Published:Updated:

Doctor Vikatan: 54 வயதில் தாம்பத்திய உறவின்போது பாதுகாப்பாக இருக்க வேண்டுமா?

Couple
News
Couple ( Photo by Womanizer Toys on Unsplash )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: 54 வயதில் தாம்பத்திய உறவின்போது பாதுகாப்பாக இருக்க வேண்டுமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Couple
News
Couple ( Photo by Womanizer Toys on Unsplash )

என் வயது 54. இந்த வயதுக்குப் பிறகும் தாம்பத்திய உறவின் போது நான் பாதுகாப்பாக இருக்க வேண்டுமா? கருத்தடை முறையைப் பின்பற்ற வேண்டுமா?

- சுப்பு (விகடன் இணையத்திலிருந்து)

ஹெப்ஸிபா கிருபாமணி.
ஹெப்ஸிபா கிருபாமணி.

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பேராசிரியரும் மகப்பேறு மருத்துவருமான ஹெப்ஸிபா கிருபாமணி.

``பொதுவாக பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் கருத்தரிக்கும் வாய்ப்பானது வெறும் 5 சதவிகிதம்தான் இருக்கும். இந்தியப் பெண்களுக்கு சராசரியாக 46.5 வயதில் பெரும்பாலும் மாதவிடாய் நின்றுவிடுகிறது. உங்கள் விஷயத்தில் நீங்கள் மெனோபாஸை அடைந்துவிட்டீர்களா என்ற விவரம் இல்லை. இந்த வயதில் பெரும்பாலான பெண்கள் மெனோபாஸ் நிலையை அடைந்திருப்பார்கள்.

12 மாத காலத்துக்கு, அதாவது தொடர்ந்து ஒரு வருடத்துக்கு மாதவிடாய் வரவில்லை என்றால் அதை மெனோபாஸ் என்று உறுதிபடுத்திக்கொள்ளலாம்.

Couple (Representational Image
Couple (Representational Image
Image by Free-Photos from Pixabay

மெனோபாஸ் ஆன பிறகு கருத்தரிக்க வாய்ப்பில்லை. எனவே அந்த நிலையில் தாம்பத்திய உறவின்போது பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியமும் இருக்காது."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?