Published:Updated:

Doctor Vikatan: உடலின் பல பகுதிகளில் அரிப்பு ; மற்ற இடங்களுக்கும் பரவும் அவதி; நிரந்தர தீர்வு என்ன?

Skin Care
News
Skin Care

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: உடலின் பல பகுதிகளில் அரிப்பு ; மற்ற இடங்களுக்கும் பரவும் அவதி; நிரந்தர தீர்வு என்ன?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Skin Care
News
Skin Care

எனக்குத் தொடை மற்றும் இடுப்புப் பகுதிகளில் அரிப்பு இருக்கிறது. சரும மருத்துவரை அணுகியபோது இதை morphoea என்றொரு பிரச்னை என்று சொல்லி ஆயின்மென்ட் கொடுத்தார். அதை உபயோகிக்கும்போது அரிப்பு குறைகிறது. ஆனால், பக்கத்திலுள்ள பகுதிகளுக்கு அரிப்பு பரவுகிறது. ஓரிடத்தில் ஒருவாரம் வரை அரிப்பு தொடர்கிறது. இந்தப் பிரச்னை எனக்கு கடந்த 4 வருடங்களாக இருக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு ஏதும் உண்டா?

Murugan Manickam விகடன் இணையத்திலிருந்து

மருத்துவர் செல்வி ராஜேந்திரன்
மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

மார்பியா (morphoea) என்பது அரிதான ஆட்டோ இம்யூன் பாதிப்பு. இதை உறுதிசெய்ய சருமத்தை பயாப்சி செய்து பார்க்க வேண்டியிருக்கும். இந்தப் பிரச்னை சருமத்தை மட்டுமன்றி, திசுக்கள், சில நேரங்களில் எலும்புகளைக்கூட பாதிக்கும். இது பல ஆண்டுகள்வரை கூட நீடிக்கலாம். பிறகு, தானாக சரியாகிவிடும். ஆனாலும், இது தழும்புகள் அல்லது சருமத்தில் நிற மாற்றத்தை ஏற்படுத்திவிடும். மார்பியா பிரச்னை மீண்டும் திரும்பவும் வாய்ப்புகள் உண்டு.

மார்பியா பாதிப்பால் வயிற்றுப் பகுதி, நெஞ்சு மற்றும் முதுகுப் பகுதிகளில் உள்ள சருமத்தில் நிறமாற்றம் ஏற்படும். சில நேரங்களில் முகம், கை, கால்களிலும் இப்படி ஏற்படலாம். பெரும்பாலும் இந்த பாதிப்பு சருமத்தின் வெளிப்புற லேயர்களையே பாதிக்கும்.

அரிப்பு
அரிப்பு
Photo by Kristina Nor

அரிதாக திசுக்களின் ஆழம்வரை பாதித்து அதன் விளைவாக மூட்டு இணைப்புகளின் அசைவும் பாதிக்கப்படலாம். இந்தப் பிரச்னையானது ஒரு கட்டத்தில் தானாகவே சரியாகும். அதுவரை சருமத்தில் ஏற்பட்ட நிற மாற்றம் மற்றும் தடிப்பு போன்றவற்றுக்கு சிகிச்சைகள் எடுக்கலாம். ஆனால், உங்கள் விஷயத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் மார்பியா பாதிப்புக்கானவை போன்று தெரியவில்லை. ஏனெனில், மார்பியா பாதிப்பில் அரிப்போ, அது பரவும் தன்மையோ இருக்காது.

எனவே, நீங்கள் மீண்டும் சரும மருத்துவரை அணுகி தெளிவான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளைப் பின்பற்றுவதுதான் சரியானது.