விலங்குகளிடமிருந்து மனிதனுக்குப் பரவியிருக்கலாம். இரண்டாவது கோட்பாடு, ஆராய்ச்சி தொடர்பான சம்பவத்தின் விளைவாக இந்த வைரஸ் மனிதர்களைத் தாக்கி இருக்கலாம். கோவிட் தொற்றை உலகளாவிய அவசர சுகாதார நிலையாக அறிவிக்கும் சூழல் அடுத்த ஆண்டு இருக்காது'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.