Published:Updated:

முதியோரின் நிலை நேற்று... இன்று... நாளை? |முதுமை எனும் பூங்காற்று #MyVikatan

Dr V S Natarajan
News
Dr V S Natarajan

அன்று குடும்ப மருத்துவர் முறை நன்றாகவே இருந்தது. தேவைப்படும் போது அவசர சிகிச்சைக்கு அவரே நோயாளியின் வீட்டிற்குச் சென்று தக்க சிகிச்சையளிப்பார். மருத்துவரை தங்களின் குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினராக எண்ணி, வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அவரை அழைப்பார்கள்.

முதியோரின் நிலை நேற்று... இன்று... நாளை? |முதுமை எனும் பூங்காற்று #MyVikatan

அன்று குடும்ப மருத்துவர் முறை நன்றாகவே இருந்தது. தேவைப்படும் போது அவசர சிகிச்சைக்கு அவரே நோயாளியின் வீட்டிற்குச் சென்று தக்க சிகிச்சையளிப்பார். மருத்துவரை தங்களின் குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினராக எண்ணி, வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அவரை அழைப்பார்கள்.

Published:Updated:
Dr V S Natarajan
News
Dr V S Natarajan

இந்தியா வேகமாக முதுமையடைந்து வருகிறது. இதைப்பற்றி அதிகம் கவலைப்படுபவர்கள் முதியவர்களே அன்றி வேறுயாரும் கிடையாது! இப்படி முதுமையடைந்து வருபவர்களின் நிலை சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது? தற்பொழுது முதியவர்களின் நிலை என்ன? இன்னும் 25 ஆண்டுகளுக்குப் பின்பு அவர்கள் நிலை எப்படி இருக்கும்?

நேற்று

இந்தியாவிலேயே முதன் முதலாக முதியோர் மருத்துவத்துறையை சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் 1978 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தனியாக முதியவர்களை எனது கிளினிக்கிலும் பார்க்க ஆரம்பித்து விட்டேன். அப்பொழுதே எனது பெயர் பலகையில் ‘முதியோர் நல மருத்துவர்’ என்றே எழுதி, மருத்துவ ஆலோசனையைத் தொடங்கினேன். ஆனால், முதுமையை ஏற்றுக்கொள்ளப்படாத காலம் அது. ஆகையால் முதியவர்கள் என்னிடம் ஆலோசனை பெறத் தயங்கி தயங்கித்தான் வந்தார்கள். அக்காலகட்டத்தில் முதியோர் மருத்துவம் என்பது பல முதியவர்களுக்கு மட்டுமின்றி மருத்துவர்களுக்கும் கூட அதிகம் தெரியாத ஒரு துறையாக இருந்தது. அதனால் முதியவர்கள் குறைவாகவே எனது கிளினிக்குக்கு வந்தார்கள். அப்பொழுது முதியவர்கள் நிலை எப்படி இருந்தது? முதியவர்களின் வயது 60 அல்லது 65க்கு மேல் அதிகம் இருக்காது. முடிந்தவரை கூடவே மகன், மருமகள், பேரன், பேத்திகள் என்று ஒரு படையே சூழந்துவரும். நோயுற்ற முதியவரின் உடல்நலத்தில் தீவிர அக்கறை காட்டி எப்படியாவது பெரியவரின் நோயை குணப்படுத்தி விடவேண்டும் என்று என்னிடம் மன்றாடி கேட்டுக் கொள்வார்கள்.

அக்கால கட்டத்தில் மலேரியா, டைப்பாய்டு, சீதப்பேதி, சிரங்கு, அம்மை போன்ற தொற்று நோய்களே அதிகமாக இருந்தன. தொற்று இல்லாத நோய்களான நீரிழிவு நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம், உடற்பருமன், பார்க்கின்சன்ஸ் நோய், மறதி நோய் மற்றும் புற்று நோய் போன்ற நோய்கள் அதிகமில்லாத காலம்.

நிமோனியா மற்றும் இன்ஃபுயூயன்சா போன்ற தடுப்பூசி இல்லாத காலம். மேலும் அதற்கு ஏற்ப கிருமி நாசினியும் அவ்வளவாக இல்லாத காலம். அக்காலக் கட்டத்தில் மருத்துவவசதி அதிகமாக முன்னேற்றம் அடையாததால் முதியவர்கள் பலர் தக்க சிகிச்சையின்றி இறந்திடும் அவல நிலையிருந்தது. உதாரணம்: மாரடைப்பு நோய்க்கு அறுவை சிகிச்சை முறை, எலும்பு முறிவுக்கேற்ற புதிய நவீன சிகிச்சை, இரத்த வாந்தி, சிறுநீரகக் கோளாறு, ஈரல் செயலிழத்தல், தொற்றுநோய்க்கு உண்டான நுண்ணுயிர் கொல்லி மருந்து, புற்று நோய்க்குண்டான தக்க சிகிச்சை.

அன்று குடும்ப மருத்துவர் முறை நன்றாகவே இருந்தது. தேவைப்படும் போது அவசர சிகிச்சைக்கு அவரே நோயாளியின் வீட்டிற்குச் சென்று தக்க சிகிச்சையளிப்பார். மருத்துவரை தங்களின் குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினராக எண்ணி, வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அவருக்கும் அழைப்பிதழை தவறாமல் அனுப்புவார்கள்.

மேற்கண்ட மருத்துவ வசதிகள் அக்காலத்தில் சரியாக இல்லாததால் முதியவர் பலர் தக்க சிகிச்சை இன்றி மடிய நேரிட்டது. ஆகையால் இளைஞர்களின் எண்ணிக்கையே சமுதாயத்தில் அதிகமாக இருந்தது! மேலும் கூட்டுக்குடும்பம் நிலையாக இருந்த காலம் அது. முதியவர்களின் மருத்துவப் பிரச்சனைக்கு போதிய அளவு தீர்வு இல்லாமல் இருந்தாலும், இளைய தலைமுறையினரின் அன்பு பிணைப்பால் குடும்ப பிரச்னைகள் அதிகமாகக் காணப்படாத பொற்காலம் அது!

Dr V S Natarajan
Dr V S Natarajan
40 ஆண்டுகளாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் உள்ள முதியோர் நலப் பிரிவு, 30 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவாக நன்றாக செயல்பட்டு வருகிறது. அதே வார்டில் தீவிர சிகிச்சைப் பிரிவும் உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்று

சுமார் 40 ஆண்டுகளாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் உள்ள முதியோர் நலப் பிரிவு, 30 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவாக நன்றாக செயல்பட்டு வருகிறது. அதே வார்டில் தீவிர சிகிச்சைப் பிரிவும் உள்ளது. ஆரம்பத்தில் வருடத்திற்கு இரண்டு மாணவர்கள் மட்டும், பட்ட மேற்படிப்பாக இந்திய மருத்துவக் கழகம் அனுமதி அளித்திருந்தது (M.D. Geriatrics). தற்பொழுது ஆண்டுதோறும் 9 மாணவர்கள் பயிற்சி பெற அனுமதி அளித்துள்ளது. இதனால் இத்துறையில் பட்ட மேற்படிப்பை படித்த மருத்துவர்கள் அதிகம் பேர் உள்ளார்கள். தமிழக அரசு எல்லா மாவட்டங்களிலும் முதியோர் நல மருத்துவத் துறையை ஆரம்பித்துள்ளது. இத்துறையிலுள்ள பட்ட மேற்படிப்பு மாணவர்களை மாவட்ட அளவில் இத்துறையை கவனிக்கும் பொறுப்பை ஓப்படைக்கலாம்.

சென்னையில் தேசிய முதியோர் நல மையம் கிண்டியில் அமைந்துள்ளது. முறைப்படி ஆரம்பிக்க இருக்கும் நிலையில், தற்பொழுது மிகவும் அவசரமாக தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு அந்த மையம் 07-07-2020 அன்று திறந்து வைக்கப்பட்டது. இம்மையம் 127 கோடி செலவில் 200 படுக்கைகள் கொண்ட முதியோர் நல மருத்துவ மையமாக செயல்படுமாறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது அது கொரோனா மருத்துவ சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது.

‘முதியோர் மருத்துவ சங்கங்கள்’ மாநில மற்றும் தேசிய அளவில் தோன்ற ஆரம்பித்துவிட்டன. ‘முதியோர் நல மன்றங்கள்’ ஊருக்கு பல என முதியோர் நலம் காக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அடிக்கடி கருத்தரங்கம் மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்தி, முதியவர்கள் குறை தீர்க்க மத்திய அரசையும், மாநில அரசையும் வலியுறுத்தி வருகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
முதியவர்களைப் பொறுத்த வரை மருத்துவத் துறையில் அவர்களுக்கு இது ஒரு நல்ல காலம். ஆனால், குடும்பம் மற்றும் உறவு முறைகளை பொறுத்தவரையில் இக்காலம் உகந்ததாக இல்லை.

மனிதன் வாழும் நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க இன்று அவர்களின் பிரச்சனைகளும் அதிகரிக்கின்றன. அதாவது பல முதியவர்கள் வயதான காலத்தில் பல குறைபாடுகளை (Disability) சந்திக்க நேரிடுகிறது. உதாரணம்: கண்பார்வை குறைதல், காது கேளாமை, மூட்டு வலி, பக்கவாதம், உதறுவாதம், அறிவுத்திறன் வீழ்ச்சி.

தனியாக வசிக்கும் முதியோரின் பிரச்னைகள் சற்று வித்தியாசமானது. அவர்களின் உடைமைக்கும் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. முதியவர்கள் இந்த பயத்திலேயே தங்கள் வாழும் நாட்களை கழிக்கிறார்கள்.

அடுத்து உணவு பிரச்னை, சமையலுக்கு ஆள் இல்லாத நிலையில் முதியவர்களுக்கு ஓட்டல் தான் ஒரு அன்னலட்சுமி. ஓட்டல் சாப்பாடு விலையோ விஷம் போல் ஏறுகிறது. உடலுக்கும் ஒத்துக்கொள்ளாது என்று தெரியும். சிலர் வியபார நோக்கத்தோடு முதியவர்கள் வீட்டிற்கே சென்று உணவை அளித்து வருகிறார்கள் (Meals on Wheels).

முதியோர் இல்லங்கள் புற்றீசல்கள் போல் பெருகிவிட்டன. முதியோர்கள் தன் கடைசி காலகட்டத்தில் எங்கே எவரிடம் தஞ்சம் புகுவது என்ற பயத்துடனேயே வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இதை ஓரளவுக்கு சமாளிக்க பல முதியவர்கள் ஒன்றாக இணைந்து அவர்களுக்கு என்று தனியாக குடியிருப்புகளை (Commune) ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரளவு மன நிம்மதியையும் பாதுகாப்பையும் அளிக்கிறது. முதியவர்களைப் பொறுத்த வரை மருத்துவத் துறையில் அவர்களுக்கு இது ஒரு நல்ல காலம். ஆனால், குடும்பம் மற்றும் உறவு முறைகளை பொறுத்தவரையில் இக்காலம் உகந்ததாக இல்லை.

Senior citizens
Senior citizens
Woman photo created by freepik - www.freepik.com
திருமணம் ஆகாத முதியவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்த முதியவர்கள் (60 வயதுக்கு மேல்) என முதியோர் திருமணங்கள் அதிகம் நடைபெறக்கூடும்.

நாளை

இன்னும் 25 ஆண்டுகளுக்கு பின்பு நம் நாட்டிலுள்ள முதியவர்களின் நிலை எப்படி இருக்கும்? ஒரு கற்பனைக் (சிறிது உண்மையும் கலந்த) கண்ணோட்டம்.

முதியவர்களின் வாழும் நாட்கள் அதிகரிப்பதால் 90, 100 வயதுள்ள மக்களையே அதிகம் காணலாம். மருத்துவ முன்னேற்றம் இன்னமும் தீவிரமாக இருக்கும். உதாரணம்: ஆர்மோன் சிகிச்சை, ஜீன் சிகிச்சை, மூல உயிரணு சிகிச்சை (Stem Cell). இச்சிகிச்சை முறைகளால் பல நோய்களை குணப்படுத்தி முதுமையை வெல்லும் ஒரு காலமும் வரலாம்!

எங்கு பார்ப்பினும் சமுதாயத்தில் முதியவர்களே அதிகம் இருப்பார்கள். இளைய தலைமுறை தேய்ந்து போய்க்கொண்டு இருக்கும். ஆகையால் முதியவரை பேணிக்காப்பது அரசாங்கத்தின் பொறுப்பாக மாறிவரும். இதற்காக அரசாங்கம் தன் வருமானத்தில் பெரும் தொகையை செலவிட வேண்டியிருக்கும். இதை சமாளிக்க அதிகமான வரிச்சுமையை இளைய சமுதாயத்தினரிடம் திணிக்கப்பட வேண்டியிருக்கும். மேலை நாடுகளைப் போல் முதியவர்கள் குடும்பப் பராமரிப்பை (Social Security) அரசாங்கம் ஏற்று நடத்த வேண்டிய ஒரு கட்டாயச் சூழ்நிலை வரலாம்.

திருமணம் ஆகாத முதியவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்த முதியவர்கள் (60 வயதுக்கு மேல்) தங்களின் பாதுகாப்புக்காக முதியோர் திருமணங்கள் அதிகம் நடைபெறக்கூடும்.

முதியோர் இல்லங்கள் நகர்ப்புறங்களிலின்றி ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மருத்துவமனை எந்தளவுக்கு அவசியமோ அந்தளவுக்கு முதியவர் இல்லங்களின் தேவையும் அதிகரிக்கும். இதை அரசாங்கம் அல்லது மற்ற தொண்டு நிறுவனங்கள் நடத்த வேண்டி இருக்கும்.

தற்பொழுது வெளிநாட்டில் வேலை பார்க்கும் இளையதலைமுறையினர் விரைவில் தாய்நாடு திரும்பும் காலம் வரும். ஆகையால் அம்மாக்களும், பாட்டிகளும் வெளிநாடு சென்று தன் பேரன், பேத்திகளை கவனித்துக் கொள்ளும் கட்டாய வேலைச் சுமையிருக்காது. அதற்கு மாறாக தாயகம் திரும்பும் இளைஞர்களின் குழந்தைகளை கவனித்துக் கொள்ள தங்களது பெற்றோர்கள் மற்றும் தாத்தா, பாட்டிகளின் உதவியை நாடி வரும் காலம் வரும். ஆகையால் மீண்டும் கூட்டுக் குடும்பம் மலர வாய்ப்புண்டு!

முதியவர்களின் ஆயுட்காலம் நீட்டிப்பதை எண்ணி மருத்துவ விஞ்ஞானிகள் வேண்டுமானால் தங்களின் சாதனையை எண்ணி தலை நிமிர்ந்து நடக்கலாம். ஆனால்...

நாட்டில் முதியோர் மருத்துவமனைகள்தான் அதிகம் காணப்படும். தனியார் துறையிலும், வியாபார ரீதியாக முதியவர்களுக்கென்று மருத்துவமனைகள் அதிகம் வர வாய்ப்புண்டு. குறைபாடுகள் உள்ள முதியவர்கள் அதிகரிப்பார்கள். அவர்களுக்கென்று தனியாக சிறப்பு ஆலோசனை மையமும், தொடர் சிகிச்சை மருத்துவமனையும் அதிகம் தேவைப்படும் நிலை உருவாகும்.

முதியோர் மருத்துவத்தில் சிறப்புப் பிரிவுகளும் அதிகம் தோன்றும். உதாரணம்: முதியோர் இருதய இயல் (Geriatric Cardiology), முதியோர் நரம்பியல் (Geriatric Neurology) மற்றும் முதியோர் மன இயல் (Geriatric Psychiatry).

குணப்படுத்த முடியாத அதிக நாள் வாழும் முதியோர்களை மற்றும் பல நோய்களினால் அவதியுறும் தனித்து வாழும் முதியவர்களை கருணைக் கொலை செய்ய சட்டம் (Mercy Killing) வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஆகையால், இன்னும் 25 ஆண்டுகளுக்குப் பின்பு முதியவர்களின் நிலை எப்படி இருக்கும்? மருத்துவ வசதி அதிகரிக்க அதிகரிக்க மருத்துவ சிகிச்சையுடன் கூடிய முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆகையால் நோய் ஒரு சுமையாக இருக்காது. அதே சமயத்தில் தங்களது சுயநலத்திற்காகவாவது முதியவர்களை தங்களுடனே வைத்து கொள்ளும் ஒரு ‘கட்டாய கூட்டுக் குடும்பம்’ வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இது வரவேற்புக்குரியதுதானே!

முதியவர்களின் ஆயுட்காலம் நீட்டிப்பதை எண்ணி மருத்துவ விஞ்ஞானிகள் வேண்டுமானால் தங்களின் சாதனையை எண்ணி தலை நிமிர்ந்து நடக்கலாம். ஆனால், நம் நாட்டின் பழமைக்கும் பெருமைக்கும் எடுத்துக்காட்டான கூட்டுக்குடும்பம் மற்றும் பெரியோரை மதித்தல் போன்ற நற்பண்புகள் சிதைந்து வருவதை எண்ணி நாம் வெட்கித் தலை குனிய வேண்டிய காலமாக அது இருக்கும்!

அரசியல்வாதிகளும், பொருளாதார நிபுணர்களும் மற்றும் இன்றைய இளைய தலைமுறையினரும் இதைப் பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன், முதியோர் நல மருத்துவர், டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, சென்னை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism