பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

பரிந்துரை: இந்த வாரம்...பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கான உடைகள்!

பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கான உடைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கான உடைகள்!

டினா வின்சென்ட்

`ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள். இந்த வாரம், பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கான ஆடைத் தேர்வுகளைப் பரிந்துரைக்கிறார் சென்னையில் உள்ள `XXL டினா வின்சென்ட்' லேபிளின் நிறுவனர் டினா வின்சென்ட்.

முன்பெல்லாம் கடைகளில் ஸ்மால்(S), மீடியம்(M) மற்றும் லார்ஜ்(L) என்ற வழக்கமான அளவுகளே கிடைத்தன. காலப்போக்கில் எக்ஸ்ட்ரா ஸ்மால்(XS), எக்ஸ்ட்ரா லார்ஜ்(XL) அளவுகளும் கிடைக்க ஆரம்பித்தன என்றாலும், டபுள் எக்ஸ்செல்(XXL) அளவில் உடைகள் அனைத்துக் கடைகளிலும் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதில் அதிக வெரைட்டி இருக்காது.

பரிந்துரை: இந்த வாரம்...பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கான உடைகள்!

இதற்குத் தீர்வாக, பல முன்னணி ஆடை வடிவமைப்பு நிறுவனங்கள், ‘ப்ளஸ் சைஸ்’ நபர்களுக்கும் ஒரு ஸ்டாண்டர்டு சைஸில் உடை வடிவமைக்கத் திட்டமிட்டுவருகின்றன. சில நிறுவனங்கள் ப்ளஸ் சைஸ் உடைகளை ஏற்கெனவே சந்தைக்கு அறிமுகப்படுத்திவிட்டன.

பருமனான பெண்களுக்கான தீர்வு, தையல் கலைஞர்கள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள்தான். ப்ளஸ் சைஸ் நபர்களுக்கு என்றே ஆடை வடிவமைக்கும் டிசைனர்கள் பலர் இருக்கின்றனர். ‘டிசைனர் என்றால் கட்டணம் அதிகமாக இருக்குமே’ என்று யோசிப்பவர்களுக்கு ஒரு தீர்வு இருக்கிறது. சல்வார், ஃபுல் டிரெஸ், பேன்ட், ஸ்கர்ட் என நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும், உங்களுக்கு விருப்பமான ஓர் உடையை ஒரு டிசைனரிடம் வடிவமைத்துக்கொள்ளுங்கள். பிறகு, உங்களுக்கு அருகில் உள்ள ஒரு தேர்ந்த தையல் கலைஞரிடம், அந்த உடையை அளவாகக் கொடுத்து, அடுத்தடுத்த உடைகளை உங்கள் பட்ஜெட்டுக்குள் தைத்துக்கொள்ளலாம்.

பரிந்துரை: இந்த வாரம்...பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கான உடைகள்!

பருமனானவர்கள் சந்திக்கக்கூடிய முக்கியப் பிரச்னை, அதிக எடை காரணமாக உடல்பாகங்களின் தசைப்பகுதிகளில் ஏற்படும் தொய்வு. இறுக்கமான உடைகளை அணியும்போது இந்தத் தொய்வு கண்களை உறுத்தும். எனவே இந்தப் பிரச்னை உள்ளவர்கள் இறுக்கமான உடைகளைத் தவிர்ப்பதுடன், சரியான உள்ளாடைகளையும் தேர்வு செய்வது அவசியம்.

உள்ளாடைகளைப் பொறுத்தவரையில், அண்டர் ஒயர் பிராக்களைத் தேர்ந்தெடுக்கும்போது நல்ல சப்போர்ட் கொடுக்கும். ஃபுல் பேன்டியைத் தேர்வு செய்யும்போது இது சராசரி பேன்டியைப் போல் இல்லாமல், சற்றே வயிற்றின் மேல்பகுதியில் இருந்து ஆரம்பித்து தசைகளின் தொய்வைக் கட்டுப்படுத்தும். தவிர, ஷேப்வேர்களையும் பயன்படுத்தலாம். இவையெல்லாம் உடலமைப்பை அழகாகக் காட்டுவதுடன் தொய்விலிருந்தும் காக்கும்.

உடைக்கான மெட்டீரியலைத் தேர்வு செய்யும்போது ரேயான், சிஃபான், ஜியார்ஜெட், க்ரேப் போன்றவற்றைத் தேர்வு செய்யுங்கள். இது அங்க அசைவுகளை வெளிப்படுத்தாமல் இருக்கும்.

பரிந்துரை: இந்த வாரம்...பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கான உடைகள்!

உங்கள் உடலின் ப்ளஸ், மைனஸ்களைச் சரியாகப் புரிந்துகொண்டால், மற்றவர்களைப் போலவே நீங்களும் அனைத்து வகையான உடைகளையும் அணியலாம். உதாரணமாக, இடுப்புப்பகுதி பெரிதாக இருப்பவர்கள் ஸ்கர்ட், ஜீன்ஸ், லெகிங்ஸ், பலாசோ என எது அணிந்தாலும் மேலாடையை சற்று லூஸாகவும், நீளமாகவும் அணிந்துகொள்ளலாம். அனார்கலி உங்களுக்குப் பொருத்தமான ஓர் உடை.

உடலின் மேல்பாகம் பெரிதாக இருப்பவர்கள் ஷார்ட் ஸ்லீவ் மற்றும் ஸ்லீவ்லெஸ் உடைகளைத் தவிர்க்கவும். ஃபுல் ஹேண்டு, த்ரீ ஃபோர்த், எல்போ ஸ்லீவ் போன்றவை உங்களை ஸ்லிம்மாகக் காட்டும்.

ஃப்ளோரல் மற்றும் பிரின்ட்டட் டிசைன்களைத் தவிர்த்து, டார்க், ப்ளெய்ன் உடை களாகத் தேர்ந்தெ டுங்கள். சல்வாரைப் பொறுத்தவரை, டாப் மற்றும் பாட்டம் இரண்டையும் ஒரே நிறத்தில் தேர்வு செய்து, துப்பட்டாவை கான்ட்ராஸ்டாகப் போடலாம். இது உங்களை ஒல்லியாக மட்டுமல்லாமல் உயரமாகவும் காட்டும்.

சிலருக்கு உடல் பருமனாக இருந்தாலும் கைகள், கால்கள் எனச் சில பகுதிகள் மெலிதாக இருக்கும். அதற்கு ஏற்றவாறு விதவிதமான டிசைனர் ஸ்லீவ் வைத்துத் தைத்த உடைகள், ஸ்கின்னி பேன்ட் என உங்களுடைய ப்ளஸ் பாயின்ட்களை ஹைலைட் செய்யும் விதமாக உடைகளை அணியும்போது மைனஸ்கள் மறைக்கப்படும்.

அனைத்துக்கும் மேலாக, நாம் எப்படி இருக்கிறோம் என்பதில் நமக்கான தன்னம்பிக்கையை முன்னிலைப்படுவது மிக மிக அவசியம்.

ஆண்கள் ஏரியா!

பேன்டுக்குள் சட்டையைத் திணித்து, இறுக்கமாக பெல்ட் அணியும் பழக்கமுள்ள பருமனான இந்திய ஆண்கள், உடல்பருமனைச் சமாளிக்க பெண்களைப் போல ஆடைகளில் நிறைய விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. இவர்களுக்கான எளிய தீர்வு, பிளேசர், கோட் போன்ற ஜாக்கெட் வகைகள். தற்போது இது வழக்கமான உடையாக மாறிவருகிறது.

ஜாக்கெட் அணிய முடியாத பட்சத்தில் சட்டையை டக் இன் செய்யாமல், லூஸான முழுக்கைச் சட்டையை அணியலாம்.

டக் இன் செய்ய வேண்டிய அவசியம் இருப்பின் பெல்ட்டின் பக்கிள் பெரிதாகவோ ஃபேன்ஸியாகவோ இல்லாமல் சிம்பிளாக இருப்பது அவசியம். அதேபோல் பட்டையாக இல்லாமல் சற்று மெல்லிய பெல்ட்டை அணியவும்.

பருமனான ஆண்கள் குர்தா - பைஜாமா, ஜீன்ஸ் - லூஸ் டி ஷர்ட் போன்ற உடைகளை அணியும்போது பார்ப்பவர்களை ‘டயட்டா?’, ‘எடை குறைச்சுட்டீங்களா?’ எனக் கேட்க வைக்கலாம்.