Published:Updated:

Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் வந்தவர்களிடம் அதிர்ச்சியான தகவல்களைப் பகிரக்கூடாதா?

ஹார்ட் அட்டாக்
News
ஹார்ட் அட்டாக்

பொதுவாக, ஹார்ட் அட்டாக் வராத சாதாரணமான நபர்களிடமே மிகவும் அதிர்ச்சிக்குள்ளான, உணர்ச்சிவசப்படக்கூடிய தகவல்களைப் பகிரும்போது, அவர்களுக்கு அதைத் தாங்க முடியாத நிலை ஏற்படலாம்.

Published:Updated:

Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் வந்தவர்களிடம் அதிர்ச்சியான தகவல்களைப் பகிரக்கூடாதா?

பொதுவாக, ஹார்ட் அட்டாக் வராத சாதாரணமான நபர்களிடமே மிகவும் அதிர்ச்சிக்குள்ளான, உணர்ச்சிவசப்படக்கூடிய தகவல்களைப் பகிரும்போது, அவர்களுக்கு அதைத் தாங்க முடியாத நிலை ஏற்படலாம்.

ஹார்ட் அட்டாக்
News
ஹார்ட் அட்டாக்

ஹார்ட் அட்டாக் வந்தவர்களிடம் அதிர்ச்சியான செய்திகளையோ, மிக சந்தோஷமான தகவல்களையோ சொல்லக்கூடாது; சொன்னால் அவர்களால் தாங்க முடியாது என்கிறார்களே... அது உண்மையா? அதிர்ச்சியான தகவலுக்கும் இதய ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு? ஒருமுறை அட்டாக் வந்தவர்களை எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும்?

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்
மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.

ஹார்ட் அட்டாக் வந்தவர்களிடம் அதிர்ச்சியான அல்லது அதிக மகிழ்ச்சியான தகவல்களைச் சொல்லக் கூடாது என்றெல்லாம் ஒன்றுமில்லை. பொதுவாக, சாதாரணமான நபர்களிடமே மிகவும் அதிர்ச்சிக்குள்ளான, உணர்ச்சிவசப்படக்கூடிய தகவல்களைப் பகிரும்போது, அவர்களுக்கு அதைத் தாங்க முடியாத நிலை ஏற்படலாம்.

Healthy Heart
Healthy Heart

இதை மருத்துவ அறிவியலில், `டாக்கோசுபோ கார்டியோமயோபதி' (Takotsubo Cardio Myopathy - TCM) என்று சொல்வோம். ஆனால், அது மிகமிக அரிதான நிகழ்வு.

மற்றபடி ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் அதிர்ச்சியான தகவல்களைக் கேள்விப்படவே கூடாது என்பதையெல்லாம் நம்ப வேண்டாம். ஸ்ட்ரெஸ் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரம் ஹார்ட் அட்டாக் வந்தவர்களும் மற்றவர்களைப் போலவே இயல்பான வாழ்க்கையை வாழலாம்.

ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். சரியான உணவுப்பழக்கம், உடலியக்கம், ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை போன்றவை அவசியம். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தவர்களுக்கும் இது பொருந்தும்.

Healthy
Healthy
Freepik

சரிவிகித உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, ஸ்ட்ரெஸ் தவிர்த்த வாழ்க்கை, புகை மற்றும் மதுப் பழக்கங்களைத் தவிர்த்தல், மருத்துவர் பரிந்துரைத்த சிகிச்சைகளை முறையாகப் பின்பற்றுவது போன்றவை மிக முக்கியம்.

அவர்கள் ஏற்கெனவே ரிஸ்க் பிரிவில் இருப்பதால் கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம். முதல் முறை வந்த ஹார்ட் அட்டாக் எவ்வளவு தீவிரமானது என்பதும் இதில் கவனிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப உங்கள் இதயநோய் மருத்துவர் ஆலோசனைகளை வழங்குவார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.